Thursday, August 1, 2019

குறுந்தொகை குறிஞ்சித்திணை 54 வது பாடல்


பாடல் காட்சி   வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது

திருமண நாள் தள்ளிப்போகிறது. தலைவிக்குக் கவலை. 
கவலைப்பட்ட தலைவி  தன  நிலையை தோழிகிட்ட சொல்லுறது தான்  இந்தப் பாட்டு


இப்படலை எழுதியவர் : மீனெறி தூண்டிலார் . இந்த ஒரு பாட்டு தான் இவர் எழுதியதாக இருக்கிறது மீனெறி தூண்டில்’ என என இப் பாடலில் வரும் தொடரைக்கொண்டு இப்புலவர் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது

பாவகை :  நேரிசை ஆசிரியப்பா . 

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று ஈற்று அயலடி (இறுதி அடிக்கு முந்தைய அடி) 3 சீர்களாகவும் (சிந்தடி), ஏனைய அடிகள் 4 சீர்களாகவும் (அளவடி) வருவது

விளக்கம்

யானே ஈண்டையேனே; என் நலனே,
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கை விடு பசுங் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்

கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே

    



பாட்டோட முதல் வரி , கடைசி வரி  பாக்கலாம்
யானே ஈண்டையேனே  - நான் இங்கு இருக்கிறேன்
என் நலனே  -   என்னுடைய  நலன் , உள்ளம்
கானக நாடனொடு  - காட்டையுடைய தலைவனோடு,
ஆண்டு - நாங்கள் பழகிய இடத்தில்
ஒழிந்தன்றே – நீங்கியது  

நான் இங்க இருக்கேன் , ஆனா என்னோட மனது  , காட்டில் இருக்கிற தலைவன் கிட்ட நாங்க பழகிய இடத்திலேயே போயிருச்சு  னு சொன்ன தலைவி

அந்த மனசு எவ்வளவு வேகமா தன்னை விட்டு   நீங்கியதுனு  உதாரணம் சொல்றாங்க   2 , 3 , 4  வது வரிகள்ல

ஏனல் காவலர் கவண் ஒலி  -
ஏனல் காவலர் – தானியத்தை காக்கும் காவலர்கள்
கவண் ஒலி    - கவண் - உண்டி னு  வட்டார வழக்குல சொல்வாங்க ,  கற்களை வைத்து தாக்கும் ஒரு ஆயுதம் ம்  இந்த  ""angry bird  விளையாட்டுல  பறவையை வெச்சு விடுவோமே அதுதான் கவண் .  அந்த கவண் விடுவதால்  காற்றில் கல் போகும் ஒலியைக் கேட்டு

வெரீஇக்  - பயந்து

கான யானை கை விடு பசுங் கழை
கான யானை - காட்டு யானை

கை விடு பசு கழை - கைவிட்ட பசிய மூங்கிலானது    எவ்வளவு வேகமா மேல போகுமோ

மீன் எறி தூண்டிலின் நிவக்கும் -   தூண்டில்ல மீன் மாட்டிருச்சுனா அந்த தூண்டில் எவ்வளவு வேகமா மேல போகுமோ

அந்த வேகத்தில என் மனசு போய் விட்டது , இப்ப  திருமண நாள் வேற தள்ளி போகுதுனு கவலையோட புலம்புற பாட்டு தான் இது


No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...