பாடல் காட்சி “இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.-
பாங்கன் தோழன் ,
தலைவி தன்னை வருத்தியது
எப்படி
என்பதைத்
தலைவன்
தன்
பாங்கனிடம்
சொல்வதுதான் இந்தப் பாட்டு..
இயற்கைப் புணர்ச்சி - கண்டதும் காதல் love at first sight
இப்படலை
எழுதியவர் : சத்திநாதனார்
இவரது இந்தப் பாடல்
ஒன்றே
ஒன்று மட்டும்தான் சங்கநூல் தொகுப்பில் உள்ளது
விளக்கம்
சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை
கான யானை அணங்கியா அங்கு-
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே
தலைவி எப்படி தலைவினை வருத்தி இருக்காங்கன்னா
சிறு வெள் அரவின் - சிறிய வெள்ளிய பாம்பினது
அவ் வரிக் - அழகிய கோடுகளையுடைய,
குருளை – குட்டியானது
இந்த பாம்பை கோதுமை நாகம் னு நாம இப்ப சொல்லுறோம்
கான யானை - காட்டுயானையை
அணங்கி யாங்கு - வருத்தினாற் போல
அணங்குதல்
= அச்சம் கொள்ளும்படி வருத்துதல்.
|
|
|
|
முளை வாள் எயிற்றள் - நாணல் முளையைப் போன்ற ஒளியை உடைய பற்களை உடைய
வளையுடைக் கையள் - வளையலை அணிந்த கைகளை
உடைய
|
|
இளையள் - இளமையான - தலைவி
எம் அணங்கியோளே - என்னை வருத்தினாள்
இதை எப்படி உவமையாக பார்க்கலாம்னா
இளைய பாம்புக்குட்டியானது, பிறருக்கு அடங்காது திரியும் யானையைத் தீண்டி வருத்தியது போல, இளமையை உடைய தலைவி பகைவரால் தோல்வியுறாத என்னை வருத்தினாள் .
இப்ப பாட்டை மறுபடியும் பாக்கலாம்
சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை
கான யானை அணங்கியா அங்கு-
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே
|
|
|
|
No comments:
Post a Comment