சிகாகோ
நகரில் 10 வது
உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு , பேரவையின் 32 வது விழா , மற்றும்
சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா என முப்பெரும்
விழாவாக நடைபெற்ற நிகழ்வில் பெரியார்
-அம்பேத்கர் படிப்பு வட்டம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக , நூற்றுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை
கொண்டு அரங்கம் நிறைந்த சிறப்பான இணை அமர்வை நடத்தி
முடித்தது .
முத்தமிழர்
அறிஞர் கலைஞர் மறைந்தபின் நடந்த முதல் இணை அமர்வில் , கலைஞரின்
புகழ் வணக்கதோடு அமர்வு தொடங்கியது .
முதன்முறையாக
பெரியார் மற்றும் அம்பேத்கரின் நட்பு சிலையை பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் , சிறப்பு
விருந்தினராக பங்கேற்ற கவிஞர்
சல்மா அவர்களை கொண்டு வெளியிட்டது.
முதல்
சிலையை சல்மா வெளியிட தோழர் சிவானந்தனும் , இரண்டாவது சிலையை சிக்காகோவின்
தமிழ் பள்ளிகளில் தொடர்ந்து செயலாற்றுபவரும் , ஆசிரியர் வீரமணி அவர்களின் மகளுமான அருள் செல்வி அவர்கள் வெளியிட தோழர் சுதாகரும் , மூன்றாவது சிலையை பெரியார்
பன்னாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சோம இளங்கோவன் வெளியிட
தோழர் வினோத்சந்தரும் பெற்றுக்கொண்டனர் .
பெரியார்
அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் தோற்றமும் , செயல்பாடுகளையும் தொகுத்து தோழர் கனிமொழி அவர்கள் முன்னுரையாக
வழங்கினார் .
அடுத்த நிகழ்வாக சிறப்பு விருந்தினர் சல்மா அவர்கள் சிலை
வெளியீட்டுக்கு பாராட்டியும் , தந்தை பெரியார்
அவர்கள் பெண்ணுரிமைக்காக ஆற்றிய செயல்களையும் , சுயநலமில்லாமல் , எதிர்பார்ப்பில்லாமல் மக்களுக்கு தொண்டாற்றியதையும் , மதத்திற்கு எதிரானவர் என்று பெரியாரை பற்றி கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை உடைக்க செயலாற்றுவதின் அவசியத்தையும் ,அம்பேத்கரையும் , பெரியாரையும் எதிர்நிலைக்கு கொண்டு சென்று நமக்குள் பிரிவினையை உண்டாக்கும் சக்திகளை எதிர்த்து செயலாற்ற வேண்டிய நிலையையம் , தேர்தல்
முடிவுகளின் அதிர்ச்சியால் தமிழ்நாட்டில்
ஊடுருவி கைப்பற்ற துடிக்கும் RSS இன் சூழ்ச்சிகளையும்
, சாதிய வெறியால் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளைப் பற்றியும் ,இவைகளை முறியடிக்க பெரியார் ,அம்பேத்கர்- இந்த இரு தலைவர்களின்
சிந்தனைகளை முன்னெடுத்து செல்ல உறுதிமொழி எடுக்க வேண்டும்
என உரையாற்றினார் .
அடுத்தபடியாக
பேச வந்த அருள் செல்வி அவர்கள் குழந்தைகளுக்கு
பெரியார் அவர்களின் கருத்துக்களை , அவர்களுக்கு புரியும்படி கொண்டு செல்ல செயல்படுமாறு அறிவுறுத்தினார்
.மேலும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் Humanist Conference இல்
பங்கேற்க அழைப்பு விடுத்தும் , பெண்கள் அதிகமாக இணை
அமர்வில் கலந்து கொண்டிருப்பதினால் ஏற்பட்ட மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார் .
தோழர்
கார்த்திகேயன் அமெரிக்காவில்
நிகழும் சாதிய பாகுபாட்டை இளைஞர்கள் ஆதரிக்கவில்லை என்றும் , பெரியாரின் கோட்பாடுகளை அவர்கள்தான் எடுத்து செல்கிறார்கள் என்றும் , கலைஞர் அவர்களின்
சமூக நீதி செயல்பாடுகளை எடுத்துச்
சொல்லி , கலைஞரின் புகழ் வணக்கத்தை மீண்டும் ஒருமுறை கூறிச்சென்றார் .
பெரியார்
பன்னாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சோம இளங்கோவன்
பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை எடுத்துச் செல்வதற்கு ஒவொருவரும் நாம் என்ன செய்ய
வேண்டும் என்று சிந்தித்து செயல்படுமாறு
கூறினார் .
ஜெர்மனியின்
மருத்துவர் Ulrike Niklas அவர்கள்
பெரியாரின் கருத்துக்களை , ஆங்கிலம் , ஜெர்மன் முதலிய மொழிகளில் மொழிபெயர்த்து மக்களிடம்
கொண்டு சேர்க்க வேண்டும் என்றார் , பள்ளி குழந்தைகளுக்கு பெரியார் கருத்துக்களை தாம் எடுத்துச் செல்வதாகவும்
, மாணாக்கருடன் இந்தியா செல்லும்போது திடலுக்கு கூட்டிச் சென்று காண்பிப்பதாகவும் அவர்
கூறினார்.
முனைவர்
கண்ணபிரான் ரவிசங்கர் பேசும்போது இயல் இசை நாடகம்
மூலமாக ஏறி
வந்த மதத்தை , அதே இயல் , இசை
நாடகம் கொண்டு பெரியாரிய
கருத்துக்களை முன்னெடுத்து
சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார் , பெரியார் பிஞ்சு இதழ் ஒவ்வொரு வீட்டிலும்
குழந்தைகள் கையில் இருக்க வேண்டும் என்றார் அவர் .
முனைவர் இளங்கோவன்
அவர்கள் பேசும்போது தொழில் நுட்ப கருவிகளின் துணை கொண்டு இயக்கம் சார்ந்த கருத்துக்களை , இணைய வழியாக
, பயிலரங்கம் வாயிலாக கொண்டு
செல்வதாக கூறினார்.
அமர்வின் சிறப்பு நிகழ்வாக பெரியார் பிஞ்சுகள் சிறுவன் இலக்கணன் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடலையும் , ஆதவன் திருகுறள்களையும் தமது மழலைக் குரலில்
கூறினர்
வருகை
தந்தவர்கள் அனைவருக்கும் பெரியார்
சிந்தனைகள் தாங்கிய புத்தகங்கள் இலவசமாக கொடுக்கப்பட்டது .
பின்
, விழாவில் பங்கேற்றவர்கள் , பெரியார் கருத்துக்களை கொண்டு செல்ல தாம் என்ன செய்ய
போகிறார்கள் , செய்தார்கள் என்பதை உணர்ச்சிபூர்வமாக விளக்கினர்.கிராமப்புறங்களில் பெரியார் கருத்துக்களை கொண்டு செல்லுதல் , சுணக்கமின்றி தொடர்ந்து போராடுதல் , பெரியார் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் இனத்தில் பாகுபாடு காட்டாமல் இருத்தல் ,பெரியார் கருத்துக்களை கலையாக, சித்திரங்களாக , கதையாக கொண்டு செல்லுதல் , இளைஞர்கள் பெரியாரை படிக்க வேண்டும் , பள்ளிகளுக்கு
பெரியாரின் கருத்துக்களை, திருகுறளோடு சேர்த்து எடுத்து
செல்ல வேண்டும் போன்ற
ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர் .
அவர்கள்
கூறிய கருத்துக்களின் உத்வேகத்தோடு தொடர்ந்து
செயலாற்றும் முனைப்புடன் இணை அமர்வு முடிவு
பெற்றது
வாழ்க
பெரியார் !!! வளர்க
பகுத்தறிவு !!!!