Monday, December 7, 2020

யாதுமாகி -11


 


மகளின்

நான்கு அடுக்கு 

பொம்மை வீட்டில் 

சொகுசாய் வாழும் 

பொம்மைகள் !

பொம்மையாய்

மாறத் துடிக்கும் 

மனம் ...

 

            - பாவி 

Sunday, September 27, 2020

யாதுமாகி-10

 செல்ல மகள்

சொன்னால் உனக்கு

புரியாது போப்பா

என்ற தருணத்தில்

தொடங்கியது

தந்தையியலின்

அஆ பாடம்

           - பாவி




Tuesday, August 11, 2020

எல்ஜராது - நாவல் (A Scientific Thriller)

 

                        

                                       

எல்ஜராது


ஜனவரி 2020  - கொரோனா சீனா தாண்டி பரவ ஆரம்பித்திருந்த நேரம் . என்னென்ன  மாதிரியான கொள்ளை நோய்கள் உலகில்  வந்திருக்கின்றன என தேடிப் பார்க்கும்  போது கண்ணில் பட்டது படை வெட்டுக்கிளிகள் . எகிப்தை தாக்கிய 10 பெரும் கொள்ளை நோய்களுள் ஒன்றாக “Book of Exodus” இல்  சொல்லப்பட்டிருக்கும்  இவை , பைபிளிலும் , குரானிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது . (வெகு காலமாய் இருக்கிறது  என்பதைச் சொல்ல இந்த மேற்க்கோள்)


இந்த படை வெட்டுக்கிளிகள்  எப்படி உருவாகிறது , தன்னை எப்படி மாற்றிக் கொள்கிறது ,கூட்டாக எவ்வாறு செயல் படுகிறது என்பதை படித்ததனில் உண்டான வியப்பில்  உருவானது இந்த நாவல் . 

"Scientific Thriller "- வகையில், "Mother of Mankind " - நாடுகளை கதைக்களமாக   கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் படிப்பவர்களுக்கு புதிய அனுபவத்தையும், அறிந்திராத தகவல்களையும் இந்த  தரும் என்ற நம்பிக்கையுடன்  .....    


 For India 

Amazon.in link  

https://www.amazon.in/dp/B08FMRVSNT/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&qid=1597202596&s=digital-text&sr=1-1     


USA Amazon.com link


  https://www.amazon.com/dp/B08FMRVSNT/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&qid=1597203413&s=digital-text&sr=1-1


Monday, June 29, 2020

இளையராஜாவின் நிலாப் பாடல்கள் - நிலாக் காயும் நேரம்




The Common Sense  ரேடியோ நிகழ்ச்சிக்காக இளையராஜாவின் பாடல்களை , தொகுதி வழங்கிய   "நிலாக் காயும் நேரம் " நிகழ்ச்சி 







இளையராஜாவின் மழைப் பாடல்கள் - இசையுடன் மழையை ரசிக்க



The Common Sense  ரேடியோ நிகழ்ச்சிக்காக இளையராஜாவின் பாடல்களை , தொகுதி வழங்கிய   "மழை மழை " நிகழ்ச்சி 





Zero hour Youtube channel -யாதும் ஊரே நிகழ்ச்சி


யாதும் ஊரே  என்ற   Zero Hour -Tamil  youtube  சானலில்  " அமெரிக்காவில்  சாதி என்னும் தலைப்பில் நடத்தப்பெற்ற கலந்துரையாடல்   நிகழ்ச்சியில் பங்கெடுத்து பேசும் வாய்ப்பு கிடைத்தது . 

அந்த நிகழ்ச்சியின் காணொளி 





யாதும் ஊரே நிகழ்ச்சி

Tuesday, June 23, 2020

மிசிகன் பொழுதுகள் -2






வானம்தனை
மேகம்சூழ 
அரவமில்லா 
தனிமைதனில் 
புரிபடும் 
ஏகாந்த நேரத்தின் 
மௌனமொழி 

                             - மிசிகன் பொழுதுகள் பாவி 

Sunday, June 21, 2020

மிச்சிகன் பொழுதுகள் -1





 மழை மண்ணை 
சந்திக்க 
வானம் விட்டு 
மேகமாய் திரண்டு வர 
தாலாட்டும்  மரங்களுக்கு 
தாளம் போடும் 
அந்தி நேர 
தென்றல் காற்று 

                                          - மிச்சிகன்  பொழுதுகள் 

Saturday, June 20, 2020

மிச்சிகன் பொழுதுகள்




ஏரிக்கரை ஓரம் 
மாலை மங்கும் நேரம் 
மிச்சிகனின் அழகிய 
மாலைப்பொழுது 

Wednesday, April 8, 2020

இனமான பேராசிரியர்


9  முறை சட்டமன்ற உறுப்பினர் , 1  முறை சட்ட மேலவை உறுப்பினர் , 1  முறை நாடாளுமன்ற உறுப்பினர் , 42  ஆண்டுகளாக தி.மு.  பொதுச்செயலாளர் ,  இனமான பேராசிரியர்  .



1933 ம் ஆண்டு கும்பகோணத்தில் மகாமக எதிர்ப்புப் பரப்புரை சிங்கை கோவிந்தராஜன் தலைமையில் நடந்தபோது, சிறுவனாகப் பங்கேற்றதில் தொடங்கியது அவரது முதல் அரசியல் செயல்பாடு, 1943 ம் ஆண்டு சிதம்பரத்தில் நடந்த நீதிக் கட்சியின் போர் ஆதரவு மாநாட்டில் பெரியாருடன் சேர்ந்து சொற்பொழிவாற்றினார். 1949 செப்டம்பர் 19: திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கவிழா கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். கழகத்தின் தொடக்கம் முதல் தன் வாழ்வின் இறுதிவரை திமுக வில் இருந்தவர்.

பெரியார் , அண்ணா ,  கலைஞர்  மூவருடனும் பயணம் செய்த இவர் ,  அண்ணாவாலும் , கலைஞராலும் பேராசிரியர் என்றே அழைக்கப்பட்டவர் , கலைஞர் ஒருமுறை கூட்டத்தினருக்கு  இவரை இப்படி குறிப்பிட்டார் ,  "நாங்கள் பேசுவதில் உங்களுக்கான தகவல்கள் இருக்கும் , பேராசிரியர் பேசுவதில் எங்களுக்கான தகவல்கள் இருக்கும் ", ஆம் இவர் திராவிட பேராசிரியர்களின் 
  பேராசிரியர்.


அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை ,பகைவனும் இல்லை என்னும் தொடரை பொய்யாக்கி ,, தன் நண்பர் கலைஞரை தலைவராக ஏற்று ,  50  ஆண்டுகாலத்திற்கும் மேல்  தொடர்ந்த இவர்கள் நட்பின் இணைந்த கைகளில் கட்டி எழுப்பப்பட்டது திராவிடத்தின் வரலாறு .

பேராசிரியர்  அன்பழகன்  திராவிட இயக்க வரலாற்றில் தவிர்க்க  முடியாத பெயர் , "ஒரு புயற்பொழுதில் கலைஞரும் நீயும் இரு கரங்களாக காத்திராவிட்டால் திராவிட தீபம் அணைந்து போயிருக்கும்"  என்ற  கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின்  புகழாரம் ஒரு சான்று .


இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு 1964ம் ஆண்டில் 6 மாதம் சிறைத்தண்டனை பெற்றார். ஈழத் தமிழர்களுக்காக 1983 இல் தனது சட்டமன்ற பதவியை முத்தமிழறிஞர் கலைஞரோடு சேர்ந்து துறந்தவர். இந்தி திணிப்பை எதிர்த்து  சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்குபெற்று தன் பதவியை இழந்தவர்.

இனம் வாழ , அறிவும்  சிந்தனையும் , திராவிடத்தின் குரல் , இனமொழி  உணர்ச்சியும் கவிதை எழுச்சியும் , The  Dravidian Movement , வகுப்புரிமை போர் , ஜாதி முறை , தமிழர் திருமணமும் இனமானமும் ,என 41  புத்தகங்களை எழுதியுள்ளார் .

தமிழர் திருமணமும், இனமானமும்' என்ற பெயரிலான புத்தகம் அதில் முக்கியமானது. அவர் எழுதிய அந்த புத்தகத்திலிருந்துதான், சுயமரியாதை திருமணங்களின் நடைமுறைகள் அப்போதைய இளம் தலைமுறையினரால் அறிந்து கொள்ளப்பட்டன.

தன்னைப் பற்றி பேராசிரியர் கூறியது , முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞரின் தோழன்.


“என்னைப் பொருத்தவரை கொள்கையில் மாறுபாடு வரும்போது துணிவாகப் பேசுவேன். வேறுபாடுதான் என்றால் முக்கியத்துவம் தர மாட்டேன். எப்போதும் தனி நபர்களை விட இயக்கம் முக்கியம். இயக்கத்தை விட கொள்கை முக்கியம்”.  தான் மிகவும் மதித்த சுயமரியாதை  இயக்கத்தின் கொள்கைகளை , எந்த நேரத்திலும் , எந்த இடத்திலும் , பதவியில் இருந்தபோதும் , இல்லாதபோதும் தொடர்ந்து பேசியவர் பேராசிரியர்


இவர் ஜாதி பற்றுகளை எதிர்த்தார் , தன்னை முன்னிறுத்தாமல் தன் கொள்கையை முன்னிறுத்தினார், இனப் பற்றினை போற்றி , பல்வேறு இன்னல்களிலும் இறுதி வரை கொள்கையில் உறுதியாக நின்றார் , ஆதலால் தான் இவர் திராவிடத்தின் இனமான பேராசிரியர்.


தலையங்கம் ஏப்ரல் 2020 மாத The Common Sense இதழுக்காக எழுதியது


பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்அமெரிக்கா அமைப்பின் “The Common Sense” மாத  இதழின் வாசகர்களுக்கு அன்பு வணக்கம். அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியாரின் கருத்துக்களை அமெரிக்கா வாழ்  தமிழர்களிடம்  தொடங்கப்பட்ட   இந்த அமைப்புக்கும், அமைப்பின் சார்பாக வெளிவரும் இந்த மாத இதழுக்கும் நீங்கள் தொடர்ந்து  அளித்து வரும் அன்பிற்கும், ஆதரவுக்கும்  நன்றி

அண்ணல் அம்பேத்கரின் 129  வது பிறந்தநாள் ,
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம், வெற்றியோ தோல்வியோ எதுவரினும்  தொடர்ந்து கடமையை செய்வோம் , யார் பாராட்டினாலும் , பாராட்டாவிட்டாலும் கவலை இல்லை என்ற அண்ணலின் மொழிகளுக்கேற்ப தொடர்ந்து செயலாற்றும் .


மனித  குலத்திற்கு  மாபெரும் அச்சுறுத்தலாக தொடர்ந்து பரவி வருகிறது கொரோனா. இது பரவ ஆரம்பித்தவுடன் மதங்கள் தத்தம்  கடைகளை மூடிவிட ,  மருத்துவர்களே  இரவு பகல் பாராது பணியாற்றி மக்களை காப்பாற்றி  வருகிறார்கள். தனது உயிரை பணயம் வைத்து கடமையாற்றும் மருத்துமனைகளின் அனைத்து  கடைநிலை ஊழியர்களுக்கும் , செவிலியர்களுக்கும் ,மருத்துவர்களுக்கும் எங்களது நெஞ்சான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் .

இந்தியாவில் மதம் இந்த நேரத்திலும் வெறுப்புணர்வை தொடர்ந்து விதைக்கிறது . கொரோனா நோய் தான்  எதிரியே தவிர , நோயாளிகளோ அவர் சார்ந்திருக்கும் மதமோ நம் எதிரி இல்லை , ஒன்றுபடவேண்டிய நேரம் இது.

உலகம் முழுவதும் இதனை எதிர்கொண்டு போராட , கைதட்டியும் , விளக்கு வைத்தும் கொரோனவை  விரட்ட   விசித்திர  முயற்சிகளை நடுவண் அரசு மக்களை செய்யச்சொல்கிறது.
உடலால் தனித்திருந்து , மனதால் ஒன்றுபட்டு துணிவுடன் எதிர்கொள்வதே  பயன் அளிக்கும் என்ற விழிப்புணர்வே நமக்கு இன்று தேவை .


பெரியாரும் அண்ணலும் வகுத்துக்கொடுத்த பாதையில் நேர்மையாகவும் , வெளிப்படையாகவும் , தன்னாட்சியுடனும் தொடர்ந்து  செயற்பட தங்களின் மேலான ஆதரவையும் ஊக்கத்தையும் 
வழங்கிடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் . தங்கள் படைப்புகள் , கருத்துக்கள் , விமர்சனங்கள் , விளம்பரங்களை 'thecommonsense.pasc@gmail.comமின்னஞ்சல் வாயிலாக பகிர்ந்துகொண்டால் மேலும் ஊக்கம் பெறுவோம் .


  
                                    வாழ்க தந்தை ! வாழ்க அண்ணல் !

                                      வளர்க பகுத்தறிவு ! செழிக்க மனிதநேயம் !

                                                                   நன்றி

                                                                ஆசிரியர் குழு


Tuesday, February 25, 2020

8 திசை (சிறுகதைத்தொகுப்பு)




Amazon India 






எனது முதல் புத்தகம் சிறுகதை தொகுப்பாக "8 திசை " என்ற பெயரில் Amazon Kindle வடிவத்தில் amazon தளத்தில் வெளிவந்துள்ளது .

எனது படைப்புகளை படித்து , தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் வணக்கங்களும் ,நன்றிகளும் .

எனது இந்த முயற்சிக்கு ஆதரவு தந்து , தங்களது நண்பர்களிடமும் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன் .

மறக்காம amazon இல் , உங்களது கருத்துக்களை பதிவிடுங்க .

Monday, February 24, 2020

ஏதோ ஒரு பாட்டு !!!

"பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுபட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்  "

பாட்டுகளால்   பல்வேறு காலங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின்  பகிர்வு இது  .

விளையாட்டுகளின்  மேல் இருந்த அளவுக்கு  பாட்டின் மேல் ஒரு பிடிப்பில்லாமல்  இருந்த  காலம் , விடுமுறை நாட்களின் மாலை வேளைகளில் , தனக்கு பிடித்த பாடல்களை பாடி பகிர்ந்துகொள்ள , சிறு சிறு திண்ணை கூட்டங்கள் நடக்கும் பகுதி  எங்களுது .


"நான் வெண்மேகமாக
விடிவெள்ளியாக
வானத்தில் போரந்திருப்பேன்
என்ன அடையாளம் கண்டு
நீ தேடி வந்தா
அப்போது நான் சிரிப்பேன்"

என உணர்ச்சி கரமாக  பாடி , "கொன்னுட்டான் போ " என்று  விமர்சனம் செய்வார்கள் ,

 அப்போது பெரிதாக தெரிந்த விளையாட்டுடன்  இந்த பாடல்களை தொடர்புபடுத்தி பார்க்க  முடியாததும் , என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரியாததாலும் பெரிதாக ஈர்க்கவில்லை  .

இப்படி இருக்கையில் , முதன் முதலில்  ஒரு பாட்டு அதில் உள்ள வார்த்தைகளுக்காக   கொஞ்சம் பிடித்தது , பெரிய இசையோ , சந்தமோ அதில் இல்லை  , அந்த பாட்டு

"தொட்டபெட்டா ரோட்டு  மேல முட்ட பரோட்டா , நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா "

இந்த பாட்டை என்னால்   தொடர்பு படுத்தி பார்க்க  முடிந்ததால் , கேட்டதில் இருந்து பரோட்டா , சிக்கனுடன் சாப்பிட வேண்டும் என்று ஆசை , தொட்டபெட்டா தூரம் என்பதால் , அருகில் இருந்த ஊத்துக்குளி ரோட்டில் போய் சாப்பிட்டுவிட்டு வந்தேன் , போகும்போதும், வரும்போதும் எனக்கு தெரிந்த  இந்த இரண்டு வரிகளை மட்டுமே பாடிக்கொண்டு இருந்தேன் .

பாட்டு.  நமக்கு புது அனுபவங்களை  கொடுக்கும் .

"பிரம்மனின் மணிமுடி எங்கே
பரமனின் திருவடி எங்கே
மந்திர தேடல் ஓ ஓ மந்திர வாசல் "

என்ற  மந்திரவாசல் பாட்டு ஆகட்டும் .

" கண்ணின் மணி , கண்ணின் மணி நிஜம் கேளம்மா
கங்கை நதி , வைகை நதி பெண் தானம்மா "

என்று தமிழ்நாடே  "சித்தி  " என்று அலறிய பாட்டாகட்டும் ,சினிமா  பாட்டுக்களை விட அப்போதெல்லாம்   தொலைக்காட்சி நாடகத்தின் பாட்டுகள்தான் பிரபலம் .

இப்படி இருக்கையில்  , என்னுடன் படிச்ச பசங்க திடுதிப்பென்று ஒரு பாட்டு புத்தகத்தை  வாங்கி உருக்கமாக பாடிக்கொண்டு இருந்தார்கள் , அந்த படம் உயிரே .

என் நண்பன் ஒரு முறை அந்த  பாட்டை கேட்டுருப்பதாகவும் , வா நாமும் பார்த்து பாடலாம் என்று கூப்பிட்டான்  , அந்த புத்தகத்தை  எடுத்து நான் இப்படி படித்தேன்

 த   க
தையா
தையா
தையா
 தையா

என் நண்பன் உடனே ,"டேய் ,மச்சான் வேகமா பாடணும் டா , நீ மெதுவா பாடுற "  என்றான்

"ஓ சரி இப்ப பாரு "

 "தக ,  தை தை , தை  தை  , தையா  "

இப்போது அவனுக்கும் பாட்டு மறந்து விட சரி நல்ல பாட்டு இல்லையாட்ட இருக்கிறது என்று  விட்டுவிட்டோம் .

பாட்டு.  நமக்கு புது அனுபவங்களை  கொடுக்கும், பாட்டு நம்மை படிக்கவும் வைக்கும் ,


பின்  நான்கு நாட்கள் வந்த ஒரு விடுமுறையில் , ஊருக்கு போய் விழாவை சிறப்பித்து வந்து பார்த்தால் , நான் படித்த  நஞ்சப்பா   ஆண்கள் மேல்நிலைப்  பள்ளியில் அவனவன்  விட்டத்தை பார்த்து  ஏதோ பாடிக்கொண்டுஇருந்தார்கள் .  என்னவென்று தெரியவில்லை என்றல் தலை வெடித்து  விடும் என்பதால்

அருகில்  விட்டது பார்த்து கொண்டு இருந்தவிடம் " என்ன பாட்டுடா"  என்று கேட்டேன் , அவகாசம் கூட கொடுக்காமல்

" வசீகரா ரா ரா ரா ரா  என்  "நெஞ்சினிக்க்க்க்க்க்க "
உன் " பொன் மடியில்ல்ல்ல்ல்ல் "   "தூ ஊ ஊ ஊ ஊ  ங்கினால் "    "போ  ஓ ஓ ஓ தும் "

என்று அவன் பாட  ,ஏதோ கொடூரமான பாட்டா இருக்கும் போல என்று  நடுங்கிப் போனேன் .

பாட்டு.  நமக்கு புது அனுபவங்களை  கொடுத்து ...... படிக்க வைத்து ...... பயப்படவும்  வைக்கும் ,

அதன் பின் கல்லூரி நாட்கள் , ரேடியோ அப்படியே அழிந்து விடும் அன்று  நினைத்துக்கொண்டிருக்கையில் , புயலென வந்து , இளையராஜா பாட்டுக்களை  மறுபடியும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது சூரியன் FM  . 

விடிய விடிய , ரம்மி விளையாட்டும் , இளையராஜா பாட்டுமாக  கழிந்த பொழுதுகள்  , காலை பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் , சின்னத்தம்பி  , பெரியதம்பி  நிகழ்ச்சிதான் அப்போதெல்லாம் அலாரம் .

அப்படி இருந்த  ஒரு நாளின், ஒரு  இரவு வேளை , தனிமையில்  கேட்ட பாட்டு  ,

"துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது  பூங்கொடியே பூங்கொடியே "

வைத்திருந்த  அரியர்கள் எல்லாம்  நினைவு வர ,  வாழ்க்கையை பற்றி சிந்திக்க வைத்த பாட்டு இது .

பாட்டு....... நமக்கு புது அனுபவங்களை  கொடுத்து........ படிக்க வைத்து ....... பயப்பட வைத்து  ..........நிதர்சனத்தையும்  உணர்த்தும் .

பின் பெங்களூரு  வேலை நாட்கள் , என்னை போலவே , இளையராஜா பாட்டு பிடித்த தெலுங்கு பேசும் நண்பனுடன் , மொழி தாண்டி இசைக்காக பாட்டுக்களை  கேட்க ஆரம்பித்த நேரம்  . இளையராஜா பாடல்களை  தமிழில் தான் முதலில் போடுவார் , அதற்கு பிறகுதான்   தான் உங்களுக்கு தெலுங்கில் வரும் என்ற சண்டை எல்லாம் நடக்கும் .

இப்படி இருக்கையில்  , இந்தியில் முதன் முதலில் ஒரு இளையராஜா  பாட்டு நாங்கள் இரண்டு பேரும் கேட்கிறோம்   , வார்த்தை புரியாவிட்டாலும் , இசை  மிகவும்  பிடிக்க , இது தமிழில் , தெலுங்கில் இருக்கணுமே நாம் கேட்டதே  இல்லையே  என்று தோணியது  , அடுத்த நாள் காலை ஆபிஸ்ல வேலையே ஓட மாட்டேங்குது

அது எப்படி தமிழில் , தெலுங்கில் இல்லாமல்  இந்திக்கு போயிருக்கும் என்று  குழப்பம் .  வெறிகொண்டு தேடுறோம் கிடைக்க மாட்டேங்குது ,

இசை இப்படி வருது

"லா லா லா
லா லால ல ல ல ல
லா லா லா
லா . ல ல ல "

வார்த்தை தெரியாது , இதை யூடூப்பில போட்டு தேடவா முடியும் ?

 என் நண்பன்  வனுக்கு தெரிந்தவர் களுக்குகெல்லாம்  பேசி தெலுங்கில்  கண்டுபிடித்து விட்டான்

"ஆகாசம்   , ஏ- நாட்டிடோ .. அநுராகம்  ஆணாதிடி  " - இது தெலுங்கு

அவன் கண்டு பிடித்த மகிழ்ச்சியில் குதிக்க , பக்கத்தில் இருந்த , கேரளா நண்பர்  என்ன பாட்டு டா   என்று  கேட்டார்   , நாங்கள் லா லா  பாடியதும் 40 வயதுகளில் இருந்த அவர்  கண்டுபிடித்து விட்டார்

 "தும்பி வா,  தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்  "  - இது மலையாளம்

தமிழின் நிலைமை தான் பரிதாபம் ஆகிவிட்டது , யார்கிட்ட கேட்டும் தெரியலை

ஓசூரில் , கச்சேரியில் பாட்டு படும் ஒருத்தர் வீடு பக்கத்தில் இருக்கார்னு , ஒரு நண்பர் சொல்ல , நானும் என் தெலுங்கு நண்பனும் அவனுடைய காரில்  , பெங்களூர் எலக்ட்ரானிக்  சிட்டில இருந்து மாலை    ஓசூருக்கு கிளம்பிட்டோம் .மானப்   பிரச்னையாச்சே விட முடியுமா ??

அவர்கிட்ட போய் பாடி காட்டினா ,  " கேட்ட மாதிரி தான் இருக்கு சரியாய் தெரியலை  , நான்  "மைக் மோகன் " பாட்டுதான் நிறைய பாடுவேன் ,

சேலத்தில இளையராஜா பாட்டு மட்டுமே பாடுற மியூசிக் ட்ரூப் இருக்கு , அட்ரஸ் தரேன் போன் நம்பர் எல்லாம் இல்லை போய் பாருங்க  என்றார்

அங்கிருந்து  அப்படியே சேலம் , அவர் சொன்ன இடத்துக்கு  போனா நாமக்கல் பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்தில கச்சேரிக்கு போயிருக்காங்கனு சொல்றாங்க ,

அங்கிருந்து நாமக்கல் - போறப்ப கச்சேரி நடந்துட்டு இருக்கு , நள்ளிரவு தாண்டி முடியுது , ட்ரூப் கு ஒரு குடோன் தூங்க கொடுத்திருந்தார்கள் , அங்கே போய்ட்டோம்

ஒரு பாட்ட தேடி வந்திருக்கோம் னு சொன்னதும் அவங்களுக்கு அவ்வளவு உற்சாகம் ,  எங்கே பாடு , தமிழில் இருந்தா நிச்சயமா கண்டு பிடிச்சிடலாம்

"லா லா லா
லா லால ல ல ல ல
லா லா லா
லா . ல ல ல "

உடனே பக்கத்தில இருந்தவர்

"தம் தம் தம்
தம் தம் தம்த தன நன
தம் தம் தம்
தம் தம் தன "


என்றதும்  நங்கள் தேடி போனவர் படுறார்

சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது

லா லா  லலலல  லலலல  லலலல  லலலல லா லா  லலலல  லலலலா

சந்தத்தில் மாறாத நடையோடு
என் முன்னே யார் வந்தது

லலலல  லலலல  லலலல  லலலல  லலலல  லலலல  லலலல லா

தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது

எனக்கும் , என் நண்பனுக்கும் ஆனந்த கணீர் வரும் நிலையில் , எங்களுக்கே எங்களுக்கான ஒரு சிறிய இசை கச்சேரி அன்று இரவு நடந்தது .


பாட்டு....... நமக்கு புது அனுபவங்களை  கொடுத்து........ படிக்க வைத்து ....... பயப்பட வைத்து  ..........நிதர்சனத்தையும்  உணர்த்தி , மொழி தாண்டிய  நட்புகளையும் , பயணங்களையும் , எளிய மனிதர்களின் அறிமுகங்களையும்  கொடுக்கும்  .

இது மட்டுமா தரும்  ????


"ஏதோ ………… ஒரு பாட்டு ………நம்  காதில் கேட்கும்  , கேட்கும் பொழுதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும் "



நான்கு மொழிகளிலும் உள்ள அந்த இளையராஜா பாட்டின்  youtube links


https://www.youtube.com/watch?v=ESQJh7dFmc8    - Hindi


https://www.youtube.com/watch?v=xAl7_PiZV9I    - Malayalam


https://www.youtube.com/watch?v=NiUIXXAfZOY    - Telugu


https://www.youtube.com/watch?v=X_vTebE4fFY   - Tamil






Monday, January 27, 2020

ஊக்கமது கைவிடேல்

இட்லியும் குடல்கொழம்பும்
நெய்யில் சுட்ட தோசைகளும்
அரைச்சு வைத்த
மசாலாவில்
பொரித்து வைத்த
கோழிக்கறியும்

மறுக்க மறுக்க
நினைத்தாலும்
கொதிக்க கொதிக்க
ஆட்டுக்கறியும்
குண்டாவை தூக்கிப்போட்டு
சிறிய அண்டாவில்
மிளகு ரசமும்
கெட்டித் தயிரும்
நெத்திலி மனும்
கூடவே வரும்
பிரியாணியும்

அவ்வப்போது
லட்டுகளும் , ஜிலேபியும்
அல்வாவும் , பால்கோவாக்களும்
நாவின் இனிப்பு நீங்க
பஜ்ஜி போண்டாக்களும்
அதற்கு தொட்டுக்கொள்ள
சட்டினி சாம்பாரும்
பின்பு தரமான
காபியும் , டீயும்

நடைப்பயிற்சியில் மிக்சரும்
வாய்ப்பயிற்சிக்கு  பக்கோடாவும்

இழுத்து வைத்தாலும்
தினம் சுவைக்க வைத்தாலும்
கொண்ட கொள்கையில்
குன்றாமல் நின்று
இளைத்தே தீருவேன்
உடல்
குறைத்தே மாறுவேன்
ஊக்கமது கைவிடேல்

                           -பாவி 

Thursday, January 2, 2020

டூடி !!!!!

சமீபத்திய  இந்தியப் பயணத்தில்   , ஒரு கிராமத்தை  தாண்டுகையில்   ஒரு அம்மா இளநீர் வித்துக்கொண்டிருந்தார் .

இளநீர் வாங்கி குடிக்கையில் கண்ணில் பட்டது  அங்கே இருந்த நாய்க்குட்டி

இது பேர் என்னங்க ?

இது  "டூடி " ங்க

"டெடி "  ங்களா ?

இல்லைங்க டூடி .

அப்படினா என்னங்க ??

இது தெரியாதுங்களா ??  பேருங்க


எனக்கு தெரியலையா ?  இல்லை  அவருக்கு மறந்து விட்டதா ?? ஒரே confusion

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...