மாயம் செய்தாள்!
மயக்கம் தந்தாள்!
கனவுகள் கொடுத்தாள்!
ஓர்
காவியம் நிகழ்த்தினாள்!
கண்களில் பேசினாள்!
கவிதையாய் வந்தாள்!
உணர்வினை கொதிக்கச்
செய்து
உயிரினை வதைத்தாள்!
வானவில்லாய் புருவம்
வளைத்து!
கன்னங்கள் வர்ணஜாலம்
காட்ட!
கிள்ளை மொழி
பேசினாள்!
அதில்
காலங்களை மறக்கடித்தாள்!
கோபப் பார்வையினில்!
தெவிட்டாத அன்பினில்!
ரோஜா இதழ்களில்!
சிறு சிறு ஊடலில்!
செல்ல அணைப்பினில்!
கள்ளச் சிரிப்பினில்!
சூரியனும் சந்திரனும்!
கடல்களும் மலைகளும்!
வயல்வெளிகளும்!
பள்ளத்தாக்குகளும்!
பாலைவனங்களும்!
பனி பிரதேசங்களும்!
உருவாக்கி காட்டினாள்!
அவள் மட்டும்
கொண்ட எனக்கான
உலகம் படைத்தாள்!
அனைத்தும் செய்துவிட்டு
விலகி நின்று
தலை சாய்த்து
அப்பாவியாய் கேட்டாள்!
காதல்னா என்னடா ?
-- பாவி
Saturday, May 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger
சார்லி மங்கர் 99 வயதான இவர் Berkshire Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் . 383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...
-
ரசமின்றி அமையாது இவ்வுலகு ! சிற்றின்ப வாழ்க்கையில் பேரின்பம் காண மிளகு , தக்காளி , பருப்பு , பூண்டு , புளி என வகைகொண்டு சித்தர...
-
பறை தமிழர்களின் ஆதி இசை . அனைத்து காலங்களிலும் இது மக்களுக்கான இசையாக மட்டுமே இருந்துள்ளது . திணை வாரியாக தமிழர் வாழ்ந்த சங்க கா...
-
முத்தமிட்டும் விலகிச்சென்றும் இடைவிடாது பறக்கும் விமானங்களில் பயணிகள் முத்தமிட்டும் விலகிச்சென்றும் ...
No comments:
Post a Comment