Tuesday, November 28, 2023

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவராக  இருந்தார். அதுமட்டுமில்லாமல்  Daily Journal நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார் .costco வின் Board member களில் ஒருவர்.  ஜனவரி 1 100 வயதை நெருங்க இருந்த நிலையில் இன்று  மறைந்தார்.  

கடினமான வாழ்க்கை இவருடையது. தன் முதல் மகனை நோய்க்க பறிகொடுத்தார், மனைவியும் விவாகரத்து செய்து விட, கண் அறுவை சிகிச்சை தவறானதால் ஒரு கண்ணையும் இழந்தார் . இத்தனை இழப்புகளை தாண்டி ஹார்வேர்ட் பல்கலைகழகத்தில் சட்டம் படித்தார், நமது மிசிகன் UOM ல் கணிதம் படித்தார், பின் கட்டிடக்கலையில் ஆர்வம் கொண்டு ஹார்வேர்ட் பல்கலைகழகத்திற்கு உறைவிடங்களை கட்டினார்.


தனது நண்பர்  Warren buffet டுடன் சேர்ந்து இவர் கட்டி எழுப்பிய பிரம்மாண்டம் தான் Berkshire Hathway . இந்த நிறுவனம் தடம் பதிக்காத தொழில்கள் மிகக் குறைவு. தனது முதலீடுகளை தனக்காக அன்று நிறுத்திக்கொள்ளாமல் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களுக்கு இலவசமாக  சொல்லிக் கொடுத்தார் . இவரைப் பற்றிய புத்தகங்களே ஆயிரக்கணக்கில் உள்ளன. 


 வாழ்க்கையை பற்றிய இவரது தத்துவங்கள் மகத்தானவை . இவர் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய ஜந்து பெரும் உரைகள் Poor charlie Almanac என்ற பெயரில் புத்தகமாக உள்ளது. இது ஒருமுறையாவது படிக்க வேண்டிய ஒன்று. தனது முதலீட்டு கொள்கையிலும் , வாழ்க்கையிலும் எந்த சமரசங்களும் செய்து கொள்ளாதவர் .இவர் வாழ்க்கை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய பாடம். 


அவர் உதிர்த்த முத்துக்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும்  எனக்கு பிடித்தவை சில.


Warren Buffett முதலீட்டாளர்களின் கேள்விக்கு பக்கம் பக்கமாக பதில் சொல்லிவிட்டு  சார்லி என்று இவரது பதிலுக்கு அழைப்பார் .


இவரோ தன் முன்னால் இருக்கும் சாக்லெட்களையும் , cocal cola வையும் ஒரு நன்றாக சாப்பிட்டுக்கொண்டே " I have nothing to add "  என்பார் . பல லட்சக்கணக்கான பேர் பார்க்கும் அரங்கில் அலட்டிக்கொள்ளாமல் கூறும் தைரியம் சார்லிக்கே உரித்தானது.

எப்போது பேச வேண்டும் என்பதைவிட எப்போது பேசாமல் இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தவர் சார்லி.


தங்களுக்கள் முதலீடு சம்மந்தமான விவாதங்களில் Buffet ற்கூ , இவர் சொல்வாராம் . " warren i am right and you are smart .think you will understand"


"For a man with a hammer every problem looks like a nail "


" It takes character to sit with all the cash and do nothing "


" I have the simple rule of  success in fishing  .fish where the fish are "


" I am personally skeptical of the hype that has gone in to artificial intelligence .I think old-fashioned intelligence works pretty well"


தனக்க முன்னால் கேள்வி  கேட்கப்படும் கேள்விகளுக்க அது எவ்வளவு பெரிய ஆள் கேட்டாலும் , எங்கு கேட்டாலும் , தவறு என்றால் இது  முட்டாள்தனமான கேள்வி என்று சொல்லும் துணிச்சல் தான்  சார்லி  . இறுதிவரை அப்படியே இருந்தார்


உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் இவரது இழப்பிற்கு இரங்கல் தெரிவிக்கிறார்கள். 


அதில் சார்லியின் பார்வையில் முட்டாளாகிய நானும் ஒருவன் " Miss you charlie "

Sunday, November 26, 2023

நினைவோ ஒரு பறவை

 மிசிகனி்ல்  இருந்து வரும் கழல்கள் குழுமத்தில் இன்று(Nov 26 2023) நண்பர் தமிழில் புள்ளி வைத்த எழுத்து வராத வார்த்தைகளில் உங்களுக்கு பிடித்த வார்த்தை என்ன என்ற கேள்வியை  எழுப்பினார், 100 க்கும் மேல் பதில்கள் வந்து விழுந்தன , அந்த கேள்வியை சற்று விரிவாக்கி புள்ளி இல்லாத  வார்த்தைகளை கொண்டு எழுதிய கவிதை . ஒற்று இல்லாத வார்த்தை முற்றுப் பொறாது என்பார்கள் . இது ஒரு சிறிய முயற்சி


அலையாட மேலே படகாட

படகோடு துணையாக வலையோசை

வலையோசை கூடவே

கொலுசு மணி

முழு நிலவு  மேகமோடு

கவிபாட

நறுமுகை 

முகமோடு

மதி போக

மதி போன

பாதையோடு

மனகுதிரை

சதிராடி

உறவான

பொழுதுகளை

நினைவோடு

அசைபோட

மனதோடு

வருகிறதே

ஒரு கவிதை



பாவி

Friday, April 7, 2023

Richest man in Babylon -பாபிலோனின் பெரும்செல்வந்தன்

 கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு  முன் (1926 ம் ஆண்டு )  Geroge Samuel Johnson  என்பவரால் எழுதப்பட்டது  " Richest Man  in Babylon "  என்ற இந்த சிறிய புத்தகம் . புத்தகம் சிறிதானாலும் இதில்  உள்ள கருத்துக்களுக்காக  உலகம் முழுவதும்   தனி மனித நிதி மேலாண்மைக்கும் , திட்டமிடலுக்கும்  மிகச் சிறந்த புத்தகமாக  இது  பொருளாதார வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுகிறது .


அப்படி என்ன சிறப்பு என்பதை தெரிந்துகொள்வதற்கு  , ஏறத்தாழ 8000  ஆண்டுகளுக்கு முன் இருந்த பாபிலோன் நகரத்துக்கு நாம் செல்ல வேண்டும் (இன்றைய இராக் தலைநகர் பாக்தாத்  நகருக்கு அருகில் உள்ள   "ஹில்லா " , அன்றைய பாபிலோன்  ) . பாபிலோனின்  தொங்கும்தோட்டம் நாம் அறிந்ததே ,  தோட்டம் மட்டும் இல்லை , வானவியல் , அறிவியல் , கட்டிடக்கலை , பாலைவனத்தில் விவசாயம் ,முக்கியமாக செல்வம் என அனைத்திலும் சிறந்து விளங்கிய நகரம் பாபிலோன் .


இத்தனைக்கும் பூகோள ரீதியாகவோ , அரசியல் ரீதியாகவோ , மண்வளத்திலோ , வணிகரீதியாகவோ  சிறப்பு பெற்ற நகரம் இல்லை அது , ஆனாலும் செல்வத்தில் கொழித்த நகரம் , எப்படி இது சாத்தியமானது ?  ஏன் எனில் , பணத்தை கையாள்வதில் அந்த நகரத்து மக்கள் சிறந்தவர்களாக இருந்துள்ளனர் , பணத்தை என்ன செய்ய வேண்டும் என்று அனைவருக்கும் சொல்லப்பட்டிருக்கிறது , என்ன சொன்னார்கள் என்பதையும் காகிதம் கண்டுபிடிப்பதற்கு  முன்னே  களிமண் தட்டிகளில் எழுதி நூலகமாக வைத்துள்ளனர் . அகழ்வாராய்ச்சியில்  ஆயிரக்கணக்கான எழுதப்பட்ட  தட்டிகள் எடுக்கப்பட்டு , அதில்  இருந்ததை தொகுத்துள்ளதாக  கூறுகிறார் நூலாசிரியர் .


பாபிலோனில் உள்ள இரண்டு  நண்பர்கள்  என்ன செய்தாலும் , எவ்வளவு உழைத்தாலும் பணம் நமக்கு தங்குவது இல்லையே என அவர்களுக்குள் புலம்புகிறார்கள் ,   பணம் கையில் தங்குவதற்கு என்ன ரகசியம்  என தெரிந்துகொள்ள  கிளம்புகிறார்கள்


இன்னொரு புறம்  பாபிலோனின் அரசன் , மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று  அமைச்சரவையில் விசாரிக்க , மக்களிடம் பணம் இல்லை என்று பதில் வருகிறது , அரசனுக்கோ அதிர்ச்சி  ,சிறிது காலம் முன்புதான் மிகப் பெரிய பொருட்ச்செலவில்  அன்றைய உலகின் உயரமான மதில் சுவரை கட்டி முடித்திருந்தான் (நகரத்தை சுற்றி 140  அடி சுற்றுச்சுவர் ) , இதன் மூலமான வேலை வாய்ப்பு , பணப்புழக்கம் என  மக்களிடம் பணம் இருக்க வேண்டுமே ஏன் இல்லை என்று  கேட்கிறான் .


மக்கள் வந்த பணத்தை  செலவழித்து விட்டார்கள் , அவர்களுக்கு சேமிக்க தெரியவில்லை என்று பதில் வருகிறது .


புத்திசாலி அரசனின் அடுத்ததாக  , யார் இந்த நகரத்தின் பெரிய செல்வந்தன் நம் ஆர்கத் (Arkad ) தானே எனக் கேட்கிறான் ,ஆம் என்று அமைச்சர்கள் சொல்ல , முதற்கட்டமாக   நம் மக்கள்  நூறு பேரை தேர்ந்தெடுங்கள்,  பணத்தை எவ்வாறு கையாளுவது என்பதை பற்றி  ஆர்கத்தை படம் எடுக்க சொல்லலாம் , அவன் புத்திசாலி தனக்கு தெரிந்ததை எல்லோருக்கும் சொல்லிக் கொடுப்பான் என முடிவு செய்கிறான் ,


நாம் முன்பு  விட்டுவிட நண்பர்களும் , அவர்களுடைய  சிறு வயது நண்பன் , இப்போதைய பெரும் பணக்காரன் ஆர்கத்தை தேடித்தான் வருகிறார்கள் .


 அன்றைய பாபிலோனின்  பெரும் செல்வந்தனாக இருந்த ஆர்கத்  மீது அரசன் முதல் , ஆண்டி  வரை அனைவருக்கும்  மிக ஆச்சிரியம் , ஆர்கத் செல்வ குடும்பத்தில் பிறக்கவில்லை , நூலகத்தில் மண்  தட்டிகளை செய்யும் வேலை தான் செய்தான் , அதில் அப்படி ஒன்றும்  பெரிய வருமானம் இல்லை , மிகவும் நாணயமானவனும் கூட , எப்படி பொருள் சேர்த்தான் ?


அர்க்கத் அரசன் சொன்னபடி , 100  பேரை அழைத்து , நண்பர்களே  பணம் சேர்ப்பது ஒன்றும் , ரகசியமோ , பெரிய சாதனையோ  இல்லை ,  எனக்கு என்ன செய்வது என்று , பசீர் என்ற  முதியவர் சொன்னதை உங்களுக்கு சொல்கிறேன் , அவரும் பெரிய செல்வந்தர் , நூலகத்திற்கு வந்த அவரிடம் நான் எப்படி பணம் சேர்ப்பது என்று கேட்க மூன்று ஆண்டுகள் சொல்லி கொடுத்தார் , நான் அவற்றை உங்களுக்கு சொல்கிறேன் என தனது பாடத்தை ஆரம்பிக்கிறான்


அர்க்கத் பெரும்பாலும் நம்மிடம் இருக்கும்  ஒல்லியான பணப்பையை குண்டாக்க சொன்ன ஏழு  வழிகள்(இவற்றை கதைகளாக விரிவாக சொல்கிறார் , இந்த கட்டுரை புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இல்லை , சுருக்கம் என்பதால் , சுருங்கிவிட்டது )


 >சம்பாதித்த பணத்தில் 10 சதவீதமாவது சேமியுங்கள் .

>செலவழிப்பதை கட்டுப்படுத்துங்கள்

> சேர்த்ததை பெருக்குவதற்கு வழி செய்யுங்கள் (வட்டி குட்டி போடும் , குட்டி வட்டி போடும் , குட்டி மறுபடியும் குட்டி போடும் , அது வட்டி போடும் , குட்டி ... வேண்டாம்  முதல் குட்டியில் அனைவருக்கும் புரிந்திருக்கும் )

> சேர்த்த பணத்தை  இழக்காதீர்கள் (  நம்ம "warren buffet "  தாத்தாவும் இதைத்தான் சொல்கிறார்  "Never lose your  money " )


> உங்களுக்கு சொந்தமாக ஒரு வீட்டை வைத்துக்கொள்ளுங்கள் , அது தரும் நம்பிக்கை அலாதியானது

> எதிர்கால வாழ்விற்கும் , ஓய்வுக்கும் பணம் தொடர்ந்து வருவதற்கு வழி செய்யங்கள்

> வருமானத்தை பெருக்குங்கள் .


அர்க்கத் சொன்னதை மக்கள் கடைபிடிக்க ஆரம்பிக்கிறார்கள் , சிறிது காலம் சென்று , அர்க்கத்தின் மகன்  தனியாக தொழில் தொடங்க வேறு நகரத்துக்கு சென்று , ஒன்றை பத்து ஆக்குகிறேன் என முதலீடு செய்து ( இன்றைய  BITCOIN  போல )  அனைத்தும் தொலைத்து நிற்கையில்  , தனது அப்பா தங்கத்தை ஈர்க்க சொல்லிக் கொடுத்த வழிகளை எண்ணிப்  பார்க்கிறான் , அதனை கடைபிடித்து மீண்டு வந்து மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறான் , அந்தப்  பாடம் (தங்கத்திற்கு பதில் பணமாக நாம் வைத்துக் கொள்ளலாம் )



> தனது  வருமானத்தில் 10 % சேமிப்பவன் கையில் தங்கம் சேரும்

> கையில் உள்ள தங்கத்தை , தனக்காக   வேலை வாங்க தெரியும்  புத்திசாலியிடம் தங்கம் சேரும்

>பொறுமையாக , நீண்டகாலத்திற்கு , எச்சரிக்கையாக முதலீடு செய்பவனிடம் தங்கம் சேரும்

>தெரியாததை  செய்தால் தங்கம் ஓடிவிடும்  தனக்கு தெரிந்த முதலீட்டை செய்பவனிடம் தங்கம் சேரும் ( youtube இல் சொன்னதை கேட்டு பங்கு வாங்காதீங்க ,படித்து தெரிந்து கொண்டு முதலீடு  செய்யுங்க என படிக்கவும் )

> ஒரு ரூபாய் போட்டால் நூறு ரூபாய் எடுக்கலாம் என  முதலீடு  செய்தால்  தங்கம் கையை விட்டு ஓடி விடும் (quest coin , ஈமு கோழி , ஒரு லட்சத்திற்கு மாதம் பத்து சதவீத வட்டி பங்குச்  சந்தையில்  சம்பாதித்து கொடுக்கிறோம் போன்றவைகள் )


பின் பாபிலோனில் காலம் செல்கிறது , மக்கள் பணத்தை  கையாள்வதில் புத்திசாலிகளாக மாறுகிறார்கள் , அவர்களில்  இருந்து  தங்கத்தை வட்டிக்கு விடும் ஒருவர் ,  "ஐயோ போச்சே!!! என புலம்புவதை விட  ,பணத்தில்  ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது "  என தன் அனுபவங்களை  சொல்கிறார் .



பாபிலோனின் 140 அடி சுவர் எப்படியெல்லாம் எதிரிகளிடமிருந்து மக்களை காத்ததோ அதுபோல நாம் நம்மை சுற்றி  நமது முதலீடுகளின் மூலம் ஒரு சுவரை கட்டி காத்துக்கொள்ளவேண்டும் என்று விளக்கப்படுகிறது .


நல்ல குடும்பத்தில் பிறந்து , பணத்தை தவறாக கையாண்டதால்  அடிமையாக விற்கப்பட்டு , தன் உறுதியான நிலைப்பாட்டால் , கடனை அடைத்து , சுதந்திர மனிதனான ஒட்டக வியாபாரியின் கதை நமக்கு சொல்லப்படுகிறது  ( கடன் இருந்தால்  வருமானத்தில்  20 % கடனை அடைக்க முதலில் எடுத்து வையுங்கள் , பட்டினி கிடந்தாலும் 70 % பணத்தில் வாழுங்கள் , 10 % சேமியுங்கள் )


இதனோடு புத்தகம் முடிகிறது ,  பணம் , பணத்தை கையாள்வது எப்படி , எவ்வாறு  முதலீடு செய்வது என எந்தப்  பள்ளியும் , கல்லூரிகளும் , தொழில் படிப்புகளும் , நாம் வேலை செய்யும் நிறுவனுங்களும் , நமக்கு சொல்லிக்  கொடுப்பதில்லை , பணம் இருப்பவன் தொடர்ந்து பணக்காரன் ஆகிறான் , ஏழை மாடு  மாதிரி உழைத்தாலும்  மேலும் ஏழை ஆகிறான் , உலகம் முழுவதும் இதே   நிலைமை தான் . நமக்கு சொல்லி கொடுப்பதற்கு இந்த மாதிரி அரிதாக சில புத்தகங்களே உள்ளன


பொருளாதார மந்த நிலை வரும் என்று உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும்  இந்த சூழ்நிலையில் , இம்மாதிரி புத்தகங்களை படித்து நம்மையும் , நமது குடும்பத்தையும் ஓரளவேனும் காத்துக் கொள்வது நல்லது,  இல்லையென்றால் இருக்கவே இருக்கு   " YOLO  வழி " .

Tuesday, February 14, 2023

காதலாகி பாத்திரம் கழுவி!

 சண்டையிட்டு
 சமாதானாம் அடைந்து 
 சமாதானத்தில் ஒரு 
 சண்டையிட்டு 
 இப்போது 
 சண்டையிலா
 சமாதானத்திலா? 

 "லூசு மாதிரி எப்ப பார்த்தாலும் கிறுக்கிட்டு இருக்காம வந்து பாத்திரம் கழுவி தாங்க"

 ரைட்டு!!!! 

 அனைவருக்கும் காதலர்தின வாழ்த்துகள்.

Friday, June 10, 2022

மிச்சிகன் கதம்பம் இதழ் - எனது புத்தகங்களை பற்றிய கட்டுரை

ஏதேனும் ஒரு பத்திரிகையில் , குறுக்கெழுத்து போட்டி நிறைவு செய்த்து அனுப்பியதற்கோ, வாசகர் கடிதமாகவோ , நகைச்சுவை துணுக்காகவோ ஏதாவது வகையில் எனது பெயர் ஒரு மூலையில் வந்து விடாதா என்று ஏங்கிய காலங்கள் உண்டு , அந்தக் கனவு கனவாகவே போய்விடும் என்றுதான் நினைத்திருந்தேன் . முதன் முதலில் மிச்சிகனில் இருந்து வெளிவரும் மிச்சிகன் தமிழ் சங்கம் நடத்தும் கதம்பம் இதழில் "தமிழ் தொலைக்காத தலைமுறை நாங்கள் " என்ற தலைப்பில் நடந்த கவிதைப் போட்டியில் தேர்வு பெற்று எனது கவிதை பெயருடன் வந்தது . அதற்கே அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். பின் பெட்னா விழா 2018 சிறப்பு இதழில் எனது கட்டுரை "உயிராயுதம் " வெளியானது , அதன் பின் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட தோலர்ங்க இணைந்து "The common Sense " மாத இதழின் ஆசிரியர் குழுவில் என்னாலான சிறு பங்கெடுப்பும் , அவ்வப்போது அதில் கட்டுரையும் எழுதி வந்தேன் . முதன் முதலில் நன் எழுதிய புத்தகங்களுக்காக நான் எழுதிய கட்டுரை வெளியானது போய் என்னைப் பற்றிய கட்டுரை வெளியாகி உள்ளது , தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு , ஊக்கப்படுத்தும் விதமாக கட்டுரை வெளியிட்ட மிச்சிகன் தமிழ்சங்கத்திற்கும் , தமிழ்சங்கத்தின் கதம்பம் ஆசிரியர் "ரேகா " அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
எல்ஜராது “ செர்கே , கூட்டிக்கொண்டு போன இடம் ஒரு பொட்டல் காடாக இருந்தது , மரங்களில் ஒரு இலை கூட இல்லை , புதர்கள் கூட இலை இல்லாமல் வெறும் குச்சிகளாய் இருந்தது . "ஒரு ஹாரர் மூவி பார்க்கிற மாதிரி இருக்கு, ஒரு இலை கூட மீதியில்லை, இப்படியுமா சாப்பிடும்? என்றான் சம்பத் . கண்ணுக்கெட்டிய தூரம் வரை மண்ணாக இருந்தது . "ஏன் மண் கூட நிறம் மாறி ஒரு மாதிரி பழுப்பு நிறத்தில் இருக்குது " என்று கேட்ட மதிக்கு "நீங்கள் காரில் இருந்து பார்ப்பது மூவீ இல்லை, ட்ரைலர் தான், இறங்குங்க முழுப்படத்தையும் பார்க்கலாம் “என்று காரை நிறுத்தினான் செர்கே. சுத்தியும் கிலோமீட்டர் கிலோமீட்டர் வெறும் பழுப்பு மணலாக உள்ள இடத்தில் என்ன படம் காண்பிக்க முடியும் என்று இறங்கினர் மதியும் , சம்பத்தும் . இறங்கியதும் காலில் மிதிபட்டு மண் தெறித்தது , எதனால் என்று நன்றாக பார்த்த மதியழகனுக்கும் , சம்பத்திற்கும் உடல் சிலிர்த்து அடங்கியது . மண்ணிற்கு பதில் , நூறில் , ஆயிரங்களில் , லட்சங்களில் , கோடிகளில் , கணிக்கிட முடியாத அளவு எங்கு காணினும் கொத்து கொத்தாக கிடந்தன “egg pod” என்று சொல்லப்படும் வெட்டுக்கிளியின் முட்டைகள் “. மிச்சிகன் நோவி நகரில் வசிக்கும் வினோத்சந்தர் எழுதிய நாவல் "எல்ஜராது" - "Scientific Thriller "- வகையில் ஆப்பிரிக்காவின் நாடுகளை கதைக்களமாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் ஆகஸ்ட் 2020 இல் "Amazon Kindle " தமிழ் மின் நூல்கள் கிடைக்கும் நாடுகளில் வெளியிடப்பட்டது . இந்தக் கதை எகிப்தை தாக்கிய 10 பெரும் கொள்ளை நோய்களுள் ஒன்றாக “Book of Exodus” இல் சொல்லப்பட்டிருக்கும் ,பைபிளிலும் , குரானிலும் கூட குறிப்பிடப்பட்டிருக்கும் படை வெட்டுக்கிளிகளை பற்றியது .இந்த படை வெட்டுக்கிளிகள் எப்படி உருவாகிறது , தன்னை எப்படி மாற்றிக் கொள்கிறது ,கூட்டாக எவ்வாறு செயல் படுகிறது என்பதை விரிவாக இந்த நாவல் சுவையான தகவல்கள் மூலம் சொல்கிறது . வெளிவந்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆன நிலையில் , "சிங்கை அரசு நூலகம் - Singapore Public Library " சார்பில் தொடர்புகொண்டு , இந்த நாவலை அச்சு புத்தங்களாக நூலகத்தில் வைக்க வாங்கி உள்ளனர் . வினோத் , எட்டு விதமான கதைகளையும் , அது தரும் எட்டு அனுபவங்களையும் கொண்ட "8 திசை " என்னும் சிறுகதை தொகுப்பையும் "Amazon கிண்டல்" லில் வெளியிட்டுள்ளார் ,நகைச்சுவையும் , நட்புமே அனைத்து கதைகளின் அடிப்படை . இவை தவிர கவிதை , கதை , கட்டுரை , நேர்காணல் என நூறுக்கும் அதிகமான பதிவுகளை கொண்ட இவரின் வலைதளம் paavib blogspot com வினோத் சந்தருக்கு மிச்சிகன் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக நாவல் தேர்வானதுக்கும் , மேலும் பல கதைகளை எழுதுவதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
Readers Reviews : எல்ஜராது - பயங்கரம் , எப்படி ? இப்படி எல்லாம் இருக்கானு யோசிக்கும் போது அய்யோனு இருக்கு. அந்த நாட்டு மக்களுக்கும் நம் நாட்டில் பஞ்சாப் மக்களுக்கும் எவ்வளவு கஷ்டம் அதை கதையில் சொன்ன விதமும் வெட்டுகிளின் வகைகளும் அதன் வண்ணங்களும் நன்றாக உள்ளது இன்னும் நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள். -Vadivelu Amazon என்ன அப்படி பெருசா இருக்க போகுதுனு தான் படிக்க ஆரம்பித்தேன் , எல்ஜராது அருமை - கோபி திருப்பூர் நான் படித்தை பார்த்த என் மகள் கதை கேட்க , எனது மகளுக்கு வெட்டுக்கிளிகள் , கரப்பாண்பூச்சிகள் என இந்த நாவல் மிகவும் பிடித்து போனது - பாலா சென்னை The Author mentioned his thoughts and experiences that stays fresh in 90's kids mind. He gave that experiences in an expressive blend, at Various stages of life from a school goer till he became a dad. Especially, The Story of The Daughters Questions are at top. Reader can experience the feeling like a great foodie....by the stories of Ladoo and Karikaalam. -bkan Amazon I enjoyed reading all the stories especially 'Kevikkenna Pathil' story's golden conversation between dad and young daughter. Dad always the first hero for their daughter. Chandar tried to answer his daughter's every questions. but, daughter gives different definition. , I have to tell this 'Polar vertex' No way, extreme cold temperature touched in North America. Way he explained is very good .I liked it!. – Kindle Customer Amazon

Friday, March 18, 2022

படித்ததில் பிடித்தது

 

   RUDYARD KIPLING   

If you can keep your head when all about you   
    Are losing theirs and blaming it on you,   
If you can trust yourself when all men doubt you,
    But make allowance for their doubting too;   
If you can wait and not be tired by waiting,
    Or being lied about, don’t deal in lies,
Or being hated, don’t give way to hating,
    And yet don’t look too good, nor talk too wise:

If you can dream—and not make dreams your master;   
    If you can think—and not make thoughts your aim;   
If you can meet with Triumph and Disaster
    And treat those two impostors just the same;   
If you can bear to hear the truth you’ve spoken
    Twisted by knaves to make a trap for fools,
Or watch the things you gave your life to, broken,
    And stoop and build ’em up with worn-out tools:

If you can make one heap of all your winnings
    And risk it on one turn of pitch-and-toss,
And lose, and start again at your beginnings
    And never breathe a word about your loss;
If you can force your heart and nerve and sinew
    To serve your turn long after they are gone,   
And so hold on when there is nothing in you
    Except the Will which says to them: ‘Hold on!’

If you can talk with crowds and keep your virtue,   
    Or walk with Kings—nor lose the common touch,
If neither foes nor loving friends can hurt you,
    If all men count with you, but none too much;
If you can fill the unforgiving minute
    With sixty seconds’ worth of distance run,   
Yours is the Earth and everything that’s in it,   
    And—which is more—you’ll be a Man, my son!

Sunday, January 30, 2022

Bronze Clipper Barber Shop -அரை நூற்றாண்டு அனுபவம்

 முடி வெட்டிக்கொள்வது என்பது  நினைவு தெரிந்த நாளில் இருந்தே இருக்கும் ஒரு அருமையான  அனுபவம் . பெரும்பாலும் வீட்டில் இருந்து நடக்கும் தூரம் இருக்கும் கடைக்கே கூட்டிப்போவார்கள் என்றாலும் அப்பாவுடன் பேசிக்கொண்டே நானும் எனது தம்பியும் போன நாட்கள் சுகமானவை .  


கடையின் பெஞ்சுகளில் இறைந்து கிடைக்கும் நாளிதழ்களும் , அதன் பக்கங்களை தேடித்  தேடி சேர்த்து படிப்பதும்  , இவை நடுவே  நிற்காது ஒலிக்கும் இளையராஜா பாடல்களும் , எங்கு திரும்பினாலும் சுவரில் நிறைந்து இருக்கும் கண்ணாடிகளும் , தரையில் இருக்கும் முடிகளில் கால் படமால் குதித்து, சுத்தும் நாற்காலியில் உட்காரும் சிறிய சாதனையும் , முடிக்கு தண்ணீர் தெளிக்கும் போது வரும் சிலிர்ப்பும் , சீப்பும் , கத்திரிக்கோலும் காதருகே உரசுவதால் வரும் சத்தத்தில் உண்டாகும் சிலிர்ப்பை தாண்டிய கிறக்க நிலையும்,  முடிவெட்டிக் கொள்ளும்போது மட்டுமே கிடைக்கும் அரிய அனுபவம் .


நாட்கள் செல்ல செல்ல அனைத்தும் உருமாறிப் போனதில்  , முடி வெட்டுவதும் மாறிப்போனது , அமெரிக்கா வந்தபின் (இப்போது இந்தியாவிலும் ) கத்திரிக்கோல் சத்தமே கேட்க முடியாமல் போனது  .முடி வெட்டும்போது  "கிர் ,கிர், கிர்" என  கேட்கும் இயந்திர சத்தம்  தொடங்கிய  வேகத்திலேயே  முடிந்து விடும் .


முடி வெட்டிய திருப்தியே இருக்காது . "இப்பத்தாண்டா உட்கார்ந்தேன்,  அதுக்குள்ள எந்திரிக்க சொல்லறீங்க "என்று கேட்டால் , பிறகு தலையில் முடி வளரும் வரை கண்ணாடியில்  பார்க்க முடியாது ,போட்டு கரண்டி விடுவார்கள் .மொட்டை அடித்து ஒருவாரம் ஆன அளவுதான் முடி இருக்கும் .


பழைய அனுபவம் திரும்பவும் கிடைக்க  நானும்  மாற்றி மாற்றி கடைகளுக்கு சென்று பார்த்து விட்டேன் . மத்திய கிழக்கு  நாட்டினர் வைத்திருக்கும் கடைகளில் சிறிது இந்த அனுபவம் கிடைக்கும் ஆனால் அதற்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தேடிச் செல்ல வேண்டும் . நான் வசிக்கும் இடத்தில இருந்தும் குறைந்தது ஒரு மணிநேரமாவது காரில் சென்றால் அங்கு போகலாம் .போக வர , அங்கு செலவிடும் நேரம் என குறைந்தது  மூன்று மணிநேரமாவது ஆகும் என்பதால்  "கிர் கிர் கிர் " சத்ததுடன் ஐந்து நிமிடம் செலவிட்டு வந்தேன் .





இந்த நிலையில்  " Barber shop " என்று மட்டுமே பெயர் கொண்ட ஒரு கடையை  காண நேர்ந்தது . விதவிதமாய் முடிவெட்டும் கடைகளுக்கு  பெயர்கள் உள்ள அமெரிக்காவில் இப்படி ஒரு இடமா ? என்னதான் இருக்கும் என்று உள்ளே போனால்   ஒரு அறுபது வருடம் பின்னால் போன அனுபவம்  , காலச்சக்கரம் அந்த கடைக்குள் சுழலவே இல்லை . 1960  களில் அமெரிக்க முடிவெட்டும் கடைகள் இப்படித்தான் இருந்திருக்கும் , இப்பொழுதும் அந்த கடை அப்படியே உள்ளது .








                                             



கடை முழுவதும் மர சுவர்கள் , வருபவர்கள் அமருவதற்காக மர நாற்காலிகள் , நல்ல எஃகில்  நகர்த்த முடியாத அளவு  சுழலும் நாற்காலிகள் முடி வெட்டுவதற்கு , இடைவெளிவிட்டு நாற்காலிகளுக்கு முன் அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிகள் , அவைகளுக்கு  இடையே விளக்குகள் , முன்பு  அதனில் எண்ணெய்  ஊற்றி வைத்திருந்து விளக்கு எரிப்பார்களாம்  , இப்பொழுது அலங்காரமாய் இருக்கிறது. 


சுவரில் ஆங்காங்கே மாட்டப்பட்டிருக்கும் பல்வேறு சமயங்களில் கொடுத்த பட்டயங்கள் , கோல்ப் குச்சிகள் என அது ஒரு  சிறு உலகம் .இந்தக்கடை பழமை மாறாமல் இருப்பது மட்டும் இல்லாமல் மெருகு குறையாமல் இருக்கிறது . எந்த அளவு பராமரித்தால் இப்படி இருக்கும் என வியப்பாக இருந்தது .


இதை கடையின் ஈர்ப்பு அங்கு உள்ள தொலைக்காட்சியில் ஓடும் கருப்பு வண்ண பழைய படங்கள் .


இரண்டு இளைஞர்கள்  கடையில் இருக்கிறார்கள்  . வயது குறைந்த Orie  இதன் உரிமையாளர் இவருடன்   சற்றே வயது அதிகமான john  . Orie யின் வயது அதிகமில்லை 86 தான். John னின் வயது 68 . நான் தான் வயது குறைவனானவன் என்று சொல்லி சிரிக்கிறார் Orie .


முழுக்கை சட்டையுடன் கழுத்து வரை பட்டன் போட்டிருக்க , அதை டக்கின் செய்து , பெல்ட் , வாட்ச் , லெதர் காலனி என  போர்டு மீட்டிங்கிற்கு போவது போல முடி வெட்ட வரும் வாடிக்கையாளர்களை இங்குதான் பார்க்க முடியும் . நான் பார்த்த வரை இந்த கடைக்கு வருபர்கள் அனைவருமே இப்படித்தான் வருகிறார்கள் .குறைந்தபட்சம் 60  வயது இருக்கும் அமெரிக்கர்கள் .


என்ன மாதிரி வெட்ட வேண்டும் என்று  கேட்டு,நாற்காலியில் அமரச் செய்து  , பிளாஸ்டிக் குடுவையில் உள்ள தண்ணீரை பீச்சுகிறார் ஜான் . சிறுவயதில் ஏற்பட்ட அதே சிலிர்ப்பு .


"scissor or machine"  என  அவர் கேட்டதும் , "scissor, scissor, scissor  " என்று மூன்று முறை கூறி விட்டேன் .


காதருகே சீப்புடன் , கத்திரிக்கோல் உரசும் சத்தம் , முடி வெட்ட வெட்ட தலையை சீப்பால் அவர் சீவ ,நினைவுகள் பின்னோக்கி போக  பத்து வயது சிறுவனாக அமர்ந்திருந்தேன் .


அவர்கள் இருவருடன் உரையாடல் ஆரம்பித்தது , எதிர் இருந்த தொலைக்காட்சியில்  1950 களின் கருப்பு வண்ண படம் ஓடிகொண்டுஇருந்தது . இரண்டு காவலர்கள் இடிந்திருந்த வீட்டில் இருந்து ஒரு சிறுமியை   எடுத்து வந்து காரில் போனார்கள் , அவர்களில் ஒருவர் கதாநாயகன் .குழந்தையின் பெற்றோரை காணவில்லை , எதுவோ இழுத்துக்கொண்டு போயிருந்தது , சிறுமிக்கு  சொல்லத் தெரியவில்லை , பிரமை பிடித்து  பேச்சு போய்விட்டிருந்தது .




நான் இப்படி ஒரு கடையை அமெரிக்காவில் பார்த்தது இல்லை  என்று  சொன்னதும் , இதே இடத்தில் நான் 51  வருடங்களாக கடை நடத்துகிறேன் என்றார் ஓரி .


மிச்சிகனில் இந்த வருடம் அடிக்கும் குளிர் , கடந்த வருடங்களில் வந்த பனிப்புயல்கள்    என  பேச்சு கொடுத்துக்கொண்டே  பொறுமையாக ஒவ்வொரு  முடியாக எடுத்து வெட்டிக்கொண்டிருந்தார் ஜான்.


படத்தில் , சிறுமியின் பெற்றோரை எதுவோ ஒரு விலங்கு இழுத்து போய்விட்டிருக்கிறது என காலடித் தடத்தின் மூலம் கண்டு பிடித்தார்கள் . அது புது மாதிரியாக இருக்கவே , நாட்டின் மூத்த அறிவியல் அறிஞர் வந்து பார்த்து அவருக்கும் பிடிபடாமல் போக , ஆப்பிரிக்காவில் விலங்குகளை ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கும் அவரின் மகளை அழைக்கிறார்  ஹீரோயின் அறிமுகம் .


அடுத்தது என்ன என்று பார்க்கையில் ,தொலைக்காட்சியை  மறைத்துக்கொண்டு இரண்டு அடி முன் சென்று  என் தலை வரை குனிந்து , சீப்பை வைத்து அளவு பார்க்கிறார் ஜான் . திருப்தி அடையாமல் மறுபடியும் வெட்ட ஆரம்பித்தார் .


நான் 1984 இல் தான் பிறந்தேன் என்பதை  கேட்டு அறிந்ததும் , 80 கள் தான்  அமெரிக்காவின் , அமெரிக்க படங்களின், அமெரிக்காவில் வெளிவந்த பாடல்களின்  பொற்காலம்  என்று ஓரியும் , ஜானும் ஒருமித்த கருத்தில் சொன்னார்கள்,   . நமது தமிழ் படத்தை போல இங்கயும் ஒரு இளையராஜா இருந்திருப்பார் போல .


படத்தில் கதாநாயகி புயலாக வேலை செய்து , அந்த விலங்கு ஏதோ ஒரு காரணத்தால் மிகப்பெரிதாக வளர்ந்த எறும்பு என்று கண்டுபிடிக்கிறார் , அது மனிதர்களை சிப்ஸ் சாப்பிடுவதை போல தின்று எலும்புகளாக துப்புகிறது , அதன் கூட்டை கண்டுபிடித்து அழித்து விட்டு  பிரச்னை இல்லை என்று நினைக்கையில் , முட்டை ஓடுகளை வைத்து  இன்னும் நிறைய எறும்புகள்  இருக்கின்றன அன்று கண்டு பிடிக்கிறார் கதாநாயகி .

 அதுவும் பிறந்தவை ராணி எறும்புகள் என்று அவர் கண்டு பிடித்ததும் உயர்மட்ட ராணுவ கூட்டம் கூட்டப்படுகிறது .


மறுபடியும் தொலைக்காட்சியை மறைத்துக்கொண்டு ஜான் . இந்த முறை அளவு பார்த்ததில் அவருக்கு முழு திருப்தி .


"எப்படி ? " என்று அவர்  கைக்கண்ணாடியை   கொண்டு வந்து காண்பிக்க எனக்கு எந்திரிக்கவே மனசு இல்லை . அருமையாக உள்ளது என்று சொல்லிவிட்டு ."முகச்சவரம் செய்வதாக போட்டிருக்கிறதே செய்வீர்களா ?" என்று கேட்டேன் .


எனக்கு கை நடுங்கும் அதனால் ஓரி தான் செய்வார் என்றார் ஜான் .


86  வயது மனிதர் கத்தி பிடித்து முகச்சவரம் செய்கிறாரா ? என்று  ஆச்சிரியமும் கூடவே  சிறிது  பயமும்  இருந்தாலும் ஓரியிடம் சென்று அமர்ந்தேன் .


சுழலும் நாற்காலியை அப்படியே மடக்கி மல்லாக்க போட்டு , மிகவும் சூடான துண்டை முகத்தில் போட்டு ஐந்து நிமிடம் விட்டு விட்டார் . வெளிய அடிக்கும் குளிருக்கு மிக இதமாக இருந்தாலும் படத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்க முடியவில்லை என ஒரு சிறு கவலை .


அந்த கவலையை போக்கும் வண்ணம் , படத்தில் வரும் வசனங்களை மாறி மாறி சொல்லிக்கொண்டு இருந்தனர் ஓரியும் , ஜானும் . எத்தனை தடவை பார்த்திருப்பார்களோ தெரியவில்லை . தற்போதைய படங்களில் வரும் கதாநாயகியின் பாத்திர படைப்பு பழைய காலங்கள் போல  வலிமை வாய்ந்ததாக இல்லை என்ற கருத்தையும் பதிவு செய்தனர் .


பின்  சோப்பை தேய்த்து அவர் சவரம் செய்ய, அவர்  கையில் துளி நடுக்கம் இல்லை . கத்தியை வைத்ததும் தெரியவில்லை எடுத்ததும் தெரிய வில்லை . மிகவும் மென்மையாக சவரம் செய்வதே  தெரியாமல் செய்து முடித்தார் .அப்படி ஒரு தொழில் நேர்த்தி  .


                                                         Mr. Orie 



                                                        Mr,John




நாற்காலியில் இருந்து எழுந்து படத்தை பார்க்க , ராட்சச எறும்புகள்  ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தன . படத்தை  மீறி  எப்படி இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார் என்ற ஆவல் உந்தித்தள்ள , அவரிடமே கேட்டேன் ,  "உங்கள் இளைமையின் ரகசியம் என்ன " ?  என்று . 


அவர்கள் சொன்ன பதிலின் தொகுப்பு .


1. எங்கள் வேலையில் அழுத்தம் என்பது இல்லை .

2.ஒரு நாளின் குறிப்பிட்ட நேரம் மட்டுமே வேலை செய்வோம் , நேரம், காலம் தெரியாமல் நாங்கள் உழைப்பது  இல்லை 

3.எங்கள் வேலையின் நடுவே மீட்டிங் என்பது  இல்லவே இல்லை .

4 . எங்கள் வேலை நாங்கள் எப்போது முடிந்தது என்று சொல்கிறோமோ அப்பொழுதுதான்  முடியும் (There is no Deadline .)

5 . எங்கள் தொழிலை நாங்கள் விரும்புகிறோம் ஆனால் கடையை அந்த நாளில் மூடிவிட்டால் , பின் அதைப் பற்றி கவலை பட மாட்டோம் , மீதி நேரத்தில் எங்களுக்கு பிடித்த செயல்களை செய்வோம் . .

6 . நாங்கள் நிறைய நேரம் நின்று கொண்டு இருப்போம் , நிற்பதோடு இல்லாமல் அசைந்து கொண்டு இருப்போம், எங்கள் வேலையின் தன்மை அப்படி . அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம் .


நான் டென்ஷனாக இருக்கும் ஒரே நேரம் ,நான் இந்த கடைக்கு வாடகை கொடுப்பது தள்ளிப்போகும் போதுதான் , அது எப்போவாவது நடக்கும் என்று சொல்லிச்  சிரிக்கிறார் ஓரி .


நீங்கள்  மிச்சிகனில் இருந்தால் ஒரு எட்டு  Farmington Hills இல் உள்ள இந்த கடைக்கு போய் வாருங்கள் . அவர்கள் இருவரது வயதையும் சேர்த்து 154  வருடங்களுக்கான உலக அனுபவங்களின் தொகுப்பும் கூடவே போனசாக முடி வெட்டுவதும் நடக்கும்.

தொழிலை வைத்து மனிதர் இல்லை , உயரிய ஆளுமைகள் நம்மிடம் எங்கேயும் இருக்கலாம் , நாம் தான் அதை பல சமயங்களில் உணருவதில்லை .


சொல்ல மறந்து விட்டேனே நன் பார்த்த அந்த படம் 1954 ல் வெளிவந்த  Science  fiction Horror திரைப்படம் "Them ". 








நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...