Friday, December 3, 2010

நந்தலாலா - இளையராஜாவின் தாலாட்டு

ஆங்கில படத்திலிருந்து தழுவப்பட்டது என்ற விமர்சனம் இருக்கிறது , அப்படி பார்த்தால் உலகின் அனைத்து கதைகளும் மகாபாரதம் ,இராமாயணத்தில் இருந்து தழுவபட்டைவையே !

இரண்டு நபர்கள் மேற்கொள்ளும் அதி அற்புதமான பயணம் நந்தலாலா ! மிஸ்கின் அனுபவித்து செதுக்கி இருக்கிறார் , வருங்கால முதலமைச்சர் கனவில் இருக்கும் நமது தமிழ் நாயகர்கள் (?) இதில் நடிக்காதது ஆச்சிரியம் இல்லை .

குட்டி பையன் , illogically logical மிஸ்கின் , டிராக்டர் பெண் , மொபட் காரர் , பஞ்சு மிட்டாய் விற்பவர் , ஹாரனை பறிகொடுத்து சாப்பாடு வங்கி கொடுக்கும் லாரிக்காரர் , இளநீர் விற்பவர் , அதிகம் பேசாமல் மனதை கவரும் இரு மொட்டையர்கள் , பீர் குடிக்கும் வாலிபர்கள் , சார் கக்கா போறாங்க சார் முகம் முழுக்க முடியை வைத்துகொண்டு அனைத்தையும் நடிக்க வாய்த்த காவலர்கள் , இளநீர் கடைக்காரர் , காப்பாத்தியவுடன் ஜாதியை கேட்கும் பெண் (தமிழகத்தின் திருத்த முடியாத சாபம் இது ) , வழிகாட்டியாக வரும் மனதில் ஆயிரம் கால்களின் பலமுடைய வாலிபர் , சிறுவனின் அம்மா , உடல் பசியை தீர்க்கும் ஸ்நிகிதா , அசை அடங்காத முரட்டு கிழவர் ,
தூங்கிகொண்டே நியாயம் வழங்கும் நாசர் , கண்தெரியாத பாட்டி,சிறுவனிடம் காசு வாங்கும் வேலைக்காரி, சில்லறை இல்லாததால் சரக்கை வைத்து செல்லும் உண்மையான வியாபாரி என படம் முழுவதும் கவிதை சிதறல்கள் .

இரு வேறு நோக்கத்துடன் பயணம் செய்யும் நபர்கள் என்பதை கோட்டுக்கு இருபுறமும் கால்களை காட்டி விளங்கவைத்த லாவகம் ..,கைகளை சுவற்றில் உரசிக்கொள்ளும் மிஸ்கின் ,கடைசியின் அம்மாவின் கால்களை அவர் அறியாமல் சுவற்றில் உரசுவது , வாவ் வார்த்தைகள் இல்லை மிஸ்கின் .. பேச்சை மட்டும் குறைத்து கொண்டால் உங்களை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது .

படத்தின் கதாநாயகன் இளையராஜாவின் இசை ! படத்தில் மேகம் வரும்போது இசையில் மேகம் வருகிறது , மழை வரும்போது இசை மழை மனதில் பொழிகிறது ,கோபம் ,தனிமை ,ஏக்கம் , நிராசை , ஏமாற்றம் , சந்தோசம் , முழுமை , அழுகை என அனைத்தையும் இசையில் உணர முடியும் என்பதை காட்டியிருக்கிறார் அவர் .

பயணத்தை நினைவில் செதுக்கி வைக்கிறார் ராஜா ! இவர் இசையை கேட்கும் காலத்தில் இருக்கிறோம் என்பதே மிகவும் பெருமை .

விஜய் படம் பார்த்து நாம் சேர்த்த சாபத்தை , நந்தலாலா பார்த்து போக்கி கொள்வோம் ஆக!

Tuesday, November 2, 2010

அவர் ! அவர் ! அவர் ! அவர்கள் !

மூன்று மனிதர்கள் . இவர்களிடம் பெரிய பின்புலம் இல்லை , தனது திறமையினால் , சாதுர்த்தியத்தால் உலகின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பிய மூவர். மூவரும் ஒன்று பட்டிருந்தால் , இரு தேசங்களை மட்டும் அல்ல , உலகத்தின் சரித்தரத்தை மாற்றிப்போட்டிருப்பார்கள் .
சாதாரண மனிதர்களாய் பிறந்து , சரித்தரம் படைத்த மூவர் ,காலத்தின் சதுரங்கம் இவர்கள் வழி போட்டது ஒரு படுகொலை ,ஒரு அவமதிப்பு , ஒரு லட்சியம் , அதன் விளைவு ?????

அவர் !

பெண்களின் கண்ணீர்
சாம்ராஜ்யங்களை அழிக்க
வல்லது !
தனது மன வலிமையால்
விஸ்வரூபம் எடுத்த
அவர் காத்திருந்தார் !

அவர் !

அரசியலின் ராஜகுரு !
தவறாக உரசப்பட்டதின்
விளைவு ?
மதியாதார் தலைவாசல்
மிதியாதே!
அவர் காத்திருந்தார் !

அவர் !

சிங்கம் அல்ல !
சாதி இல்லா
சமுதாயம்
பாடத்தில்
மட்டும் படித்ததை
நடத்திக் காட்டியவர்!
இன விடுதலைக்காக
அவர் காத்திருந்தார் !

மனதின் தராசில்
அவரவர் நியாயம்
உயர்ந்தது !
எதற்கும் வளையாத
மனவலிமை உடைய
மூவர் !
காத்திருந்தார்கள் !

யார் வென்றார்
என்பதை விட !
இந்தக்கணம் ....

அவர்கள்

இறந்தோர் கொடுத்து
வைத்தவர்கள் !
இருப்போர்
மன நோயாளிகளாய்
வாழ்கின்றனர் !
உயிரை மட்டும்
வைத்துக்கொண்டு
அவர்கள் காத்திருக்கிறார்கள் !

நாம்??????????????

- பாவி

Friday, October 29, 2010

ஒரு கைபேசி அழைப்பும் , நினைவுகளும்

எதிர்பாராத விதமாய் கல்லூரி நண்பனிடம் இருந்து அழைப்பு .மாமா ஒன்றும் இல்லை ,இப்பவும் அவளை நினைக்கிறாயா என்றான் . கேட்டுவிட்டு அவன் வைத்துவிட்டான் . எனக்கோ எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் ...வறண்ட ஆற்றுப்படுகையில் மழை வந்ததும், பொறிந்து நீந்தும் மீன்குஞ்சுகளை போல நினைவு எங்கும் அவள் முகம் , பாவனைகள், வகுப்பறை , drawing hall , பின்பக்க படி , angel net browsing centre,லைப்ரரி பிளாக் ,கண் கண்ணாடி , spinz powder , dove soap ,முத்தம் கேட்பதற்கான சங்கேத வார்த்தைகள் Local call (கையில் முத்தம் ),STD கால்(கன்னத்தில் ) ISD call (உதட்டில் ) அனைத்துக்கும் மேல் தேடித் தேடி கண்டுபிடித்த 19 மச்சங்கள் , போன் பண்ணினவனை கொலை பண்ண வேண்டும் என்ற அடக்க முடியாத வெறி வந்தது ,ம்ம்ம் ... , எங்கிருக்கிறாய் தீப்ஸ் ??? அசம்பாவிதமாக அவளை சந்தித்தால் ?

எதிர்திசையில்
எதையோ பார்த்தபடியோ !
அழைப்பே வராத
கைபேசியில் பேசிக்கொண்டோ
கடந்து விடலாம் !
இயல்பாக
நலம் விசாரிக்கலாம் !
புன்னகை மட்டும்
தந்துவிட்டு
விலகி விடலாம் !
கேட்கத் துடிக்கும்
ஆயிரம் ஆயிரம்
கேள்விகளுள் ஒன்றை
கேட்கலாம் !
பேசிய வார்த்தைகளயும்
செயல்களையும்
நினைவுகூர்ந்து
வெட்கித் தலை
குனிய வைக்கலாம் !
வெறுமனே
மௌனமாகவும் இருக்கலாம் !

பலூன்களை
பார்த்து ரசிக்கும்
குழந்தை போல
தூரத்தில் இருந்து
பார்க்கலாம் !
வருத்தமுமில்லை
காதலுமில்லை !
அவரவர் பாதையில்
வெகுதூரம்
வந்தாயிற்று !

வழிகள் பல
இருந்தும்
சந்திக்காமல்
இருப்பதே உத்தமமானது !

-பாவையின் பாவி (ஒரு காலத்தில்! )

Thursday, September 30, 2010

துளி துளியாய் துரோகம் !

பார்த்தால் கையெடுத்து கும்பிட தோன்றும் முகம் , போட்ட சுடிதார் கசங்கியோ , விலகியோ என்றுமே பார்த்தது இல்லை, கண்களில் எப்பொழுதும் ஒரு பயம் , பார்ப்பவரை சுண்டி இழுத்து ஆறுதல் சொல்ல வைக்கும் பயம் , நீண்ட கூந்தல் , குங்குமத்தை என்றுமே மறக்காத நெற்றி , பாலில் ரோஜா பூவை கலந்ததை போல நிறம் , கண்களுக்கு குளுமையான சுத்தமான தோற்றம் , நினைத்து இருக்குறேன் இவளை தவறாக நினைத்தால் சாமி கண்ணை குத்தும் . ஒரு வார்த்தையில் சொன்னால் தேவதை . பழக்கத்தால் கரைந்து , பார்த்து பார்த்து உருகி , சுண்டு விரலை பிடித்து கொண்டு வாழ்கை வாழ்ந்து விடலாம் என இருக்கையில் தெரிய வந்தது தேவதையின் மறுபக்கம் .ஏய் !
சும்மாதான் !
என்ன பண்ணுற !
நான் முக்கியம் இல்லையா!
பேசமாட்டியா !
செல்லம்தானே!
எனக்கு ஒரு கதை சொல்லு !
நீதான் வேணும் !
அப்படித்தான்!
ஒரு முத்தம் கொடேன் !
எப்பவும் பக்கத்தில் இரு !
பயமா இருக்கு !
கை பிடிச்சுக்கோ!
போய் தூங்கு !
நானும் தூங்க போறேன் !

எனக்கானது என
பக்குவமாய்
சேர்த்து வைத்த
நியாபகங்களும் , வார்த்தைகளும் !
அதே இரவின்
பிற்பகுதியில்
வேறொருவனுக்கு
சொல்லக் கேட்டு !
யாருமில்லாத தனிமையில்
சுய பச்சாதாபம் மேலோங்க
அடக்க முற்படும்
கட்டுப்பாடு இல்லாமல்
பொங்கி வழிந்தது
துளி துளியாய்
துரோகம் !

- பாவி

Tuesday, September 21, 2010

மீனாட்சி !

" மீனாட்சி" - பிரம்மன் மிகுந்த சிரத்தை எடுத்து இவளை படைத்திருக்க வேண்டும் . அவ்வளவு அழகு .. ஒரு நினைப்பும் தோணாமல் சும்மா அவளை பார்த்துகொண்டே இருக்கலாம் .ஆனால் அவள் மதிக்க கூட மாட்டாள் என்பது வேறு விஷயம் . தேவதைகள் எங்களை ஆசிர்வதித்த ஒரு நல்ல நாளில் மிக மெலிதான புடவையில், அபாயகரமான வளைவுகள் தெளிவாக தெரிய , செல்லம் Classku வந்தாள் .
பெங்களூரின் குளிர் என்ன ஆனது என்றே தெரியவில்லை .வகுப்பு முழுவதும் சஹாரா பாலைவனம் போல உஷ்ணம் . கண்கள்ளுக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் .... சரி வேண்டாம் விடுங்கள் . அந்த கணத்தில் நம்மால் முடிந்தது ...

உணர்வுகள் இழந்து
உறவுகள் மறந்து
மரணப் படுக்கையில்
இருந்தாலும்
மறவாதடி உன்
வாசம்!

மறக்க நினைத்து
உறக்கம் தொலைத்து
நினைத்து நினைத்து
தவிக்கின்றேன்
இயல்பாய் வந்து
அழகாய் சிரித்து
பிரிந்து செல்கிறாய்
அனுதினமும் !

பார்த்து பார்த்து
ரசித்து முடித்து
கட்டும் உன்
புடவை மடிப்பு
கசங்கவில்லை
கசங்கிபோனது
என் மனது !

கவலை மறக்க
கவனம் கவர
கற்பனை செய்து
கலைகிறேன் நான்
காட்சி தந்து
கண்களால் கொன்று
காக்க வைத்து
கட்டி இழுத்து
செல்கிறாய் நீ !

உலகத்தை சுருட்டி
கையில் வைத்து
இடுப்பில் சொருகும்
கடலடி நீ!
கடக்க முற்ப்பட்டு
ஆழம் தெரியாமல்
கவிழ்ந்து போன
கப்பல் நான்!

கவிழும் கப்பல்கள்
உனக்கு பழசு
கவிழ்ந்த எனக்கோ
கடலோ புதுசு !
மீள்வதற்கு வழி
என்னடி மீனாட்சி !
பதில்
சொல்லடி மீனாட்சி !

- பாவி

Wednesday, July 14, 2010

காதல் தருணங்கள் - 3

மனம் முழுவதும்
உன் எண்ணங்கள்
சிலந்தியின் பின்னல்களாய் !

அலைபேசியின்
மறுபக்க உன்
மௌனம் மட்டுமே
போதும்
தொடர்பிலிருக்கிறோம்
என அமைதியடைய !

ம்!
சொல்லு!
என்ற உன்
வார்த்தைகளில்
ஓர் வாழ்கை
வாழ்கிறேன்
நான்!

சில நாட்களாக
தொடர்பில்லாத
தனிமை பொழுதுகளால்
பிளவுபடுகிறேன்
எண்ணங்களால்!

வெட்கம் விட்டு
அழைக்கவா?
தனிமையில்
அழுதிடவா?

- பாவி

Saturday, May 29, 2010

காதல் தருணங்கள் -1

மாயம் செய்தாள்!
மயக்கம் தந்தாள்!
கனவுகள் கொடுத்தாள்!
ஓர்
காவியம் நிகழ்த்தினாள்!
கண்களில் பேசினாள்!
கவிதையாய் வந்தாள்!
உணர்வினை கொதிக்கச்
செய்து
உயிரினை வதைத்தாள்!
வானவில்லாய் புருவம்
வளைத்து!
கன்னங்கள் வர்ணஜாலம்
காட்ட!
கிள்ளை மொழி
பேசினாள்!
அதில்
காலங்களை மறக்கடித்தாள்!

கோபப் பார்வையினில்!
தெவிட்டாத அன்பினில்!
ரோஜா இதழ்களில்!
சிறு சிறு ஊடலில்!
செல்ல அணைப்பினில்!
கள்ளச் சிரிப்பினில்!
சூரியனும் சந்திரனும்!
கடல்களும் மலைகளும்!
வயல்வெளிகளும்!
பள்ளத்தாக்குகளும்!
பாலைவனங்களும்!
பனி பிரதேசங்களும்!
உருவாக்கி காட்டினாள்!
அவள் மட்டும்
கொண்ட எனக்கான
உலகம் படைத்தாள்!


அனைத்தும் செய்துவிட்டு
விலகி நின்று
தலை சாய்த்து
அப்பாவியாய் கேட்டாள்!
காதல்னா என்னடா ?

-- பாவி

காதல் தருணங்கள்


இளையராஜாவின் நிலாப் பாடல்கள் - நிலாக் காயும் நேரம்

The Common Sense  ரேடியோ நிகழ்ச்சிக்காக இளையராஜாவின் பாடல்களை , தொகுதி வழங்கிய   "நிலாக் காயும் நேரம் " நிகழ்ச்சி  https://www.you...