Tuesday, December 4, 2018

10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - ஆய்வுக்குழு தலைவர் திரு பிரான்சிஸ் சவரிமுத்து அய்யா அவர்களுடன் கலந்துரையாடல் !!!

  பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு  - 2019  ஜூலை மாதம் சிகாகோவில்  நடக்க உள்ளது .  அதில் பங்குபெறப்போகும்  ஆராய்ச்சி கட்டுரைகளை தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைவராக உள்ளவர் திரு பிரான்சிஸ் சவரிமுத்து அய்யா , 

இந்த ஆராய்ச்சி மாநாட்டினை பற்றி  தெரிந்து கொள்வதற்க்காக  சிறப்பு நிகழ்ச்சியை
 அமெரிக்கா தமிழ் வானொலி ஏற்பாடு செய்திருந்தது .  இந்த நிகழ்ச்சியில் நெறியாளராக , அய்யா பிரான்சிஸ் சவரிமுத்து அவர்களுடன் உரையாடினேன்.

மிக அற்புதமான மனிதர். இவர்தான் அமெரிக்காவில் முதல் தமிழ் சங்கமான சிகாகோ தமிழ் சங்கத்தை தோற்றுவித்தவர்களுள் ஒருவர்  . இது தமிழகத்துக்கு மட்டும் இல்லாமல் தென்னிந்தியருக்கான முதல் சங்கமாகவும் இருந்துள்ளது .

நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் , அய்யா அவர்களுடன் மணிக்கணக்கில் உரையாடும் பெரும் வாய்ப்புக் கிடைத்தது .

 மத நிகழ்ச்சிகளையோ , பண்டிகைகளையோ கொண்டாடக்  கூடாது  என்று  சங்கத்தை தோற்றிவித்தபோது ஒரு சட்டமாக வைத்திருந்ததாக கூறினார் .

இப்போது  அமெரிக்காவில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் எவ்வளவு தூரம்  , முதல் தமிழ் சங்க சட்டத்திலிருந்து  விலகி வந்துள்ளன என்பதனை நினைத்தால் வேடிக்கையாக உள்ளது  ( பெரும்பானம்மையான தமிழ் சங்கங்களில்  தீபாவளித்தானே மிக முக்கிய விழாவாக உள்ளது ?   )  - இது எனது கருத்து மட்டும்தான் , அய்யா அவர்களுடன் இதனை நான் விவாதிக்கவில்லை .

எண்பது  அகவைகளை தாண்டிய பின்னும் , திருக்குறளையும் , கிரேக்க மற்றும் பிற நாடுகளில் உள்ள தத்துவங்களையும் ஒப்பிட்டு ஒரு ஆராய்ச்சி நூலை இவர் எழுதிக் கொண்டிருக்கிறார் .  திருக்குறளை பற்றி பேசும் போது அதன் பெருமையை எண்ணி எண்ணி தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது என்று குரல் தழுதழுக்க  கூறினார் . 

நம்மிடையே   இப்படியும் தமிழுக்காக வாழ்பவர்கள் இருக்கிறார்கள் .

 இந்நிகழ்ச்சியின் கேள்வி பதில்கள் americantamilradio  தளத்தின் archive  பக்கத்தில் உள்ளது , தமிழ் ஆராய்ச்சி மாநாடு பற்றியும் , அய்யா அவர்களின் விரிவான  பதில்களையும்  நீங்கள் இங்கே கேட்கலாம் .

ATR Francis Savarimuthu on International Association of Tamil Research 2019 - இந்த தலைப்பில் youtube ழும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது .

                                                                                              -பாவி
 https://www.youtube.com/watch?v=NF3pwRRVLPw

No comments:

Post a Comment

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...