Thursday, September 30, 2010

துளி துளியாய் துரோகம் !

பார்த்தால் கையெடுத்து கும்பிட தோன்றும் முகம் , போட்ட சுடிதார் கசங்கியோ , விலகியோ என்றுமே பார்த்தது இல்லை, கண்களில் எப்பொழுதும் ஒரு பயம் , பார்ப்பவரை சுண்டி இழுத்து ஆறுதல் சொல்ல வைக்கும் பயம் , நீண்ட கூந்தல் , குங்குமத்தை என்றுமே மறக்காத நெற்றி , பாலில் ரோஜா பூவை கலந்ததை போல நிறம் , கண்களுக்கு குளுமையான சுத்தமான தோற்றம் , நினைத்து இருக்குறேன் இவளை தவறாக நினைத்தால் சாமி கண்ணை குத்தும் . ஒரு வார்த்தையில் சொன்னால் தேவதை . பழக்கத்தால் கரைந்து , பார்த்து பார்த்து உருகி , சுண்டு விரலை பிடித்து கொண்டு வாழ்கை வாழ்ந்து விடலாம் என இருக்கையில் தெரிய வந்தது தேவதையின் மறுபக்கம் .ஏய் !
சும்மாதான் !
என்ன பண்ணுற !
நான் முக்கியம் இல்லையா!
பேசமாட்டியா !
செல்லம்தானே!
எனக்கு ஒரு கதை சொல்லு !
நீதான் வேணும் !
அப்படித்தான்!
ஒரு முத்தம் கொடேன் !
எப்பவும் பக்கத்தில் இரு !
பயமா இருக்கு !
கை பிடிச்சுக்கோ!
போய் தூங்கு !
நானும் தூங்க போறேன் !

எனக்கானது என
பக்குவமாய்
சேர்த்து வைத்த
நியாபகங்களும் , வார்த்தைகளும் !
அதே இரவின்
பிற்பகுதியில்
வேறொருவனுக்கு
சொல்லக் கேட்டு !
யாருமில்லாத தனிமையில்
சுய பச்சாதாபம் மேலோங்க
அடக்க முற்படும்
கட்டுப்பாடு இல்லாமல்
பொங்கி வழிந்தது
துளி துளியாய்
துரோகம் !

- பாவி

Tuesday, September 21, 2010

மீனாட்சி !

" மீனாட்சி" - பிரம்மன் மிகுந்த சிரத்தை எடுத்து இவளை படைத்திருக்க வேண்டும் . அவ்வளவு அழகு .. ஒரு நினைப்பும் தோணாமல் சும்மா அவளை பார்த்துகொண்டே இருக்கலாம் .ஆனால் அவள் மதிக்க கூட மாட்டாள் என்பது வேறு விஷயம் . தேவதைகள் எங்களை ஆசிர்வதித்த ஒரு நல்ல நாளில் மிக மெலிதான புடவையில், அபாயகரமான வளைவுகள் தெளிவாக தெரிய , செல்லம் Classku வந்தாள் .
பெங்களூரின் குளிர் என்ன ஆனது என்றே தெரியவில்லை .வகுப்பு முழுவதும் சஹாரா பாலைவனம் போல உஷ்ணம் . கண்கள்ளுக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் .... சரி வேண்டாம் விடுங்கள் . அந்த கணத்தில் நம்மால் முடிந்தது ...

உணர்வுகள் இழந்து
உறவுகள் மறந்து
மரணப் படுக்கையில்
இருந்தாலும்
மறவாதடி உன்
வாசம்!

மறக்க நினைத்து
உறக்கம் தொலைத்து
நினைத்து நினைத்து
தவிக்கின்றேன்
இயல்பாய் வந்து
அழகாய் சிரித்து
பிரிந்து செல்கிறாய்
அனுதினமும் !

பார்த்து பார்த்து
ரசித்து முடித்து
கட்டும் உன்
புடவை மடிப்பு
கசங்கவில்லை
கசங்கிபோனது
என் மனது !

கவலை மறக்க
கவனம் கவர
கற்பனை செய்து
கலைகிறேன் நான்
காட்சி தந்து
கண்களால் கொன்று
காக்க வைத்து
கட்டி இழுத்து
செல்கிறாய் நீ !

உலகத்தை சுருட்டி
கையில் வைத்து
இடுப்பில் சொருகும்
கடலடி நீ!
கடக்க முற்ப்பட்டு
ஆழம் தெரியாமல்
கவிழ்ந்து போன
கப்பல் நான்!

கவிழும் கப்பல்கள்
உனக்கு பழசு
கவிழ்ந்த எனக்கோ
கடலோ புதுசு !
மீள்வதற்கு வழி
என்னடி மீனாட்சி !
பதில்
சொல்லடி மீனாட்சி !

- பாவி

இளையராஜாவின் நிலாப் பாடல்கள் - நிலாக் காயும் நேரம்

The Common Sense  ரேடியோ நிகழ்ச்சிக்காக இளையராஜாவின் பாடல்களை , தொகுதி வழங்கிய   "நிலாக் காயும் நேரம் " நிகழ்ச்சி  https://www.you...