என் அருமை மகள் அவள் அம்மாவின் மூலமும் , கார்ட்டூன்களின் மூலமும் எண்களை கற்றுக் கொண்டிருக்கிறாள்.
ஆனால் கேள்வி கேட்டு முழிக்க வைப்பது மட்டும் என்னிடம் . அறிவாளி என்று நினைத்து கேட்கிறாளோ இல்லை எப்படியும் தெரிய போவதில்லை கேட்டு வைப்போம் என்று கேட்கிறாளோ தெரியவில்லை .
நங்கள் சென்ற கடையில் நிறைய lane கலில் எண்கள் இடம் பெற்று இருந்தன . அதனை பார்த்துக் கொண்டிருந்த மகளை நானும் சேர்ந்து பார்க்காமல் என்ன கண்ணு பார்க்கிறாய் என்று கேட்டுவிட்டேன் , அமைதியாக இருந்திருக்கலாம் .
அப்பா 1 , 2, 3 , 9 வரைக்கும் ஒரு நம்பர் போட்டிருக்குது , ஏன் 10 , 11 ரெண்டு நம்பர் போட்டிருக்குது ?
கொஞ்சம் எளிமையான கேள்வி என்று நினைத்து சொன்னேன் , தங்கம் இது ஒரு digit number 0 to 9 , 10 , 11 , two digit number . என்று சொல்லி காலரை தூக்கி வீட்டுக் கொண்டேன் (பதில் சொல்லி விட்டோம் என்ற பெருமையில் ) . கேள்வியே அதற்கு அப்புறம் தான் என்று தெரியாமல் .
இல்லைப்பா , 1 to 9 ஒரு தடவை தான் சொல்லுறோம் , டென் , elevenum ஒரு தடவை தான் சொல்லுறோம் , அப்புறம் நம்பர் மட்டும் ஏன் ரெண்டு போடுறோம் சொல்லுப்பா .
அப்போது இருந்து இப்போ வரை முழித்துக் கொண்டிருக்கிறேன் . இது எல்லாம் ஏன் எனக்கு இவ்வளவு வருடமாக தோன்றவில்லை ? இதற்கு என்ன பதில் சொல்வது ?
தெரியவில்லை என்று ஒப்புக்கொண்டு அடுத்த கேள்விக்கு காத்திருந்தேன் . அப்பா சாக்லேட் சாப்பிடலாம் வா என்று அழைத்தாள் அருமை மகள் . இதற்கு மட்டும் தான் நீ பிரயோஜனம் என்று சொல்லுகிறாளா இல்லை நிஜமாலுமே கூப்பிடுகிறாளா என்று தெரியவில்லை ,ஆனால் சாக்லேட் நன்றாக இருந்தது .

குழந்தைகள் கேள்வி கேட்டால் அதற்கு நம்ம மூளையை உபயோகிக்க கூடாது கூகுலைத்தான் உபயோகிக்கனும் இது கூட தெரியாத அந்த காலத்து ஆளா இருக்கிறேங்களே
ReplyDelete