பாடல்
மா என மடலும் ஊர்ப; பூ எனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப-காமம் காழ்க்கொளினே.
இந்த பாடலின் காட்சி :
தோழியிற் கூட்டம் வேண்டிப் பின்னின்ற தலைமகன் தோழி குறைமாறாமல் கூறியது- தலைவியிடம் சொல்லி அழைத்துவா என்று அவன் தோழியிடம் கூறும்போது தோழி மறுக்காமல் இருக்க இச் செய்தியைச் சொல்கிறான்.
இதனை எழுதியவர்
பேரெயின் முறுவலார் - குறுந்தொகை 17, வது புறநானூற்றில் 239 வது பாடலும் இவர் பாடியுள்ளார் . முறுவலிப்பவர் பெண் என்று கருதி இவரைப் பெண்பால் புலவர் என்று கருதுகின்றனர். பேர் எயில் ஒரு ஊரின் பெயர்.
விளக்கம்
இந்த பாடல் மடலேறுதல் பற்றியது
இந்த பாட்டுல இருக்கிற கடைசி வார்த்தையை எடுத்து முன்னாடி போட்டுக்குங்க அப்பத்தான் எளிதாக புரியும்
காமம் காழ்க்கொளினே -காம நோயானது முதிர்வுற்றால் . -, நம்ம தலைவனுக்கு அசையினால பித்தம் வந்து அது முத்தி போயிருச்சு , முத்திப் போனா ஊர் வழக்கமா என்னவெல்லாம் செய்யறாங்கனு சொல்லி நானும் அதை செய்வேன் , அதனால தலைவிகிட்ட சொல்லிடுனு தோழியை மிரட்டுற பாட்டு தான் இது
மா என மடலும் ஊர்ப - பனை ஓலையை குதிரையாக நினைச்சிட்டு
மா – குதிரை , மடலும் - பனை ஓலை , ஊர்ப - ஊர்ந்து போவது
பூவெனக் குவி முகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப - குவிந்த அரும்பை உடைய எருக்கம் பூ மாலையையும் - எருக்கம் இழிவாக பார்க்கப்படுகிறது , அப்படிப்பட்ட எருக்கம் பூவில் செய்த மாலையை , பூ மாலையா கெத்தா தலையில் போட்டுக்கிட்டு
மறுகின் ஆர்க்கவும் படுப - வீதியில் பிறர் தம்மைக் கண்டு ஆரவாரிக்கவும் படுவர் ,
ஊரே கைகொட்டி சிரிச்சாலும் அத பத்தி கவலை இல்லாம
பிறிதும் ஆகுப - தம் கருத்து முற்றாதாயின் சாதலுக்குரிய வரைபாய்தல் ,
இதையெல்லாம் செஞ்சும் முத்தழகும் , அவள் குடும்பமும் ஒதுக்கில்லைன்னா சாகும் வரையில் போகிறதுதான் ஊர் வழக்கம் ,
நானும் மடலேறப்போறேன் , நீதான் முடிவு பண்ணனும் னு தோழிகிட்ட சொல்கிறான்

No comments:
Post a Comment