Saturday, May 19, 2018

நம்பிக்கை மனிதர்கள் 4 - ஈரோடு தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன் -Erode Tamizhanban, 

ஈரோடு மாவட்டத்தில் பிறந்த இவர் மரபுக் கவிதையில் தொடங்கி   புதுக்கவிதைக்கு வந்த தமிழ்ப் பேராசிரியர்.தனிப்பாடல் திரட்டு ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றவர் .சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனையாளர்.கதை , கவிதை , கட்டுரை , பாடல் , ஓவியம் என அனைத்து துறைகளிலும் படைப்புகளை கொண்ட பன்முகப்பட்ட ஆளுமை .திராவிடக் கருத்தியலை வரித்துக்கொண்டவர்.

 சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார் .செய்திகள் முடிவடைந்தன என்பதை மாற்றி, ‘செய்திகள் நிறைவடைந்தன’ எனச் சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்தி நிறைவுக்கும் ,முடிவுக்கும் உள்ள வித்தியாசத்தை கற்பித்தவர் .

பாரதிதாசனின் மேல் உள்ள பற்றினால் கவிதைக்கு வந்த இவர் , அறுபதுக்கும் மேலான நூல்களை எழுதியுள்ளார் . 

ஆங்கிலத்தில் ஐந்து அடிகளில், யாப்பு முறையில் செய்யப்பட்ட கவிதையை லிமெரிக் என்று அழைப்பர். அதுபோல மூன்றடியில் உள்ள ஜப்பானிய   கவிதை முறை ஹைக்கூ . இது இரண்டையும் சேர்த்த கவிதை  முறை "லிமரைக்கூ" . இந்த கவிதை முறையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் தமிழன்பன் அவர்கள் .  

ஒரு வண்டி சென்ரியு’ - என்னும் கவிதை தொகுப்பின் மூலம் ஜப்பானிய கவிதை வடிவமான  "சென்ரியு " வை 
தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்  . நாட்டுநடப்பையும் , அரசியிலையும் , போலி பக்தியையும்   தன் கவிதைகள் மூலம் நையாண்டி செய்கிறார் .நாட்டுநடப்பை   சொல்லும் இந்தக்  கவிதையை பாருங்கள்  

"புகை பிடித்தால் இறப்பாய்
மது குடித்தால் இறப்பாய் இரண்டும்
விற்றால் வாழ்வில் சிறப்பாய். "

 குழந்தைகளையும் , பொம்மைகளையும் பாடு  பொருளாக கொண்டு குறும்பாக்கள்  படைத்திருக்கும்  அரிய கவிஞர் திரு தமிழன்பன் அவர்கள்  . எடுத்துக்காட்டாக ஒன்று 

" குழந்தைக்கு ஒரு பொம்மை பிடிக்கும்
உள்ள பொம்மை அத்தனையும் குழந்தை
கைக்குப் போகத் துடிக்கும் !  "

தனது தலைமையிலான கவியரங்குகளில் இளம் தலைமுறை காவிரியை ஊக்குவிக்கும் தமிழன்பன் அவர்கள்  , உலகின் பல  பகுதிகளில் நிலவிவரும் கவிதைக் கோட்பாடுகளை அறிந்து வைத்திருக்கும் தகவல் களஞ்சியம் . இவரது கவிதைகளின்  உத்தி  தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் பாடமாக ஆராயப்பட்டுள்ளது .

வணக்கம் வள்ளுவ’ என்ற கவிதை நூலுக்கு  ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றிருக்கிறார்.  தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கும் இவர் , தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக்   குழு உறுப்பினராகவும் உள்ளார் . 

இவரது பேச்சுக்களின் காணொளிகள் சில :

நம்பிக்கை மனிதர்கள் 3 - அ. அருள்மொழி!!!

அ. அருள்மொழி  - A . Arulmozhi 

சேலத்தில் பிறந்த இவர்  , திராவிட இயக்கத்தில் பற்று கொண்ட , தமிழ் புலவரான  தன் தந்தையால்  தமிழ்  பற்றுடன், திராவிடப்  பாரம்பரியத்தையும் கற்று  வளர்ந்தவர் . மிகச்சிறு வயதிலேயே மேடைகளில் பேச்சாளராக தொடங்கிய இவர்    பெண்கள் எனில் பக்தி , சினிமா , அழகு  என்று இருந்த  பிம்பத்தை உடைத்து   பகுத்தறிவு , நாத்திகம் ,  பெண்ணியம் , கடவுள் மறுப்பு , ஜாதி மறுப்பு  என்று  மாறுபட்ட தளங்களில்  தவிர்க்க முடியாத தாக்கத்தை  ஏற்படுத்திக்கொண்டிருப்பவர் .  

தனது கல்லூரி  காலத்தில் இருந்து போராட்டக்களத்தில் இருக்கும் இவர் உயர் நீதிமன்ற  வழக்கறிஞர்  ,  திராவிடர் கழக பிரசாரச் செயலாளர் .  சமூக ஆர்வலர் , ஈழப்பிரச்சனை பற்றி  தொடர்ந்து  மேடைகளில் , பொதுக்கூட்டங்களில்  குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர்  . பெண்களின் உரிமைக்காகவும் , பெண்கள் மீதான அடக்குமுறைக்கும் தொடர்ந்து போராடும் சமூகப் போராளி . 

சமூக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு தயங்காமல் தன் கருத்துக்களை முன் வைப்பவர் , பெண்ணியம் சார்ந்த  பயிற்சிப் பட்டறைகளில் கருத்தாளராக தொடர்ந்து செயலாற்றும் இவர் , தொழில்  முறையாக சென்னை  உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக  கடந்த இருவத்தியெட்டு ஆண்டுகளாக அரசியில் அமைப்புச் சட்டம் , சிவில் வழக்குகள் , திருமண சார்ந்த வழக்குகள் போன்றவற்றில் வாதாடி வருபவர் .

 நினைவாற்றலுடன் சரளமாக அழகு தமிழில் பேசுவது , தீர்க்கமான வாதங்களை முன் வைக்கும் போதும் அதில் இழையோடும் நகைச்சுவை ,  ரசனை ,   அலங்காரப் பேச்சுகளாய் இல்லாமல்    முரண்பாடு இல்லாத, சொல்லுக்கும், செயலுக்கும் வித்தியாசம் இல்லாத   மக்களுக்கு புரியும் படி எளிமையான பாணியாக  இருப்பது  இவரது பேச்சுக்களின் சிறப்பம்சம் .

பள்ளி வயதில் இருந்தே பேச்சுப்போட்டிகளில் நூற்றுக்கணக்கான பரிசுகளை பெற்றவர் , தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்றவர் . பாரதிதாசனின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு  உள்ள இவர் இலக்கிய மேடைகளில் தவறாமல் இடம்பெறும் இலக்கிய ஆளுமை .

இவரது பேச்சுக்களின் காணொளிகள் சில :



நம்பிக்கை மனிதர்கள் 2 -நா மம்மது

நா . மம்மது. -

இயல் , இசை, நாடகம்  என முத்தமிழில் தமிழ் இசை என்பது அருகி வரும் இன்றைய சூழலில் , தமிழிசை வரலாற்றை   ஏழு ஆண்டுகளாய்ஆய்வு செய்து தமிழிசைப் பேரகராதியை  உருவாக்கியவர் .தமிழறிஞர் நா . மம்மது.   

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த இவர்  தமிழிசை  பற்றி நூற்றுக்கும் மேலான ஆய்வுக்கட்டுரைகளையும் 
 வெளியிட்டுள்ளார் .  இயற்றமிழ் , இசைத்தமிழ் என  இரண்டு துறைகளிலும்  மிகுந்த  புலமை பெற்றவர் மம்மது அவர்கள் .

2005 டெக்ஸாஸில் நடைபெற்ற  வடஅமெரிக்கத் தமிழ் சங்க பேரவை விழாவில் . தமிழிசை பேரகராதியின்  கரு உருவானது   இந்த  அகராதியில் 5000 இசைச் சொற்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  

இந்த பேரகராதியில் , சொற்களுக்கு விளக்கம் தருவது என்று மட்டும் இல்லாமல் , தமிழின் பழமையான நூல்களில் இருந்து தமிழ் இசை எவ்வாறு பிறந்து வளர்ந்தது என்பதை தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், சிந்தாமணி, பெருங்கதை போன்ற நூல்களில் இருந்து    மேற்கோள் காட்டி நிறுவுகிறார் .

இவரது  சொல்லாடல் பெரும் வியப்புக்கு   உரியது . ஓசைகளில்   இருந்து ராகம் வருகிறது என்பதை  இவர் ராகபுடம்  என்ற சொல்லாகவும் ,  ஆலாபனை என்பதை பண் ஆளத்தி என்றும் , Harmonical Notes or Chords - என்பதை பொருந்து சுவரக் காட்டங்கள் என்றும் நுடபமான  வார்த்தைகளை கையாள்கிறார் .

தமிழின் செம்மொழி சிறப்பான ஒரு  சொல் பல பொருள்கள் தருவதை தனது கட்டுரைகளின் மூலம் விரிவாக ஆராய்ந்து எடுத்துரைத்திருக்கிறார் . "நம் இசை முறையாக வரும் முறை "’ என்ற கட்டுரையில் "முறை "  
 என்னும் சொல்லுக்கு 22ற்கும்  மேற்பட்ட  பொருளை சொல்கிறார் ."தொல்காப்பிய இசை" என்ற கட்டுரையில்  :பண்" - என்னும் சொல்லுக்கு வேர்ச்சொல்லையும்  அதில் இருந்து உருவான 21 சொற்களுக்கும் மேல் பதிவு செய்துள்ளார் .

தமிழிசைப் பேரகராதி,ஆபிரகாம் பண்டிதர், தமிழிசை வேர்கள்,தமிழிசைத் தளிர்கள்,இழையிழையாய் இசைத் தமிழாய்,ஆதி இசையின் அதிர்வுகள்,தமிழிசை வரலாறு என தமிழ் இசை தொடர்பான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார் . 

இவர் பெற்ற விருதுகளில் சில -தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் பெரியார் விருது, தமிழக அரசின் பாரதியார் விருது ,முத்துத்தாண்டவர் தமிழிசை விருது,வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் 'வாழ்நாள் சாதனையாளர் விருது , தமிழ் இசைப்பணி விருது ,இசைத்தமிழ் வித்தகா் விருது . 

 தமிழிசை சொற்பொழிவுகள் , இசை நிகழ்ச்சிகள் , ஆய்வுக்கட்டுரைகள் , வானொலி , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்  என  இசையோடு இயைந்த இவர் பயணம்  தமிழர் வாழும் இடமெல்லாம் தமிழ் இசையின் நுட்பத்தையும் , தொன்மையையும்  பரப்பித் தொடர்கிறது .

நம்பிக்கை மனிதர்கள் 1-நர்த்தகி நடராஜ்!!!

நர்த்தகி நடராஜ்!!!


மதுரையில் பிறந்த இவர் , தன்னை நிலைநிறுத்த இடையறாது போராட்டங்களை சந்தித்து தாண்டி வந்த சாதனையாளர் .

தனது பாலினம் பற்றிய குழப்பம் ,குடும்பத்தினரும் , சுற்றி இருந்த சமூகமும் கட்டிய எதிர்ப்பு , எதிர்கால வாழ்வைப் பற்றிய  பயம் , அழுத்தம்  ஆகியவற்றை தனது முன்னேற்றத்திற்கான அடித்தளமாக மாற்றிக்கொண்டவர் . 

தனது ஆர்வத்தையும் , ஈடுபாட்டையும் மட்டுமே மூலதனமாக கொண்டு  , இவரும் , தன்னை போலவே எண்ணம் கொண்ட இவரின்  நண்பர் சக்தியும் தொடங்கிய நெடும் பயணம்  அமெரிக்கா , கனடா , ஐரோப்பா  என அரங்கேற்றங்களாகவும் , விருதுகளாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது .

திரு கிட்டப்பா பிள்ளை அவர்களிடத்தில் பதினான்கு ஆண்டு காலம் பரதம் பயின்றவர் .தனது குருவிற்கு உதவியாளராக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் நான்கு ஆண்டு காலம்  பணியாற்றி உள்ளார் .

மரபு மாறாத பரதநாட்டியம் என்பதை தீவிரமாக கடைபிடிக்கும் இவர்  "நாயகி பவா" , " மதுர பக்தி " , "மாதுர்ய பக்தி"  என பல்வேறு விதமாக அறியப்படும்   நடன வகைக்கும் ,  கி பி   19  நூற்றாண்டில் வாழ்ந்த  "தஞ்சை நால்வர்"  அறிமுகப்படுத்திய அரிய முத்திரைகளுக்கும் வாழும் களஞ்சியமாக உள்ளார் .

இலக்கியங்களில் தீராத தேடல் உள்ள  நர்த்தகி , சங்க இலக்கியங்கள் , தேவாரம்  , திருவாசகம் , திருப்புகழ் , நாலாயிர திவ்யப்  பிரபந்தம்,  ஆழ்வார் பாசுரங்கள் முதலியவற்றில் இருந்து தனது நாட்டியப்படைப்புக்களை   உருவாக்குகிறார் .  

ஒவ்வொரு படைப்புக்கும் , பாடலுக்கும் , அதன் அர்த்தங்களை  , வார்த்தைகளுக்கு பின் உள்ள உணர்ச்சிகளை, பாடல் பாடப்பெற்ற சூழ்நிலைகளை  புரிந்துகொள்வதற்கான மிகுந்த சிரத்தை எடுத்து படிக்கும்  இவர் அரிய புத்தகங்களைக் கொண்ட சிறிய நூலகத்தையும் தன்னிடம் வைத்துள்ளார் .

 "தமிழ் அமுது " , "சிவதரிசனம்" ,"சக்திதரிசனம்" , "குமாரவிஜயம்" , "அரங்கன் வைபவம்"   முதலியவை இவர் உருவாக்கிய படைப்புகள் .

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம் , ஜனாதிபதி அளித்த  சங்கீத நாடக அகாடமி விருது , தமிழக அரசின் கலைமாமணி , ஸ்ரீ கிருஷ்ண காண சபா அளித்த நிருத்ய சூடாமணி விருது , பிரசார் பாரதி விருது என் இவரின் திறமைக்கு சான்றாக அணிவகுத்து நிற்கின்றன இவர் வாங்கிய பட்டங்களும் , விருதுகளும் .

 இவரது    நடனப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மூலம் தொடர்ந்து ஒலிக்கும் சலங்கை ஒலி  இவரின்  மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் , நிராகரிப்புகளுக்கும் பதிலாக உள்ளது .



இவரின் நாட்டியங்களின் காணொளிகள் சில 






                                                           - paavib.blogspot.com

Tuesday, May 8, 2018

My Welcome Speech on Ambedkar Birthday Oratorical Competition Michigan -April 2018 (AANA &PASC NA combined event)


Hello All ,

IN 1980 ‘s  when  Indians came to USA the samajas came with them   , gradually the people who forms those samajas become the face of indians in USA the others are in minority and neglected
With the help of reservation and  globalization ,  People who denied education  become the first generation of   people started coming to   America .
 Sadly ,somewhere along the line while packing  their baggage  with masalas , They also packed caste in all flavors and colors  and brought to USA .
In the year of 2014  when the government changed in  india that impact felt in USA,   Suddenly there is an outburst of organizations in America that started to  openly supporting caste.
Caste  seamlessly Mingled  among  indians in  America . It is in the form of whatsup groups , facebook pages and also in the name of  gatherings that has the  agenda as
 “protecting the culture “ – in the name of culture all these kind of gathering protect is caste .
By seeing this   PASC  NA started one year before on the day of APril 14th  with likeminded inviduals 
With the thought as  “if the groups promoting caste are here in North america then why cannot we have the group that opposes castesim ? “   . A Group  sends the strong message to the people here  - “Guys , Stop this “
It started as a whatsup group ,  thozars  in different states of USA and Canada joined  - This Group became the PASC NA (Periyar Ambedkar study circle – North America ) organization  ,
In an  year we certainly made our name in various protests and events .  THozar Prabha will explain the  timeline of activities done by PASC NA in this year .

“Men are mortal so are ideas .An  idea need propagation as much  as a plant need watering ,otherwise both will wither and die” –Dr.Ambedkar .
We need to keep propagate the ideas of Rationalism ,
 As a natural progress the groups like PASC NA will come together with other likeminded groups like  AANA  and will  become a strong force against  caste and inequality .   
This should not stop with our generation, 
we need to pass this idea to our next generation
To do that,   reading and knowing  about  the leaders will be  the first step
 we are here for that .


Thanks ,


நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...