Sunday, June 5, 2011

கரோலினாவில் ஒரு கார்காலம் -(The 10th anniversary trip by CIT CTans )

CIT கோயம்புத்தூர் , வருடம் 2001 :



பாரதிராஜா படத்தில் வரும் தேவதைகள் லா லா பாட , காதில் மணியோசை ஒலிக்க, அங்கு

இருந்த பல்ப்புகள் எல்லாம் பிரகாசமாய் எரிய,



நிற்க ! இது ஒரு காதல் கதை இல்லை அதையும் தாண்டி புனிதமானது .



யார் செய்த பாவமோ தெரியவில்லை அந்த வருடம் "BSC CT batch " - படித்த(சென்ற ? ) எங்களுள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நட்பு உருவாக ஆரம்பித்தது .



தொடர்ந்து செல்லும் முன் இரண்டு முக்கியமான சொற்களை அறிய வேண்டியது அவசியம்



பொங்கல் - வெட்டியாக அமர்ந்து ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பையன்கள் அல்லது பெண்கள் மட்டும் பேசுவது அதாவது கடலைக்கு எதிர்பதம் .

வாக்-துரு - பொங்கல் போட்டபடி தெருத் தெருவாக சுற்றுவது



USA Iowa to Chicago interstate I-80 East வருடம் 2011 :

வைத்த அரியர்சுகளும், அனைவரது காமெடி காதல்களும் , அழகுசுந்தரி மேடமும் , கடலைகளும் , பொங்கல்களும் , வாக்-துருக்களும் , ஒரு புற்றைக் கட்டிக்கொண்டு நான் தனியாகவே திரிந்து கொண்டிருந்ததும் , CT கடைசி தினத்தில் ஜெகநாத நகர் மூழ்கும் வண்ணம் குமறிக் குமறி அழுததும் நினைவு வர சிகாகோ நோக்கி சென்றுகொண்டிருந்தேன்



எங்களின் பத்தாவது வருட நட்பை outernbanks - North Carolina வில் கொண்டாடுவதற்காக .



எங்களுக்குள் விதித்துக்கொண்ட முக்கிய கட்டுப்பாடு , இந்த பயணத்தில் பெண்களைப் பற்றி பேசக்கூடாது .



அதனால்தானோ என்னமோ ஆரம்பமே நல்லபடியாக இருந்தது - சிகாகோ மிட்வே விமான நிலையத்தில் இருந்து நானும் ஜெகாவும் அபிக்கு கூப்பிட்டோம்



மாமா "tell me the good news "

its a good news abi, we miss the flight

F*** you mama that's not the good news

ya i guess its not



நாங்கள் போட்ட அனைத்து திட்டங்களும் தவிடு பொடியாக முதல் நாள் அனைவரும் ( குட்டி, அனுப் - நியூயார்க் , பிரதீப்(என்னுடைய "நன்பேண்டா !") , கேட்டி - பாஸ்டன் , நான் , ஜெகா - சிகாகோ , யொவா ,அபி - ரிச்மன்ட்) outerbanks போய் சேர மட்டும்தான் முடிந்தது .



வெகு நேரம் ஆகி விட்டதால் பொங்கலை போடலாம் என்று முடிவு செய்தோம் . நாங்கள் "environment set-up " செய்ய வழக்கம் போல கேட்டி சமைக்க ஆரம்பித்தான் , கூடவே குட்டியும் .



பொங்கல் பெண்களை பற்றி பேசக்கூடாது என்பதால் ,அரசியல் , பொருளாதாரம் , தேர்தல் ,பின்லேடன் , தமிழ் வழிக்கல்வி என சுற்றி சுற்றி வந்தது



environment set-up கொஞ்சம் அதிகம் ஆனதின் விளைவு



இந்திய அரசியல் அடிப்படையை மாற்றக்கூடிய யோசனை ஒன்றை சொல்ல முற்பட்ட கேட்டி "நான் என்ன சொல்றேனா" என்று ஆரம்பிக்க



இவ்வளவு பெரிய மாற்றத்தை தாங்க முடியாத ஜெகா தூங்க அரம்பித்தான்



அனுப் திடிரென்று திருக்குறள் சொல்ல ஆரம்பித்தான் , அது தவறு என்று நாங்கள் சொல்ல தமிழுக்கும் , திருக்குறளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்ற குண்டை தூக்கிப் போட்டான் .நல்ல வேளை திருவள்ளுவர் அருகில் இல்லை ..



அபி எதை பற்றியும் கண்டு கொள்ளாமல் சிக்கன் சாப்பிட ஆரம்பித்தான் .



என்ன செய்வது என்று தெரியாத நாங்கள் environment செட் செய்ய ஆரம்பித்தோம் .



ஒரு பத்து தடவை "நான் என்ன சொல்றேனா" என்று சொன்ன கேட்டி பின் அவனும் environment செட் செய்தான் .



இரண்டாம் நாள் :



வெளியே சென்ற நாங்கள் கடலை பார்த்ததும் மனசு பாதிக்க அருகில் உட்கார்ந்து விட்டோம் . இதில் என்னடா மனசு பாதித்தது என்று பிரதீப் கேட்க " நண்பர்களுடன் வெட்டியாக உட்கார்ந்து கடலை பார்ப்பதை விட என்ன மனசை பாதிக்க முடியும் என்று பதில் சொல்ல அவன் காறித்துப்பிய சத்தம் அலை ஓசை தாண்டியும் கேட்டது



குட்டியும் நானும் வாக்-துரு போட , மனசை அதிகம் பாதிக்க விட்டதின் விளைவு ocracoke தீவுக்கு செல்கையில் அங்கே எங்களை தவிர எதுவும் இல்லை .



சரி பொங்கலை போடலாம் என்று நாங்கள் முடிவெடுக்க , பிரதீப் பரிதாபமாக சொன்னான் டேய் வந்ததில் இருந்து நீங்கள் அதைத்தான் செய்கிறீர்கள்



மூன்றாம் நாள்:



விமானம் கண்டுபிடித்த ரைட் சகோதர்கள் நினைவிடத்துக்கு சென்றோம் . அவர்கள் பற்றிய படத்தை பார்த்து வெளியே வந்ததும் மனசு கடுமையாக பாதித்ததால்



ஜெகாவும் , அபியும் "இனி நாம் கண்டுபிடிப்பதற்கு ஒன்றும் இல்லை என்று வருத்தப்பட ஆரம்பித்தார்கள் "



அனுப்" ம் , கேட்டியும் படம் பார்த்ததில் களைப்புற்று கண்ணீரோடு நடக்க ஆரம்பித்தார்கள் .



குட்டிதான் ஓடி ஓடி இரு சகோதர்களின் சிலைகளுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டான் ( அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் கல்யாணம் செய்து கொண்டிருப்பான் போல)



அதற்கு பிறகு உருப்படியான ஒரே விசயமாக "parasailing " செய்தோம் .



கடைசி நாள் :



"work from home" என்று சொல்லிக் கொண்டிருந்த நால்வர் கீழ்க்கண்டவற்றை செய்ய ஆரம்பித்தார்கள்



அலாரம் வைத்து எழுந்த பிரதீப் , லேப்டாப்பை மிகவும் பயபக்தியுடன் திறந்து "As i am suffering from fever " என்று மெயில் அனுப்ப ஆரம்பித்தான் .

அனுப் இந்தியாவில் இருந்து அழைப்பு வந்ததும் மிகப்பயங்கிற இருமலுக்கிடையில் சிவாஜி தோற்கும் வண்ணம் பேச அரம்பித்தான்

இதனைப் பார்த்து கொண்டிருந்த அபிக்கு திடீரென்று பல் வலி வந்தது , அனைவரும் அசரும் வண்ணம் கைபேசியில் பல்வலி என்று உயரதிகாரியிடம் சைகை

மொழியில்(?) விளக்க அரம்பித்தான் .



இத்தனை நடந்தும் கேட்டி மனக்கட்டுப்பாடுடன் வேலை செய்ய அரம்பித்தான் ,



ஜெகா நிறைய யோசித்து , டீ போடுகிறேன் என்று சொல்லி காபி போட்டு கொடுத்தான் .



ஜெகாவின் காபியில் உற்சாகமான அனுப் , குட்டி இருவரும் நீ SPB ,நான் யேசுதாஸ் என்று சொல்லி மாறி மாறி பாட ஆரம்பித்தார்கள் (இரண்டு வரிகளுக்கு மேல் எந்தப் பாட்டும் தெரியாத போதும் .)



எனக்கு தெளிவாக ஒன்று புரிந்தது , இந்த நாளும் வெட்டியாகத்தான் கழியப் போகிறது



மாலை , நிறைய பிரியாவிடைகளுடன் மாற்றி மாற்றி கட்டிபிடித்துக்கொண்டு (பிரிய மனசே இல்லை மச்சான் , இன்னொரு நாள் லீவ் போடுவோமா? ) அவரவர் ஊருக்கு விமானம் பிடித்தோம் .



இருந்ததும் மனதில் திருப்தி இல்லை .



திடீரென்று ஜெகா அரம்பித்தான்



மாமா " still she is hot among us "



யாருடா ?



மாமா தெரியுமா ,உன்னை மாதிரி அவளும் புத்தகங்கள் நிறைய படிப்பாள்



விடு ஜெகா என்ன இருந்தாலும் அவள்தான் எனக்கு ஆங்கில புத்தகங்களை அறிமுகப்படுத்தினாள்



ஆமாம் மாமா அவள் "attitude " அங்க இருக்கு என்று மேல கைகாட்டினான் .



விமானம் முழுதும் தேடிப் பார்த்தும் எனக்கு அவள் "attitude " தெரியவில்லை , இருப்பினும் அதுவரை இல்லாத ஒரு திருப்தி .



எத்தனை வருடங்கள் அனாலும் , எத்தனை ஆயிரம் முறை சந்தித்தாலும் , கல்லூரி நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் , அவர்கள் வகுப்பு பெண்களைப் பற்றி பேசாமல் இருந்தால் கருட புராணத்தின் படி தண்டிக்கப்படுவார்கள் என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லியிருகிறார்கள் ?



- பாவி

Wednesday, May 25, 2011

கீர்த்தனா என்னும் ஆந்திர மிளகாய் !

பெங்களூர் - fridge ல் வைத்த ஆப்பிள் போல எப்பொழுதும் பெண்கள் புதுசாக இருக்கும் ஊர் . அதுவும் ஜோதி நிவாஸ் காலேஜ் அருகில் சென்று விட்டால் கால நேரம் தெரியாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் . இனி காலேஜ் பக்கம் போனால் ப்ரொஜெக்டில் இருந்து நீக்கி விடுவேன் என்று அன்பு கட்டளை மேலதிகாரியிடம் இருந்து வந்த காரணத்தினால் வாழ்கை வறட்சியாக போய்கொண்டிருந்த கால கட்டம் .

அப்பொழுது ஜோதி நிவாசில் உள்ள அத்தனை அழகான பெண்களும் ஒரு உருவில் வந்தார்கள் புதிதாக சேர்ந்த பெண்ணின் வடிவில் . பெயர் கீர்த்தனா , பேரை சொல்லும் போதே ஒரு இசை கேட்கிறது அல்லவா? எனக்கு ஒரு இசை கச்சேரியே கேட்டது .

ஆந்திரா, உலகுக்கு தந்த தேவதை . ஆந்திரா பருப்பு சாதத்துக்கும் , கோங்கிறா சட்டினிக்கும் , பெண்களின் அழகுக்கும் எதோ சம்மந்தம் இருக்கிறது என்ற மிகப்பெரிய உண்மையை என்னை கண்டுபிடிக்கச் செய்து , என்னையும் ஒரு விஞ்ஞானி ஆக்கினாள்.

என் மேனேஜர் வாழ்கையில் செய்த ஒரே நல்ல காரியம் , அவளுக்கு பயிற்சி கொடுக்கும் படி என்னைப் பணித்தது . விளைவு ,எனக்கு அரைகுறையாக தெரிந்த வேலையும் சேர்த்து மறந்து போனது .

வானத்தில் உள்ள தேவதைகள் எல்லாம் கூட்டு முயற்சியாக என்னை சபித்த பொன்னாளில் கீழ்க்கண்டவை நடந்தது

கீர்த் , கீஈர்த் , கீஏஏஏஏஎர்த் கோபமாய் திரும்பி பார்த்தாள் , "வாட் யு வான்ட் ? "

அது தமிழ் அவள் அரைகுறையாக கற்றுகொண்டிருந்த சமயம், புரியாது என்ற தைரியத்தில் "நீதான் வேண்டுமென்றேன் ".

சற்றும் எதிர்பார்க்காத பதில் வந்தது "வென் யு வான்ட் ? "

அருகில் இருந்த தமிழ் தெரிந்த என் சக பணியாளர்கள் , உற்சாக கூச்சலில் கைதட்டி ,நடந்ததை படம் வரைந்து பாகம் குறித்து அவளுக்கு விளக்க ஆரம்பித்தார்கள் .

தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நேரம் இருக்கும் கைதியின் மனநிலையில் நான் பரிதாபமாக நின்று கொண்டிருந்தேன் .

கோபமும் , வெட்கமும் , போட்டிபோட அவர்கள் சொன்னதை கவனித்தவள் , குறுநகையுடன் அருகே வந்து காதோரம் கிசுகிசுப்பாய் கேட்டாள் "வென் யு வான்ட் ? "

மெலிதாய் தொடங்கிய கீர்த்தனா என்னும் இசை உடல் , மனம் முழுவதும் வியாபித்து பரவ ஆரம்பித்தது .

ஆந்திராவின் நிலப்பகுதியும் , மகேஷ் பாபுவும் , இலியானாவும் நெருங்கிய சொந்தம் ஆகிப்போனார்கள் . தெலுங்கனா பிரச்சனைக்காக சோறு தண்ணி இல்லாமல் கவலைப்பட ஆரம்பித்தேன் .

தமிழ் பேசும் போது கூட அநியாயமாக ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் ஒரு "லு " சேர்த்துக்கொண்டேன் .

கவிதை போலத்தான் வாழ்கை போய்க்கொண்டிருந்தது

யாரும் அற்ற தனிமையில் , மிகவும் அந்தரங்கமான நிலையில் காதலுடன் , நான் கீர்த் என்று அழைக்கையில் என்ன "ஜனா" என்று அவள் கேட்கும் வரை .

பின் குறிப்பு : "ஜனா என் பெயர் அல்ல "

- பாவி

Tuesday, May 3, 2011

முத்தழகு

Los Angeles - 20 th century fox தலைமையகம் , எந்நேரமும் portfolio வைத்துக்கொண்டு நடிக்க ஆசைப்படும் தேவதைகள் நிரம்பிய இடம் , அதில் எனது பிரிவில், ஒரு பனிச்சிற்பம் அலுவலகம் வந்து போகும் . அப்பா வைத்த பெயர் நுழையாததால் நாம வைத்த பெயர் "முத்தழகு " . ரத்த நிற கூந்தல் ,பால் நிறம் , சிறிய முகம் , முகத்தில் குழந்தை , உடம்பில் குமரி . அவளை தூரத்தில் இருந்து முன்னால் பார்க்கும் போது , காளை மாட்டின் திமில் ,ஏவுகணைகளை தாங்கி செல்லும் விமானம் , , பின்னால் பார்க்கும் போது Mickel angelo வின் உலகத்தை பற்றிய கண்டுபிடிப்பு , , என எண்ணங்கள் கலந்து கட்டி கூத்தாடும் .

வெள்ளிகிழமை ,ஓர் சுபமுகூர்த்த வேளை, முத்தழகு அலுவலகம் வந்தாள் , அவள் உடையை பார்த்ததும் பேச்சு என்ன மூச்சு கூட வரவில்லை. அடிக்கடி அவளை பார்த்ததில் , அலுவலகம் முழுவதும் என்னை பார்க்க ஆரம்பித்துவிட்டது , நன்றாக மாட்டிக்கொள்வோம் என்ற பயம் வந்ததால் கவனம் திசைதிருப்ப , விகடன் ஆன்லைனில் படிக்க ஆரம்பித்து விட்டேன் , விதி யாரை விட்டது . "is that Tamil ?I used to have Tamil roommate in masters " முத்தழகு மொத்த அழகையும் காட்டும் உடையில் அருகில் நின்று கேட்டாள். LA மறந்து ,US மறந்து , என்னை நானே மறக்கும் வகையில் தாறுமாறாக மனம் கிராபிக்ஸ் பண்ணியதில் , அவள் சிவப்பு ,வெள்ளை - பாவாடை தாவணியில் , தலை நிறைய மல்லிகை பூ வைத்து கொண்டு மாமான்னு கூப்பிட ...... (சத்தியமாக என்ன சொன்னேன் என்று தெரியவில்லை , அனால் , அவள் என்னை ஒரு பூச்சியை பார்ப்பது போல பார்த்துவிட்டு சென்றாள் ) , முகம் தெரியாத அந்த roommate இன் மேல் கூட காதல் வந்ததது .

டூரிங் டாக்கீஸ்
படத்தையெல்லாம்
மன்னு குவிச்சு பார்த்திருக்கேன்
எங்கனயும் கண்டதில்லை
உன்னமாரி பேரழகை !

பார்த்ததுமே பத்திக்கிச்சு
கண்ணு ரெண்டும் சொக்கிடிச்சு
பாஷை மட்டும் புரியலையே
எங்க போய் முட்டிக்குவேன் !

முழியை உருட்டி உருட்டி
என்னமோ கேக்குற நீயும்
என்னகன்னு சொல்லுறது
எனக்கு தமிழே
தகராறு !
நம்ம ஆங்கிலம்
பேசினா அதுதான்
வரலாறு !

என் குலசாமிகிட்ட
தூது போக வேண்டிகிட்டேன்
திரும்பிவந்து நின்னாரு
நீ பேசறது புரியலைன்னு !
என்சாமி என்ன செய்யும்
வெள்ளைகாரியை
இப்பதாம் அவரும்
பாக்கிறாராம்!

வானத்து தேவர்களா
ஊர்வசி ரம்பை
உமக்கு மட்டும்
போதுமா ?
புண்ணியமா போகட்டும்
தமிழகொஞ்சம் சொல்லிகொடுங்க
பாதகத்தி முத்தழகுக்கு !

காக்கா வட
கத சொல்லியாவது
காதலிப்பேன் அவளை
நானும் !
- பாவி

Monday, January 3, 2011

காதல் தருணங்கள் - 4

அவள் சேலத்து மாம்பழம் ! பெயரை கேட்டாலே போதை தலைக்கேறும் ! சுருக்கமாக அவைக்குறிப்பில் வராத வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் "திருக்குறள் ரெண்டு அடில நச்னு இருக்கும் , அவள் நாலு அடில சும்மா கும்முன்னு இருப்பா" . அது பெங்களூரில் ஒரு மழைக்காலம் ,மாலை நான்கு மணி . ஒரு வாக் போகலாம் வருகிறாயா ? - கைபேசியில் அவள் அழைப்பு ,வெள்ளை நிற "sleeveless" சுடிதாரில் , பிங்க் வண்ண சால் அணிந்து நின்றாள். நடப்பதற்கு நாங்கள் தேர்ந்தெடுத்த பாதை EC phase 2 இருமங்கிலும் மரங்கள் அடர்ந்த வழி .

பாதி வழியில் மழை பிடித்துக்கொண்டது , கொடுத்து வைத்த மழை துளிகள் , நனைந்த அவளை பார்க்க கூடாது என ரொம்பவும் முயன்று கொண்டிருக்கையில் ,கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு கேள்வியை கேட்டாள் , "என் சுடிதார் கொஞ்சம் transperant , மழையில் வேற நினைந்து விட்டது , எதவாது தெரிகிறதா ? " எனக் கேட்டாள். கேட்டதும் தான் தவறு புரிந்தது போலும் . என் பார்வை மாறிய போக்கைக்கண்டு நாவை கடித்துக்கொண்டு , முகம் குங்கும சிவப்பாய் மாற, நீ ஒன்றும் பார்க்க வேண்டாம் என்றாள். கண்கள் முழுவதும் வெக்கம் ,உடலை மறைக்க முற்பட்ட கைகள் , முகத்தில் படர்ந்த ஈரக் கூந்தல் , கழுத்தில் ,உதட்டில் ,தோள்களில் மழைத்துளிகள் , உடலோடு ஒட்டிய உடை , மழையை எட்டிப்பார்க்க குதித்து எழுந்த .........., அதில் இருந்த மச்சங்கள்.வேண்டாம் தோழர், விரிவாக போக வேண்டாம் .

மனதில் நிரந்திரமாக பதிந்துவிட்ட. நனைந்து கொண்டே எரிந்த அந்த நொடி , நான்கு வருடங்கள் கழித்து வார்த்தைகளாக !!!!! நான்கு நான்கு அடிகளாக , அவளை நினைவுபடுத்தும் வண்ணம் .வெண்பா எனச் சொன்னால் தமிழ் ஆர்வலர்கள் கழுவேற்றி விடுவார்கள் ,இலக்கிணப் பிழை கண்டிப்பாக இருக்கும் . கவனம் கொண்டுவந்தால் திருத்திக் கொள்கிறேன் !




நிற்காமல் எனதெண்ணம் தப்பாமல் உனைசுற்றும்
கற்கண்டு செவ்விதழோ சொற்கொண்டு எனைக்கொல்லும்
சினம்கொண்டு செல்வதனால் பயனில்லை -சுந்தரியே
தடையற்று சேர்வதுதாம் தீர்வு!

காத்திருக்கும் காலமெல்லாம் மனம் தீக்குளிக்கும்
சேர்த்தணைத்து வேட்கைத் தீ தணிக்க
சிற்றிடைக் காமுகியே காக்க - வைக்காமல்
எனை வந்து சேர் !



எழில்கள் விழிச்சுழல்கள் தளிர் - மேனிதனில்
பருவம் வளர்த்த பூக்கள் பலகொண்ட
அவளுடல் காமத்தின் காடு! - நானோ
நினைவில் காடுள்ள மிருகம் !

உன்னில் பருவம்வைத்து என்னில் ஆசைவைத்து
மனதா? உடம்பா? எனக்கேட்டால் -என்செய்வேன்
ஐம்புலனை அடகுவைத்து சிந்தனையில் தீயும்வைத்து
கனியிருக்க காய்கவரும் காமம்!

-பாவி

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...