Monday, June 5, 2017

ஆதலினால் காதல் செய்வீர் !!! (ஒரு non-காதல் கதை )

                   ஆதலினால் காதல் செய்வீர் !!! (ஒரு non-காதல் கதை )

கலிபோர்னியா  bevarly hills  , 20th century fox  , 24 ஆவது மாடியில் வேலை செய்து கொண்டு  "james cameron " போல பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவில் இருக்கும்போது விதி விளையாடியது .

நான் வேலை செய்த ப்ராஜெக்ட் சீனாவுக்கு போக ,  ஒரே இரவில் corn field  மட்டுமே இருக்கும் iowa  க்கு  மாற்றப்பட்டேன் .  இந்தக் கதை  அங்கு தொடங்குகிறது .

பொது நலன் மற்றும் அதை விட அதிகமாக " சேவல் பண்ணை " கையில் மாட்டினால் என்ன ஆகும் என்ற சுயநலமும்  கருதி அனைத்து பெயர்களும் தவிர்க்கப்பட்டுள்ளன. 

iowaaaaa 2009 to  2010 காலகட்டம் :  ஒரு வால்மார்ட் , ஒரு இந்தியன் ரெஸ்டாரண்ட் , ஒரு இந்தியன் grocery  , ஒரு mall , கணக்கில்லாத corn feild .இதுதாங்க அயோவா.

 தமிழ் படம் பார்க்க வேண்டும் என்றால்  அயோவா க்கு மிக அருகில் 317 மைல் தள்ளி இருக்கும் சிகாகோ விற்குத்தான் போக வேண்டும் .

அந்த ஊரில் ஒரே ஒரு கம்பெனி xxxxxxx  .  அதில்  தேவை இல்லாத அனைத்து ஆணிகளையும்  எடுக்கும் மகத்தான பணியில் xxx Limited and xxxxx  Limited ஈடுபட்டிருந்தன .

இரண்டு  நிறுவனங்களுக்கும் சேர்த்து 15 பேர் வேலை (?)செய்தோம் . அனைவருமே ஆண்கள் .  அங்கே இருந்தவர்களில் வயது அதிகமான வாலிபன் நான்தான் .

வருடத்திற்கு  நான்கு மாதங்கள் மட்டும் நிறைய வேலை இருக்கும் . எட்டு மாதங்கள் வெட்டி officers தான்.நாங்களே  எங்களுக்கு வைத்த பெயர்  "சேவல் பண்ணை ".(இதில் இருந்தே தெரிந்திருக்கும் எவ்வளவு வெட்டியாக இருந்து இருக்கிறோம் என்று ).

9 to 5 வேலை , மதியம் நீண்ட நடைப்பயிற்சி , மாலை முழுவதும் tennis கோர்ட். வாரம் ஒரு  முறை சபை கூட்டப்பட்டு உலக சமாதானத்துக்கு தேவையான அனைத்து யோசனைகளும் விடிய விடிய பகிரப்படும் . விடிந்தபின் என்ன பேசினோம் என்று எங்களுக்கே மறந்துவிடும் என்பதால் மறுபடியும் அடுத்த வாரம் இது தொடரும் .

இப்படியாக போய் கொண்டிருந்த வாழ்க்கையில் xxx Limited இல் ஒரு பெண் வந்து சேர்ந்தாள்.

Smurfette வந்த smurf village போல ஆனது அயோவா. 

 திடீரென்று சேவல் பண்ணையில் இருந்த முக்கால் வாசி பேருக்கு காதல் வந்தது .நான் உடனடியாக அலெர்ட் ஆனேன். முடிந்தவரை அந்த பெண் இருக்கும் பக்கமே போக கூடாதென்று .  நம்ம நேரம் ஏதாவது பேசும் போது "அண்ணா " என்று கூப்பிட்டால் கூட பரவாயில்லை ." uncle "  என்று சொல்லிவிட்டால்??? ஒரு சரித்திர அவமானம் நடந்து விடக்கூடாது  அல்லவா?

Day1 : 

          XXX அணி  ரூம் : அனைவரும் சாமியார் என்று நினைத்து கொண்டிருந்த MR A  , ரூமில் உள்ள அனைவரும் தூங்கி விட்டார்கள்  என்ற நினைப்பில்  அன்றைய தினம் SUNTV யில் வெளியான நித்தியானந்தா ரஞ்சிதா பக்திப் படத்தைப் பார்க்க :

       காதல் வெள்ளம் மனதில் ஓடியதால் தூங்காமல் இருந்தவர்கள் வெளியே வந்து MR A வை பார்க்க விழுந்தது முதல் விக்கெட் .
        
  XXXXX அணி ரூம் : இங்கும்  காதல் ஆசை கட்டுக்கடங்காமல் போய் MR B சேவல் பண்ணை அனைவருக்கும் சமையல் செய்கிறேன் என்று தக்காளி சாப்பாடு செய்தான்.

என்ன நினைத்து செய்தானோ சாப்பிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும்   வயிறு twist ஆகி  அனைத்து விக்கட்களும் பாத்ரூமில் விழுந்தன .

  Day 2 :

காதலில் விழுந்த  சேவல்கள் அனைவரும்  அந்த பெண்ணுடன் பேசுவதற்க்கான வாய்ப்பை உருவாக்க தீவிரமாக முயற்சி செய்ததின் விளைவாக  டென்னிஸ் தனியாக விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டேன் .
 தமிழ் பசங்களாச்சே !!! ஒருவனின் idea வில் இன்னொருவர் புகுந்து விளையாட  ஒருவரும் உருப்படியாக எதுவும் பண்ண முடியவில்லை .
வெறுத்துப்போனவர்கள் சண்டை போட tennis court க்கு வந்தார்கள் .  


Day 3 :

   நிலவரம் கலவரமாகி   ரணகளம் ஆனது tennis court . 

    XXX அணி :  இங்க பாருங்கடா எங்க கம்பெனி பெண் எங்களுக்குத்தான் 

 xxxxx அணி : சேவல் பண்ணை இப்படியே இருக்கணும்னுதான் நாங்க எந்த  பெண்ணையும் எடுக்கிறதில்லை தெரியுமா துரோகிகளா !! ( உண்மை எனக்குத்தான் தெரியும் )

சில பல சமாதானங்கள் , 5 பாக்கெட் malbaro , கணக்கில்லாத beer bottle களுக்குப்பிறகு ஒரு வழியாக சேவல்  பண்ணை சேர்ந்தது.

நான் ரேஸில் இல்லாத காரணத்தினால் ஒரு  நல்ல தீர்வை (?)சொன்னேன் .அனைவருமே ஒரு நிலையில் இல்லை என்பதால் ஒரு எதிர்ப்பும் வரவில்லை .

என்ன வேண்டுமேனாலும்  ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளாமல் 
செய்யுங்கள் . ஆனால் என்ன நடக்கிறது என்று என்னிடம் சொல்ல வேண்டும் ( வேறு வேலை இல்லை பாஸ் !!)  அப்புறம் success  , Failiure எது நடந்தாலும் treat வைக்க வேண்டும் (அதுதானே முக்கியம் ).

அதற்கப்புறம் ஒவ்வருவரும் செய்த பைத்தியக்காரத்தனங்களை  எழுதினால் ஒரு புத்தகமே  எழுத வேண்டும் . 700 வார்த்தைகள்தான் என்பதால் edit  செய்யப் படுகிறது ..


  3 மாதங்களுக்குப் பிறகு   

  சினிமாவில் வருமாறு எந்த திருப்பமும்  நிகழவில்லை  . வழக்கம் போல அந்தப் பெண் கல்யாணப் பத்திரிகை தந்து பக்கத்து மாநிலமான சிகாகோவில் பணிபுரியும்  "project manager ஐ " திருமணம் செய்து கொண்டு போய் விட  , இரண்டு பாட்டில் johny walker உடன் சபையை கூட்டி  ஆரம்பித்தேன் .அப்புறம் என்ன ஆச்சு மச்சான்ஸ் ??? 
               
                 ஆதலினால் காதல் செய்வீர் !!!( சேவல் பண்ணையில் இருக்கும் எங்களுக்கெல்லாம்  பின் எப்படி பொழுது போவதாம்? ) 

                                                                                                                       -பாவி 
                                                                                                                                            http://paavib.blogspot.com

No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...