Friday, August 23, 2019

குறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்

பாடல் காட்சி 

 அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிந்தவழிக் கலங்கியதூஉம் ஆம்.
முதல் முறையா தலைவியை பார்த்துட்டு வர  தலைவன் தன் நெஞ்சத்திற்கு சொல்லியது இந்தப் பாட்டு
இயற்கைப் புணர்ச்சி  - கண்டதும் காதல்   love at first sight



இப்படலை எழுதியவர் : பரணர்

இவர்  பாடிய 85 பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன ,  இவரது பாடல்களில்  வரலாற்று செய்திகள் அதிகம் இடம் பெற்று இருப்பதால் வரை , தமிழின் முதல் வரலாற்று கவிஞர் என்றும் சொல்கிறார்கள் . இவரும் கபிலரும் நண்பர்கள் என்றும் , குறிஞ்சி எப்படி கபிலரின் சிறப்போ , அதே மாதிரி மருத நிலப் பாடல்கள் இவரின் சிறப்பாக இருக்கிறது


விளக்கம்

இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு,
அரிது வேட்டனையால்-நெஞ்சே!-காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே.


இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு - பொருளில்லாத  வறியவன்

  இன்பத்தை விரும்பினாள்போல

அரிது வேட்டனையால்-நெஞ்சே - பெறுதற்கரியதை நீ  விரும்பிட்டியே நெஞ்சே

காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு   - அவ நல்லவள் , நமக்கு நன்மை தருவாள்னு தெரிஞ்ச உனக்கு

அரியள் ஆகுதல் அறியாதோயே  -     அரியவள் என்பது தெரியலியே

 ; உன் இஷ்டத்துக்கு எல்லாம் அவளை பார்க்க முடியாது அப்படிங்கிறது தெரியாம போயிருச்சே  னு சொல்லுறது தான் இந்தப்பாட்டு

இப்ப பாட்டை மறுபடியும் பாக்கலாம்

இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு,
அரிது வேட்டனையால்-நெஞ்சே!-காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே.




குறுந்தொகை குறிஞ்சித்திணை 119 வது பாடல்


பாடல் காட்சி   இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- 

பாங்கன் தோழன் ,  

தலைவி தன்னை வருத்தியது எப்படி என்பதைத் தலைவன் தன் பாங்கனிடம் சொல்வதுதான் இந்தப் பாட்டு..

இயற்கைப் புணர்ச்சி  - கண்டதும் காதல்   love at first sight

இப்படலை எழுதியவர் : சத்திநாதனார்

இவரது இந்தப்  பாடல் ஒன்றே ஒன்று மட்டும்தான் சங்கநூல் தொகுப்பில் உள்ளது

விளக்கம்

சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை
கான யானை அணங்கியா அங்கு-
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே

தலைவி எப்படி தலைவினை வருத்தி இருக்காங்கன்னா

சிறு வெள் அரவின் - சிறிய வெள்ளிய பாம்பினது

அவ் வரிக்  - அழகிய கோடுகளையுடைய

குருளை – குட்டியானது

இந்த பாம்பை கோதுமை நாகம் னு நாம இப்ப சொல்லுறோம்

கான யானை - காட்டுயானையை

அணங்கி யாங்கு - வருத்தினாற் போல
அணங்குதல் = அச்சம் கொள்ளும்படி வருத்துதல்.



முளை வாள் எயிற்றள் -   நாணல் முளையைப் போன்ற ஒளியை உடைய பற்களை உடைய
வளையுடைக் கையள்  - வளையலை அணிந்த  கைகளை உடைய

இளையள் - இளமையான  - தலைவி

எம் அணங்கியோளே - என்னை வருத்தினாள்

இதை எப்படி உவமையாக பார்க்கலாம்னா

இளைய பாம்புக்குட்டியானது, பிறருக்கு அடங்காது திரியும் யானையைத் தீண்டி வருத்தியது போல, இளமையை உடைய தலைவி பகைவரால் தோல்வியுறாத என்னை வருத்தினாள்   .


இப்ப பாட்டை மறுபடியும் பாக்கலாம்

சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை
கான யானை அணங்கியா அங்கு-
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே





Sunday, August 18, 2019

டெட்ராய்ட் உணருயிர் கலைக்கூடத்தின் மேடை நிகழ்ச்சி

டெட்ராய்ட் உணருயிர் கலைக்கூடத்தின்  மேடை நிகழ்ச்சி , ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன் .
   மிசிகன் அமெரிக்காவில் நடந்த     இந்தியா டே  விழாவில்  



https://www.youtube.com/watch?v=hxP3I77-LGI&t=22s

நாங்கள் வைத்த பறை முழக்கம்
பறை பறை பறை பறை 
தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
Don't Opress, Do Resist
Need Need Diver-sity
Love Love Equa-lity

Friday, August 16, 2019

குறுந்தொகை குறிஞ்சித்திணை 96 வது பாடல்


பாடல் காட்சி    தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது

இயற்பழித்தல் - இயல்பைப் பழித்துக் கூறல்

தெருட்டுதல் –தேற்றுதல்

நீ தலைவனை பழித்தல் கூடாது என்று தலைவி தோழிக்கு சொல்லியது

தலைவன் விரைவில் வரையாமல் ஒழுகினானாக அவன் வரைதல் வேண்டிய தோழி, “தலைவன் நம் நிலையை அறியானாயினன்; அவன் திறத்து என்செய்வேன்!

இப்படலை எழுதியவர் : அள்ளூர் நன்முல்லை  , இவர் சங்ககால பெண் புலவர்,   , நன்முல்லை - இவரது பெயர்  , அள்ளூர் - ஊரின் பெயர்

இவர்  அகநானூற்றில் ஒரு பாடல்(பாடல்:46), புறநானூற்றில் ஒரு பாடல் (பாடல்:306)[1] மற்றும் குறுந்தொகையில் ஒன்பது பாடல்கள் பாடல் எண்கள் 32, 67,68,93,96,140,157,202,237[2] என  மொத்தம் பதினொன்று பாடல்கள் பாடியுள்ளார்

விளக்கம்

அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ?' என்றி; யான் அது
நகை என உணரேன்ஆயின்,
என் ஆகுவைகொல்?-நன்னுதல்! நீயே,

நல் நுதல் நீயே - நல்ல நெற்றியை உடைய நீ

அருவி வேங்கை - அருவியினதருகில் வளர்ந்த வேங்கை மரங்களையுடைய

பெரு மலை நாடற்கு - பெரிய மலையையுடைய நாட்டுக்குரிய தலைவனுக்கு

யான் எவன் செய்கோ?' என்றி - நான் என்ன செய்வேன், - என்று கூறி அவனை இயற்பழித்தாய்

யான் அது
நகை என உணரேன்ஆயின்,  - நான் அதை விளையாட்டுனு தெரியாம இருந்திருந்தா

என் ஆகுவைகொல்?- என்ன ஆவ சொல்லு

தலைவனை வெச்சுட்டு என்ன செய்யுறது , ரொம்ப மக்கா இருக்கானு தோழி சொல்லிட்டாப்பல ,   நீ சொன்னதை நான் சீரியஸா எடுத்துகிட்டானா நீ என்ன அவ சொல்லுனு கேட்குற பாட்டு தான் இது         

மறுபடியும் பாட்டு

அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ?' என்றி; யான் அது
நகை என உணரேன்ஆயின்,
என் ஆகுவைகொல்?-நன்னுதல்! நீயே,


நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...