Saturday, May 19, 2018

நம்பிக்கை மனிதர்கள் 3 - அ. அருள்மொழி!!!

அ. அருள்மொழி  - A . Arulmozhi 

சேலத்தில் பிறந்த இவர்  , திராவிட இயக்கத்தில் பற்று கொண்ட , தமிழ் புலவரான  தன் தந்தையால்  தமிழ்  பற்றுடன், திராவிடப்  பாரம்பரியத்தையும் கற்று  வளர்ந்தவர் . மிகச்சிறு வயதிலேயே மேடைகளில் பேச்சாளராக தொடங்கிய இவர்    பெண்கள் எனில் பக்தி , சினிமா , அழகு  என்று இருந்த  பிம்பத்தை உடைத்து   பகுத்தறிவு , நாத்திகம் ,  பெண்ணியம் , கடவுள் மறுப்பு , ஜாதி மறுப்பு  என்று  மாறுபட்ட தளங்களில்  தவிர்க்க முடியாத தாக்கத்தை  ஏற்படுத்திக்கொண்டிருப்பவர் .  

தனது கல்லூரி  காலத்தில் இருந்து போராட்டக்களத்தில் இருக்கும் இவர் உயர் நீதிமன்ற  வழக்கறிஞர்  ,  திராவிடர் கழக பிரசாரச் செயலாளர் .  சமூக ஆர்வலர் , ஈழப்பிரச்சனை பற்றி  தொடர்ந்து  மேடைகளில் , பொதுக்கூட்டங்களில்  குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர்  . பெண்களின் உரிமைக்காகவும் , பெண்கள் மீதான அடக்குமுறைக்கும் தொடர்ந்து போராடும் சமூகப் போராளி . 

சமூக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு தயங்காமல் தன் கருத்துக்களை முன் வைப்பவர் , பெண்ணியம் சார்ந்த  பயிற்சிப் பட்டறைகளில் கருத்தாளராக தொடர்ந்து செயலாற்றும் இவர் , தொழில்  முறையாக சென்னை  உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக  கடந்த இருவத்தியெட்டு ஆண்டுகளாக அரசியில் அமைப்புச் சட்டம் , சிவில் வழக்குகள் , திருமண சார்ந்த வழக்குகள் போன்றவற்றில் வாதாடி வருபவர் .

 நினைவாற்றலுடன் சரளமாக அழகு தமிழில் பேசுவது , தீர்க்கமான வாதங்களை முன் வைக்கும் போதும் அதில் இழையோடும் நகைச்சுவை ,  ரசனை ,   அலங்காரப் பேச்சுகளாய் இல்லாமல்    முரண்பாடு இல்லாத, சொல்லுக்கும், செயலுக்கும் வித்தியாசம் இல்லாத   மக்களுக்கு புரியும் படி எளிமையான பாணியாக  இருப்பது  இவரது பேச்சுக்களின் சிறப்பம்சம் .

பள்ளி வயதில் இருந்தே பேச்சுப்போட்டிகளில் நூற்றுக்கணக்கான பரிசுகளை பெற்றவர் , தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்றவர் . பாரதிதாசனின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு  உள்ள இவர் இலக்கிய மேடைகளில் தவறாமல் இடம்பெறும் இலக்கிய ஆளுமை .

இவரது பேச்சுக்களின் காணொளிகள் சில :



No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...