மிசிகனி்ல் இருந்து வரும் கழல்கள் குழுமத்தில் இன்று(Nov 26 2023) நண்பர் தமிழில் புள்ளி வைத்த எழுத்து வராத வார்த்தைகளில் உங்களுக்கு பிடித்த வார்த்தை என்ன என்ற கேள்வியை எழுப்பினார், 100 க்கும் மேல் பதில்கள் வந்து விழுந்தன , அந்த கேள்வியை சற்று விரிவாக்கி புள்ளி இல்லாத வார்த்தைகளை கொண்டு எழுதிய கவிதை . ஒற்று இல்லாத வார்த்தை முற்றுப் பொறாது என்பார்கள் . இது ஒரு சிறிய முயற்சி
அலையாட மேலே படகாட
படகோடு துணையாக வலையோசை
வலையோசை கூடவே
கொலுசு மணி
முழு நிலவு மேகமோடு
கவிபாட
நறுமுகை
முகமோடு
மதி போக
மதி போன
பாதையோடு
மனகுதிரை
சதிராடி
உறவான
பொழுதுகளை
நினைவோடு
அசைபோட
மனதோடு
வருகிறதே
ஒரு கவிதை
பாவி
No comments:
Post a Comment