Tuesday, February 21, 2017

தமிழ் தொலைக்காத தலைமுறை நாங்கள்!!!-





                              தமிழ் தொலைக்காத தலைமுறை நாங்கள்

கதிரோடு ஆடும் வயல்வெளியை ஒப்ப 
தினந்தோறும் எண்ணத்தில் தமிழ் சதிராடும் 
சுற்றத்தின் நினைவுகளால் நெஞ்சம் அலையாடும்-தமிழ் 
தொலைக்காத தலைமுறை நாங்கள் ! .
அங்கமென எம்முள் வளர்த்த மொழியை 
பங்கம் ஏதும் வாரா வண்ணம்
சங்கம் வைத்து வளர்க்கும் -தமிழ் 
தொலைக்காத தலைமுறை நாங்கள் !.
அக்கரைக் கண்டம் வந்த போதினும் 
நித்திரைப் பொழுதுகள் நெருங்கும் போது
தமிழ்ச்சித்திரக் கதைகள் மழலைக்கு சொல்லி
அக்கறை கொள்ளும் நெஞ்சமெல்லாம் -தமிழ் 
தொலைக்காத தலைமுறை நாங்கள் !.
தமிழன் என்ற இனமுண்டு -அதற்கு 
சாதியால் மதத்தால்  அழிவுண்டு -என
எண்ணங் கொண்டு   எவரேனும் இருப்பின் 
பதாகை தாங்கி உரக்கச் சொல்வோம் -தமிழ் 
தொலைக்காத தலைமுறை நாங்கள் !.
                                                                            
                                                                        -பாவி 

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...