Thursday, August 1, 2019

குறுந்தொகை குறிஞ்சித்திணை 52 வது பாடல்


பாடல் காட்சி   “வரைவுமலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, ‘முன்னாளின் அறத்தொடு (பி-ம். முன்னாளில் தான் அறத்தொடு) நின்றமை காரணத்தான் இது விளைந்ததுஎன்பதுபடக் கூறியது  -  

 தலைவன் மணந்து   கொள்ளுதற்குரிய முயற்சிகளைச் செய்வதையும் அதனைத் தன் வீட்டார்  ஏற்றுக் கொண்டதையும் அறிந்து மகிழ்ந்த தலைவியை நோக்கி,

“நீ வருந்துவதை யறிந்த நான்  உன் காதலை தாயாருக்கு அறிவித்தேன்; அதனால் இந்த  திருமண ஏற்பாடு நடக்கிறது என்று  சொல்வதாக பாடல் இருக்கிறது

இப்படலை எழுதியவர் : பனம்பாரனார்,

இரண்டு பனம்பாரனார் இருக்கிறார்கள் , முதலாமானவர்  தொல்காப்பியத்திற்கு பாயிரம் - முன்னுரை எழுதியவர் .
 இரண்டாவது இவர் .
இந்தப் பாட்டை மட்டும்தான்   எழுதி இருக்கிறார் . பனம் பாறை என்பது
ஊரின் பெயராக சொல்லப்படுகிறது .

பாவகை : நேரிசை ஆசிரியப்பா .  ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று ஈற்று அயலடி (இறுதி அடிக்கு முந்தைய அடி) 3 சீர்களாகவும் (சிந்தடி), ஏனைய அடிகள் 4 சீர்களாகவும் (அளவடி) வருவது

விளக்கம்

ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற் 
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே 
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல் 
நிரந்திலங்கு வெண்பன் மடந்தை
பரிந்தனெ னல்லனோ விறையிறை யானே

    

    



“ஆர்களிறு மிதித்த நீர்திகழ் ,”
சிலம்பிற்
சூர்  நசைந்தனையை யாய், “
 நடுங்கல் கண்டே “
 “நரந்த நாறுங் ,
 குவையிருங் கூந்தல்  “

“நிரந்திலங்கு
வெண்பன்
மடந்தை  “

“பரிந்தனென்
அல்லனோ
இறை இறை யானே. “

ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில்
சூர் நசைந்தனையை யாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறும் குவை இருங்கூந்தல்
நிரந்து இலங்கு வெண் பல் மடந்தை
பரிந்தனென் அல்லனோ இறை இறை யானே.



இந்த பாட்டோட மூணாவது வரில இருந்து விளக்கம் பார்க்க ஆரம்பிக்கலாம்

நரந்தம் நாறும் - நரந்தப்பூவின் மணம் கமழ்கின்ற,  நார்த்தங்காய் ஊறுகாயா  நமக்கு இப்ப தெரிகிற   நார்த்தம் மரத்தோட பூவின் வாசனை உடைய
குவை இரு கூந்தல் -தொகுதியாகிய கரிய கூந்தலையும்  -கூந்தலை இரண்டு தொகுதியாக தலைவி போட்டிருக்காங்கனு   பொருள் வருது , இரட்டை சடையா  இல்லை கொண்டையானு  தெரியலை

நிரந்து இலங்கு வெள் பல் - வரிசையுற்று விளங்கும் வெள்ளிய பல்லையுமுடைய, மடந்தை   , தலைவி  மடந்தை 14  வயதில் இருந்து 18  வரை உடைய பெண் அப்படினு தெரியுது

1 வயது முதல் 8 வயது வரை – பேதை
* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை-
 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை14-18,
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை-19-24
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை-25-29,
*30  வயதில் இருந்து பேரிளம்பெண்

இப்படி தலைவியை பத்தி சொல்லிட்டு , 

தலைவனோட நாட்டின் வளமையை பற்றி  சொல்றப்ப

ஆர்களிறு மிதித்த நீர்திகழ் -  தன்னிடம் உள்ள  யானைகள் மிதித்தமையால் உண்டாகிய பள்ளத்தில் தங்கிய நீரை உடைய மலை ,  யானை  மிதித்ததால பள்ளம் ஆகுது , அந்த பள்ளத்துள்ள தண்ணி தேங்கி நிற்குது , அப்படினா  அந்த மலையோட இயற்கை வளம் எப்படி இருக்குது பாருங்க 

அடுத்து  ,அந்த தலைவி என்ன பண்ணினதா  சொல்றாங்க

சிலம்பிற் - மலைப்   பக்கத்திலுள்ள
சூர் நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே    -   இரண்டு  விதமான விளக்கம் இருக்கிறது
தெய்வத்தால் விரும்பப் பெற்றாளைப் போன்றவளாகி, நடுங்கல் கண்டு - நீ நம் கற்புக்கு ஏதம் வருமோவென்று அஞ்சி நடுங்குதலையறிந்து


பரிந்தனென் அல்லனோ இறை இறை யானே

யான் - நின் வருத்தத்தைப் பொறாத யான் 

இறை இறை - சிறிது சிறிதாக


பரிந்தனென் அல்லனோ  -

 உன் நிலையை கண்டு இரங்கி வருந்தினேன் அல்லவா ?  அதனால உன்  

தாய்கிட்ட சொல்லி இந்த  கல்யாண ஏற்பாட்டை பண்ணினேன்னு 

சொல்றதுதான் இந்தப் பாடல்

மறுபடியும் பாடல்


“ஆர்களிறு மிதித்த நீர்திகழ் ,”
சிலம்பிற்
சூர்  நசைந்தனையை யாய், “
 நடுங்கல் கண்டே “
 “நரந்த நாறுங் ,
 குவையிருங் கூந்தல்  “

“நிரந்திலங்கு
வெண்பன்
மடந்தை  “

“பரிந்தனென்
அல்லனோ
இறை இறை யானே. “


No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...