Wednesday, April 8, 2020

தலையங்கம் ஏப்ரல் 2020 மாத The Common Sense இதழுக்காக எழுதியது


பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்அமெரிக்கா அமைப்பின் “The Common Sense” மாத  இதழின் வாசகர்களுக்கு அன்பு வணக்கம். அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியாரின் கருத்துக்களை அமெரிக்கா வாழ்  தமிழர்களிடம்  தொடங்கப்பட்ட   இந்த அமைப்புக்கும், அமைப்பின் சார்பாக வெளிவரும் இந்த மாத இதழுக்கும் நீங்கள் தொடர்ந்து  அளித்து வரும் அன்பிற்கும், ஆதரவுக்கும்  நன்றி

அண்ணல் அம்பேத்கரின் 129  வது பிறந்தநாள் ,
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம், வெற்றியோ தோல்வியோ எதுவரினும்  தொடர்ந்து கடமையை செய்வோம் , யார் பாராட்டினாலும் , பாராட்டாவிட்டாலும் கவலை இல்லை என்ற அண்ணலின் மொழிகளுக்கேற்ப தொடர்ந்து செயலாற்றும் .


மனித  குலத்திற்கு  மாபெரும் அச்சுறுத்தலாக தொடர்ந்து பரவி வருகிறது கொரோனா. இது பரவ ஆரம்பித்தவுடன் மதங்கள் தத்தம்  கடைகளை மூடிவிட ,  மருத்துவர்களே  இரவு பகல் பாராது பணியாற்றி மக்களை காப்பாற்றி  வருகிறார்கள். தனது உயிரை பணயம் வைத்து கடமையாற்றும் மருத்துமனைகளின் அனைத்து  கடைநிலை ஊழியர்களுக்கும் , செவிலியர்களுக்கும் ,மருத்துவர்களுக்கும் எங்களது நெஞ்சான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் .

இந்தியாவில் மதம் இந்த நேரத்திலும் வெறுப்புணர்வை தொடர்ந்து விதைக்கிறது . கொரோனா நோய் தான்  எதிரியே தவிர , நோயாளிகளோ அவர் சார்ந்திருக்கும் மதமோ நம் எதிரி இல்லை , ஒன்றுபடவேண்டிய நேரம் இது.

உலகம் முழுவதும் இதனை எதிர்கொண்டு போராட , கைதட்டியும் , விளக்கு வைத்தும் கொரோனவை  விரட்ட   விசித்திர  முயற்சிகளை நடுவண் அரசு மக்களை செய்யச்சொல்கிறது.
உடலால் தனித்திருந்து , மனதால் ஒன்றுபட்டு துணிவுடன் எதிர்கொள்வதே  பயன் அளிக்கும் என்ற விழிப்புணர்வே நமக்கு இன்று தேவை .


பெரியாரும் அண்ணலும் வகுத்துக்கொடுத்த பாதையில் நேர்மையாகவும் , வெளிப்படையாகவும் , தன்னாட்சியுடனும் தொடர்ந்து  செயற்பட தங்களின் மேலான ஆதரவையும் ஊக்கத்தையும் 
வழங்கிடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் . தங்கள் படைப்புகள் , கருத்துக்கள் , விமர்சனங்கள் , விளம்பரங்களை 'thecommonsense.pasc@gmail.comமின்னஞ்சல் வாயிலாக பகிர்ந்துகொண்டால் மேலும் ஊக்கம் பெறுவோம் .


  
                                    வாழ்க தந்தை ! வாழ்க அண்ணல் !

                                      வளர்க பகுத்தறிவு ! செழிக்க மனிதநேயம் !

                                                                   நன்றி

                                                                ஆசிரியர் குழு


No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...