Wednesday, April 8, 2020

இனமான பேராசிரியர்


9  முறை சட்டமன்ற உறுப்பினர் , 1  முறை சட்ட மேலவை உறுப்பினர் , 1  முறை நாடாளுமன்ற உறுப்பினர் , 42  ஆண்டுகளாக தி.மு.  பொதுச்செயலாளர் ,  இனமான பேராசிரியர்  .



1933 ம் ஆண்டு கும்பகோணத்தில் மகாமக எதிர்ப்புப் பரப்புரை சிங்கை கோவிந்தராஜன் தலைமையில் நடந்தபோது, சிறுவனாகப் பங்கேற்றதில் தொடங்கியது அவரது முதல் அரசியல் செயல்பாடு, 1943 ம் ஆண்டு சிதம்பரத்தில் நடந்த நீதிக் கட்சியின் போர் ஆதரவு மாநாட்டில் பெரியாருடன் சேர்ந்து சொற்பொழிவாற்றினார். 1949 செப்டம்பர் 19: திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கவிழா கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். கழகத்தின் தொடக்கம் முதல் தன் வாழ்வின் இறுதிவரை திமுக வில் இருந்தவர்.

பெரியார் , அண்ணா ,  கலைஞர்  மூவருடனும் பயணம் செய்த இவர் ,  அண்ணாவாலும் , கலைஞராலும் பேராசிரியர் என்றே அழைக்கப்பட்டவர் , கலைஞர் ஒருமுறை கூட்டத்தினருக்கு  இவரை இப்படி குறிப்பிட்டார் ,  "நாங்கள் பேசுவதில் உங்களுக்கான தகவல்கள் இருக்கும் , பேராசிரியர் பேசுவதில் எங்களுக்கான தகவல்கள் இருக்கும் ", ஆம் இவர் திராவிட பேராசிரியர்களின் 
  பேராசிரியர்.


அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை ,பகைவனும் இல்லை என்னும் தொடரை பொய்யாக்கி ,, தன் நண்பர் கலைஞரை தலைவராக ஏற்று ,  50  ஆண்டுகாலத்திற்கும் மேல்  தொடர்ந்த இவர்கள் நட்பின் இணைந்த கைகளில் கட்டி எழுப்பப்பட்டது திராவிடத்தின் வரலாறு .

பேராசிரியர்  அன்பழகன்  திராவிட இயக்க வரலாற்றில் தவிர்க்க  முடியாத பெயர் , "ஒரு புயற்பொழுதில் கலைஞரும் நீயும் இரு கரங்களாக காத்திராவிட்டால் திராவிட தீபம் அணைந்து போயிருக்கும்"  என்ற  கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின்  புகழாரம் ஒரு சான்று .


இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு 1964ம் ஆண்டில் 6 மாதம் சிறைத்தண்டனை பெற்றார். ஈழத் தமிழர்களுக்காக 1983 இல் தனது சட்டமன்ற பதவியை முத்தமிழறிஞர் கலைஞரோடு சேர்ந்து துறந்தவர். இந்தி திணிப்பை எதிர்த்து  சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்குபெற்று தன் பதவியை இழந்தவர்.

இனம் வாழ , அறிவும்  சிந்தனையும் , திராவிடத்தின் குரல் , இனமொழி  உணர்ச்சியும் கவிதை எழுச்சியும் , The  Dravidian Movement , வகுப்புரிமை போர் , ஜாதி முறை , தமிழர் திருமணமும் இனமானமும் ,என 41  புத்தகங்களை எழுதியுள்ளார் .

தமிழர் திருமணமும், இனமானமும்' என்ற பெயரிலான புத்தகம் அதில் முக்கியமானது. அவர் எழுதிய அந்த புத்தகத்திலிருந்துதான், சுயமரியாதை திருமணங்களின் நடைமுறைகள் அப்போதைய இளம் தலைமுறையினரால் அறிந்து கொள்ளப்பட்டன.

தன்னைப் பற்றி பேராசிரியர் கூறியது , முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞரின் தோழன்.


“என்னைப் பொருத்தவரை கொள்கையில் மாறுபாடு வரும்போது துணிவாகப் பேசுவேன். வேறுபாடுதான் என்றால் முக்கியத்துவம் தர மாட்டேன். எப்போதும் தனி நபர்களை விட இயக்கம் முக்கியம். இயக்கத்தை விட கொள்கை முக்கியம்”.  தான் மிகவும் மதித்த சுயமரியாதை  இயக்கத்தின் கொள்கைகளை , எந்த நேரத்திலும் , எந்த இடத்திலும் , பதவியில் இருந்தபோதும் , இல்லாதபோதும் தொடர்ந்து பேசியவர் பேராசிரியர்


இவர் ஜாதி பற்றுகளை எதிர்த்தார் , தன்னை முன்னிறுத்தாமல் தன் கொள்கையை முன்னிறுத்தினார், இனப் பற்றினை போற்றி , பல்வேறு இன்னல்களிலும் இறுதி வரை கொள்கையில் உறுதியாக நின்றார் , ஆதலால் தான் இவர் திராவிடத்தின் இனமான பேராசிரியர்.


No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...