Wednesday, May 25, 2011

கீர்த்தனா என்னும் ஆந்திர மிளகாய் !

பெங்களூர் - fridge ல் வைத்த ஆப்பிள் போல எப்பொழுதும் பெண்கள் புதுசாக இருக்கும் ஊர் . அதுவும் ஜோதி நிவாஸ் காலேஜ் அருகில் சென்று விட்டால் கால நேரம் தெரியாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் . இனி காலேஜ் பக்கம் போனால் ப்ரொஜெக்டில் இருந்து நீக்கி விடுவேன் என்று அன்பு கட்டளை மேலதிகாரியிடம் இருந்து வந்த காரணத்தினால் வாழ்கை வறட்சியாக போய்கொண்டிருந்த கால கட்டம் .

அப்பொழுது ஜோதி நிவாசில் உள்ள அத்தனை அழகான பெண்களும் ஒரு உருவில் வந்தார்கள் புதிதாக சேர்ந்த பெண்ணின் வடிவில் . பெயர் கீர்த்தனா , பேரை சொல்லும் போதே ஒரு இசை கேட்கிறது அல்லவா? எனக்கு ஒரு இசை கச்சேரியே கேட்டது .

ஆந்திரா, உலகுக்கு தந்த தேவதை . ஆந்திரா பருப்பு சாதத்துக்கும் , கோங்கிறா சட்டினிக்கும் , பெண்களின் அழகுக்கும் எதோ சம்மந்தம் இருக்கிறது என்ற மிகப்பெரிய உண்மையை என்னை கண்டுபிடிக்கச் செய்து , என்னையும் ஒரு விஞ்ஞானி ஆக்கினாள்.

என் மேனேஜர் வாழ்கையில் செய்த ஒரே நல்ல காரியம் , அவளுக்கு பயிற்சி கொடுக்கும் படி என்னைப் பணித்தது . விளைவு ,எனக்கு அரைகுறையாக தெரிந்த வேலையும் சேர்த்து மறந்து போனது .

வானத்தில் உள்ள தேவதைகள் எல்லாம் கூட்டு முயற்சியாக என்னை சபித்த பொன்னாளில் கீழ்க்கண்டவை நடந்தது

கீர்த் , கீஈர்த் , கீஏஏஏஏஎர்த் கோபமாய் திரும்பி பார்த்தாள் , "வாட் யு வான்ட் ? "

அது தமிழ் அவள் அரைகுறையாக கற்றுகொண்டிருந்த சமயம், புரியாது என்ற தைரியத்தில் "நீதான் வேண்டுமென்றேன் ".

சற்றும் எதிர்பார்க்காத பதில் வந்தது "வென் யு வான்ட் ? "

அருகில் இருந்த தமிழ் தெரிந்த என் சக பணியாளர்கள் , உற்சாக கூச்சலில் கைதட்டி ,நடந்ததை படம் வரைந்து பாகம் குறித்து அவளுக்கு விளக்க ஆரம்பித்தார்கள் .

தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நேரம் இருக்கும் கைதியின் மனநிலையில் நான் பரிதாபமாக நின்று கொண்டிருந்தேன் .

கோபமும் , வெட்கமும் , போட்டிபோட அவர்கள் சொன்னதை கவனித்தவள் , குறுநகையுடன் அருகே வந்து காதோரம் கிசுகிசுப்பாய் கேட்டாள் "வென் யு வான்ட் ? "

மெலிதாய் தொடங்கிய கீர்த்தனா என்னும் இசை உடல் , மனம் முழுவதும் வியாபித்து பரவ ஆரம்பித்தது .

ஆந்திராவின் நிலப்பகுதியும் , மகேஷ் பாபுவும் , இலியானாவும் நெருங்கிய சொந்தம் ஆகிப்போனார்கள் . தெலுங்கனா பிரச்சனைக்காக சோறு தண்ணி இல்லாமல் கவலைப்பட ஆரம்பித்தேன் .

தமிழ் பேசும் போது கூட அநியாயமாக ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் ஒரு "லு " சேர்த்துக்கொண்டேன் .

கவிதை போலத்தான் வாழ்கை போய்க்கொண்டிருந்தது

யாரும் அற்ற தனிமையில் , மிகவும் அந்தரங்கமான நிலையில் காதலுடன் , நான் கீர்த் என்று அழைக்கையில் என்ன "ஜனா" என்று அவள் கேட்கும் வரை .

பின் குறிப்பு : "ஜனா என் பெயர் அல்ல "

- பாவி

Tuesday, May 3, 2011

முத்தழகு

Los Angeles - 20 th century fox தலைமையகம் , எந்நேரமும் portfolio வைத்துக்கொண்டு நடிக்க ஆசைப்படும் தேவதைகள் நிரம்பிய இடம் , அதில் எனது பிரிவில், ஒரு பனிச்சிற்பம் அலுவலகம் வந்து போகும் . அப்பா வைத்த பெயர் நுழையாததால் நாம வைத்த பெயர் "முத்தழகு " . ரத்த நிற கூந்தல் ,பால் நிறம் , சிறிய முகம் , முகத்தில் குழந்தை , உடம்பில் குமரி . அவளை தூரத்தில் இருந்து முன்னால் பார்க்கும் போது , காளை மாட்டின் திமில் ,ஏவுகணைகளை தாங்கி செல்லும் விமானம் , , பின்னால் பார்க்கும் போது Mickel angelo வின் உலகத்தை பற்றிய கண்டுபிடிப்பு , , என எண்ணங்கள் கலந்து கட்டி கூத்தாடும் .

வெள்ளிகிழமை ,ஓர் சுபமுகூர்த்த வேளை, முத்தழகு அலுவலகம் வந்தாள் , அவள் உடையை பார்த்ததும் பேச்சு என்ன மூச்சு கூட வரவில்லை. அடிக்கடி அவளை பார்த்ததில் , அலுவலகம் முழுவதும் என்னை பார்க்க ஆரம்பித்துவிட்டது , நன்றாக மாட்டிக்கொள்வோம் என்ற பயம் வந்ததால் கவனம் திசைதிருப்ப , விகடன் ஆன்லைனில் படிக்க ஆரம்பித்து விட்டேன் , விதி யாரை விட்டது . "is that Tamil ?I used to have Tamil roommate in masters " முத்தழகு மொத்த அழகையும் காட்டும் உடையில் அருகில் நின்று கேட்டாள். LA மறந்து ,US மறந்து , என்னை நானே மறக்கும் வகையில் தாறுமாறாக மனம் கிராபிக்ஸ் பண்ணியதில் , அவள் சிவப்பு ,வெள்ளை - பாவாடை தாவணியில் , தலை நிறைய மல்லிகை பூ வைத்து கொண்டு மாமான்னு கூப்பிட ...... (சத்தியமாக என்ன சொன்னேன் என்று தெரியவில்லை , அனால் , அவள் என்னை ஒரு பூச்சியை பார்ப்பது போல பார்த்துவிட்டு சென்றாள் ) , முகம் தெரியாத அந்த roommate இன் மேல் கூட காதல் வந்ததது .

டூரிங் டாக்கீஸ்
படத்தையெல்லாம்
மன்னு குவிச்சு பார்த்திருக்கேன்
எங்கனயும் கண்டதில்லை
உன்னமாரி பேரழகை !

பார்த்ததுமே பத்திக்கிச்சு
கண்ணு ரெண்டும் சொக்கிடிச்சு
பாஷை மட்டும் புரியலையே
எங்க போய் முட்டிக்குவேன் !

முழியை உருட்டி உருட்டி
என்னமோ கேக்குற நீயும்
என்னகன்னு சொல்லுறது
எனக்கு தமிழே
தகராறு !
நம்ம ஆங்கிலம்
பேசினா அதுதான்
வரலாறு !

என் குலசாமிகிட்ட
தூது போக வேண்டிகிட்டேன்
திரும்பிவந்து நின்னாரு
நீ பேசறது புரியலைன்னு !
என்சாமி என்ன செய்யும்
வெள்ளைகாரியை
இப்பதாம் அவரும்
பாக்கிறாராம்!

வானத்து தேவர்களா
ஊர்வசி ரம்பை
உமக்கு மட்டும்
போதுமா ?
புண்ணியமா போகட்டும்
தமிழகொஞ்சம் சொல்லிகொடுங்க
பாதகத்தி முத்தழகுக்கு !

காக்கா வட
கத சொல்லியாவது
காதலிப்பேன் அவளை
நானும் !
- பாவி

இளையராஜாவின் நிலாப் பாடல்கள் - நிலாக் காயும் நேரம்

The Common Sense  ரேடியோ நிகழ்ச்சிக்காக இளையராஜாவின் பாடல்களை , தொகுதி வழங்கிய   "நிலாக் காயும் நேரம் " நிகழ்ச்சி  https://www.you...