Thursday, February 7, 2019

காதல் கற்பனைகள் -1

பதினெட்டு வருடங்களுக்கு முன் எழுதிய கவிதைகள் சில இன்று கண்ணில் பட்டது . 12 ம் வகுப்பு விடுமுறையில் , கவிதை எழுதி பழகி கொண்டிருக்கும் பொழுது எழுதியவை . முதன் முதலில் கவிதை எழுதும் ஒருவனுக்கு காதலை தவிர வேறு என்ன எழுத தோன்றும் ? எழுதியது அனைத்தும் காதல் கவிதைகளே . ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்ததால் அனைத்தும் வெறும் கற்பனையே . நமது வாழ்வில் தான் காதல் என்ற அசம்பாவிதம் நடக்கவே இல்லையே . காதலர் தினம் அருகில் வருவதால் சரியாக இருக்கும் என மறுபடியும் , கந்தலாகி போன காகிதங்களில் இருந்து . 


இதய வானின் 
உடைய நிலாவே 
நிதமும் சந்திக்கிறோம் 
பேசிப் பிரிக்கிறோம் 
காதலை சொல்லாமலே ! 

இயல்பாக காட்டிக் 
கொண்டாலும் 
நீ எனது 
உடலின் ஒரு 
பகுதியாய் 
மாறிப் போனதை 
அறிவாயா ? 

அருகில் வரும்போதும் 
விகல்பமின்றி தொடும்போதும் 
சிறப்புகளை பாராட்டும்போதும் 
தவறுகளை கூறும்போதும் 
செல்லமாக அடிக்கும்போதும் 
என்னவாயிற்று 
அமைதியாய் இருக்கிறாய் 
என்கிறாய் ? 

எப்படி சொல்வது 
நினைவுச் சூழலால் 
தடுமாறி 
நிற்கிறேன் 
என்பதை ? 

என்ன வாங்கினாலும் 
பிடித்திருக்கிறதா 
என் என்னை 
கேட்டு வாங்குகிறாய்? 

எனக்கு பிடித்த 
உன்னை நான் 
வாங்குவது 
எங்கனம் ! 

உடைகள் விஷயத்தில் 
தினமும் 
எனது கருத்தை 
கேட்கும் நீ 
உடமையாக்கிக் கொள்ள 
ஒத்துக்கொள்வாயா ? 

காதலுக்கும் நட்புக்கும் 
ஒரு நூல் 
அளவே 
இடைவெளி 
நான் தாண்டிவிட்டேன் 
நீ ?? 

-பாவி

No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...