ரசமின்றி அமையாது இவ்வுலகு !
சிற்றின்ப வாழ்க்கையில் பேரின்பம் காண
மிளகு , தக்காளி , பருப்பு , பூண்டு , புளி என வகைகொண்டு
சித்தர்கள் தமிழ் உலகுக்கு அளித்தது ரசவாதம்
என்னும் ரசம் வைக்கும் முறையாம் !!!
சூடு தண்ணீரில் புளி கலந்தால் ரசமில்லை தமிழ் நெஞ்சங்களே
ஆய கலைகள் அறுபத்தி நான்கில் முதற்க் கலை ரசக்கலை!
திருப்பாற்கடலை கடைந்து எடுத்தது அமிர்தல்ல ரசம் தமிழ் இனமே
சிவபெருமான் விஷத்தை உண்டு ரசத்தைக் காத்தார்!
அரிதினும் அரிது நன்று கரைத்த பச்சைப்புளி ரசம் -அவ்வை பாட்டி அறிவுரையும்
கடையில் வாங்கிய ரசப்பொடி வைத்து ரசம் வைப்போர்
மக்கள் அல்ல மாக்கள் என வள்ளுவர் பெருந்தகை வாக்கும்
காதலாகி கண்ணீர் மல்கி ரசம் குடித்தேன் -மாணிக்கவாசகர் கூற்றும்
ரசத்தை குடித்தேனே உயிரை வளர்தேனே என்று திருமூலரும்
தமிழ் கூறும் நல்லுலகுக்கு விட்டுச் சென்ற ரசமொழிகளாம்!!
என் முப்பாட்டன் முருகப்பெருமானும்
ரசத்துக்கு சண்டையிட்டு மலையேறினான்!
மாம்பழம் காரணம் என்பது
திரிக்கப்பட்ட வரலாற்றின் கறுப்புப் பக்கமாம் ! உண்மையறிக உள்ளங்களே !
இஃது கேள்வி ஞானமில்லை ! ஏட்டுச் சுரைக்காயுமில்லை!
மனைவி அம்மா வீடு சென்றுவிட
விழி மேல் காலி ரசக்குண்டா வைத்து ஏக்கம் கொள்ளும்
கணவனின் மனக் குமுறல்கள் என்றரிக!
ஆதலினால் மகாஜனங்களே நினைவில் கொள்க
ரசமில்லா வாழ்வு விஷமாகும் !!!
-பாவி
No comments:
Post a Comment